இரீயூனியனில் இந்து சமயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இரீயூனியனில் இந்துக்கள் அத்தீவின் மக்கள் தொகையில் ஒரு சிறிய வீதத்தினர் ஆவர். ரீயூனியன் தீவில் ஏறத்தாழ 250,000 இந்திய வம்சாவழியினர் (1991 ஆம் ஆண்டில்) வாழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது. [1] ஆனாலும், பெரும்பாலான இந்தியர்கள் தம்மை கத்தோலிக்க, முசுலிம் அல்லது இந்துக்கள் என அடையாளப்படுத்துவதால், இங்குள்ள இந்துக்களின் துல்லியமான எண்ணிக்கை அறியப்படவில்லை.

வரலாறு[தொகு]

ரீயூனியனில் இந்து சமயத்தின் வரலாறு 19ம் நூற்றாண்டின் நடுப்பகுதி, மற்றும் இறுதிப் பகுதிகளில் ஆரம்பிக்கின்றது. ஆரம்ப கால இந்தியக் குடியேற்றக்காரர்கள், அரசு நிருவாகத்தினரின் அல்லது அவர்களின் பணி அமர்த்துனர்களின் கட்டளைக்கிணங்க தமக்குக் கிறித்தவப் பெயர்களைச் சூட்டிக் கொண்டனர். பிள்ளைகள் கத்தோலிக்க திருச்சபையில் திருமுழுக்குப் பெற்றுக் கொண்டனர்.[1] ஆனாலும், அவர்களில் பெரும்பாலானோர் தமது இந்துக் கலாசாரம், மற்றும் பண்பாட்டை இழக்காமல் பேணி வருகின்றனர்.

குசராத்தில் இருந்து வந்த முசுலிம்களைத் தவிர ஏனைய இந்தியர்கள் அனைவரும் கத்தோலிக்கர்களாக கட்டாயமாக காலத்துக்குக் காலம் மதமாற்றம் செய்யப்பட்டார்கள்.[2] பெரும்பாலானோர் ஒப்பந்தக் கூலிக் காலத்திலேயே இவ்வாறு மதமாற்றம் செய்யப்பட்டார்கள்.[1]

இன்று இந்து சமயம்[தொகு]

அண்மைக் காலத்தில் ரீயூனியன் தமிழர்கள் இந்து சமயப் பண்பாட்டை வளர்க்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதைக் காண முடிகிறது.[1] பெருமளவு இந்துக் கோவில்களும், ஆசிரமங்களும் அங்கு புதிதாகக் கட்டப்பட்டுள்ளன. சில இந்தியர்கள் இந்து, மற்றும் கத்தோலிக்க மதக் கோட்பாடுகள் இரண்டையும் ஒரே நேரத்தில் அனுட்டித்து வருகின்றனர். இவர்கள் "சமூகத்தில் கத்தோலிக்கர்களாகவும், தனிப்பட்ட முறையில் இந்துக்களாகவும்" வாழ்கிறார்கள்.[2]

பிரெஞ்சு அரசு சமயம் வாரியாக மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்துவதில்லை ஆகையால் மக்கள்தொகையில் இந்துக்களின் எண்ணிக்கை துல்லியமாக அறிய முடியாது. ஆனாலும், 6.7% வீதத்தினர் இந்துக்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.[3]

இந்துக் கோவில்கள்[தொகு]

ரீயூனியன் தீவில் உள்ள இந்துக் கோயில்களின் படங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 இமாலயன் அக்காதெமி (நவ. 1991). "Reunion Hindus Try For a Revival". Hinduism Today. http://www.hinduismtoday.com/modules/smartsection/item.php?itemid=871. பார்த்த நாள்: 2007-03-21. 
  2. 2.0 2.1 Singhvi, L. M; R. L. Bhatia, J. R. Hiremath, Baleshwar Agarwal(18 ஆகத்து 2000). "Réunion". High Level Committee on Indian Diaspora, Chapter 6, Non Resident Indians and Persons of Indian Origin Division, வெளிவிவகாரத் துறை அமைச்சர் (இந்தியா).
  3. Religious Intelligence profile on Réunion

இவற்றையும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]