இந்து சமயப் பிரிவுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
AswnBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:23, 27 மார்ச்சு 2017 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கிஇணைப்பு category இந்து சமய அமைப்புகள்)

பொதுவாக இந்து சமயம் எனப்படும் தொன்று தொட்டு வரும் சமயத்தில் உள்ள பற்பல பிரிவுகள் உண்டு. ஆதி சங்கரர் கி.பி 8 ஆம் நூற்றாண்டில் தொகுத்தவையாகக் கொள்ளப்படும் ஆறு உட்பிரிவுகள் சிவன், திருமால், சக்தி, சூரியன், கணபதி, முருகன் ஆகிய ஆறு கடவுளர்களை அவ்வவ் பிரிவிற்குத் தலையாய முழுமுதற் கடவுளாகக் கொண்டவை. ஸ்மார்த்தம் என்பது ஆறு கடவுளரையும் வணங்கும் பிரிவு. இவை அனைத்தும் வடமொழி மரபு வழியான பிரிவுகள். தமிழ் மரபிலும், பிற இந்தியப் பழங்குடிகளின் மரபிலும் பற்பல வேறுபாடுகள் உண்டு. தமிழ் மரபில், இந்தியப் பழங்குடிகள் மரபில் உள்ள இறைக்கொள்கைகள் ஆய்வாளர்களிடையேயும் பொதுமக்களிடையேயும் பரவலாக அறியப்படாமல் உள்ளன.[மேற்கோள் தேவை].

குறிப்பு: மேலுள்ளவற்றில் முதல் ஆறு பிரிவுகளையும் உள்ளடக்கியது ஸ்மார்த்தம்.

இந்த பிரிவுகளில் இருக்கும் ஒற்றுமைகள் அல்லது வேற்றுமைகள் கீழுள்ள கருத்துக்களில் பார்க்கலாம்:

இறைவன் அவதாரமாக மண்ணில் பிறப்பது பற்றி

  • சைவம்: இறைவன் மண்ணில் மானிட அவதாரமாக பிறந்ததில்லை.[1]
  • சாக்தம்: சக்தி மண்ணில் அவதரித்திருக்கிறார்.
  • வைணவம்: திருமாலின் பத்து (அல்லது அதற்கு மேற்பட்ட) அவதாரங்களைச் சொல்லலாம்.
  • ஸ்மார்த்தம்: எல்லா இறைகளும் மண்ணில் அவதாரம் எடுக்கலாம்.

ஜீவனும், பரமனும் பற்றி

  • சைவம்: முக்தி அடைந்தபின் ஜீவனும் பரமனும் இரண்டல்ல. இந்த உண்மையை சிவனின் அருளினால் உணரலாம். சைவத்தின் உட்பிரிவுகளில் இக்கருத்தில் ஒரு சில வேறுபாடுகள் உண்டு.
  • சாக்தம்: சக்தியை வழிபடுவதால் அத்வைத மோக்ஷம் அடையலாம்.
  • வைணவம்: ஜீவனும் பரமனும் என்றென்றென்றும் ஒன்றாகாது. திருமாலின் அருளால் ஜீவன் அடைய வேண்டியது இறை பக்தியும், இறை இன்பமும் தான்.
  • ஸ்மார்த்தம்: ஜீவன் மாயையினால் தன் சச்சிதானந்த நிலையினை உணராமல் இருக்கலாம். ஞானம் இந்த மாயை எனும் திரை தனை விலக்க வல்லது.

பயிற்சிகள்

  • சைவம்: பக்தி எனும் அடித்தளத்தில் நின்றவாறு, த்யானம், தவம் போன்ற சாதனைகளை செய்வது.
  • சாக்தம்: பக்தியோடு சேர்ந்து மந்திர தந்திர பயிற்சிகள்.
  • வைணவம்: அதீத பக்தியில், தன்னை முழுதுமாய் இறைவனிடம் அர்பணித்தல்.
  • ஸ்மார்தம்: ஞான யோகமே முதன்மையான வழி. பக்தி யோகம், கர்ம யோகம், ராஜ யோகம் - இவையும் உயர் ஞானத்தினுக்கான வழிகள்.

மறைகள்

  • சாக்தம்: வேதங்கள், சக்தி ஆகமங்கள் (தந்திரங்கள்), புராணங்கள்.
  • ஸ்மார்தம்: வேதங்கள், ஸ்மிர்த்தி, புராணங்கள், இதிகாசங்கள்.

பரவியுள்ள பகுதிகள்

  • வைணவம்: பல பகுதிகளிலும்; தென் இந்தியா மற்றும் வட இந்தியா.
  • ஸ்மார்தம்: பல பகுதிகளிலும்; தென் இந்தியா மற்றும் வட இந்தியா.

மேற்கோள்கள்

  1. சைவம்.ஆர்க் - சிவனுக்கு அவதாரம் உண்டா?

இவற்றையும் பார்க்கவும்


"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்து_சமயப்_பிரிவுகள்&oldid=2226403" இலிருந்து மீள்விக்கப்பட்டது