உள்ளடக்கத்துக்குச் செல்

பேரியம் சல்பைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேரியம் சல்பைடு
இனங்காட்டிகள்
21109-95-5 Y
ChEBI CHEBI:32590 Y
ChemSpider 5256933 Y
EC number 244-214-4
InChI
  • InChI=1S/Ba.S/q+2;-2 Y
    Key: CJDPJFRMHVXWPT-UHFFFAOYSA-N Y
  • InChI=1/Ba.S/q+2;-2
    Key: CJDPJFRMHVXWPT-UHFFFAOYAO
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 6857597
  • [Ba+2].[S-2]
பண்புகள்
BaS
வாய்ப்பாட்டு எடை 169.39 கிராம்/மோல்
அடர்த்தி 4.25 கிராம்/செ.மீ3 [1]
உருகுநிலை 1,200 °C (2,190 °F; 1,470 K)
கொதிநிலை சிதைவடையும்
2.88 கிராம்/100 மி.லி (0 °செல்சியசில்)
7.68 கிராம்/100 மி.லி (20 °செல்சியசில்)
60.3 கிராம்/100 மி.லி (100 °செல்சியசில்)
கரைதிறன் ஆல்ககாலில் கரையாது
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 2.155
கட்டமைப்பு
படிக அமைப்பு ஆலைட்டு (கனசதுரம்), cF8
புறவெளித் தொகுதி Fm3m, No. 225
ஒருங்கிணைவு
வடிவியல்
எண்முகம் (Ba2+); எண்முகம் (S2−)
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு தீங்கானது (Xn)
சுற்றுச்சூழலுக்கு அபாயமானது (N)
R-சொற்றொடர்கள் R20/22, R31, R50
S-சொற்றொடர்கள் (S2), S28, S61
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் பேரியம் ஆக்சைடு
ஏனைய நேர் மின்அயனிகள் மக்னீசியம் சல்பைடு
கால்சியம் சல்பைடு
இசுட்ரோன்சியம் சல்பைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

பேரியம் சல்பைடு (Barium sulphide) என்பது BaS என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பேரியம் கார்பனேட்டு உள்ளிட்ட பிற பேரியம் சேர்மங்களை தயாரிக்க உதவும் ஒரு முக்கியமான முன்னோடிச் சேர்மமாக பேரியம் சல்பைடு கருதப்படுகிறது. இலித்தோபோன் (ZnS/BaSO4) என்ற பல சேர்மங்கள் கலந்த ஒரு நிறமியைத் தயாரிக்கவும் BaS பயன்படுகிறது[2]. மற்ற சால்கோகெனைடுகள் போல பேரியம் சல்பைடும் மின்னணு காட்சியமைப்பில் குறைந்த அலைநீள உமிழ்வியாகச் செயல்படுகிறது. பேரியம் சல்பைடு நிறமற்றதாக இருப்பினும், பொதுவாக தூய்மையற்ற நிலையில் பல வண்ணங்களில் கிடைக்கிறது.

தயாரிப்பு

[தொகு]

பேரைட் என்னும் கனிம வடிவில் காணப்படும் BaSO4 சேர்மத்தை ஒடுக்க வினைக்கு உட்படுத்தி வின்செண்டியசு காசுகியாரோலசு (1571-1624) பேரியம் சல்பைடைத் தயாரித்தார் [3]. தற்காலத்தில் காசுகியாரோலசு செயல்முறையை மேம்படுத்தி மாவுக்குப் பதிலாக கற்கரியை உபயோகித்து தயாரிக்கின்றனர். இவ்வகை வினையை உயர்வெப்பக் கார்பன் வினை என்று அழைக்கின்றனர்.

BaSO4 + 2 C → BaS + 2 CO2

காசுகியாரோலசு தயாரித்த நின்றொளிரும் போலோக்னா கல் எனப்படும் இப்பொருள் பல வேதியலர்கள் மற்றும் இரசவாதிகளின் கவனத்தை ஈர்த்தது. இப்பொருளின் மீது அவர்கள் பல சோதனைகளை மேற்கொண்டனர். [4][5][6] கால்சைட்டும் கிப்சமும் போலோக்னோ கல் உற்பத்திக்கு பொருத்தமானவையல்ல என்றும், ஆனால் ஒரு தனிச்சிறப்புக் கனிமமான புளோர்சுபார் உற்பத்திக்கு பொருத்தமானவையாக இருக்கும் என்றும் ஆண்டிரியசு சிகிசுமண்ட் மார்கிராப் தெரிவித்தார். இறுதியில் போலோக்னோ கல்லில் இருந்து உற்பத்தியானது கால்சியம் சல்பேட்டு என்ற முடிவுக்கு வந்தார் [7].

போலோக்னோ நகருக்கு அருகிலுள்ள பேரியம் சல்பேட்டு படிவுகளிலிருந்து தயாரிக்கப்படும் பேரியம் சல்பைடில் இயற்கையாகக் காணப்படும் தாமிர மாசுக்கள் நின்றொளிர்தலுக்கு காரணமாக இருக்கலாம் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன [8]

பேரியம் சல்பைடு சேர்மம் சோடியம் குளோரைடு கட்டமைப்பில் படிகமாகிறது. எண்முக Ba2+ மற்றும் S2− மையங்கள் இக்கட்டமைப்பில் இடம்பெற்றுள்ளன.

பாதுகாப்பு

[தொகு]

CaS போன்ற தொடர்புடைய மற்ற சல்பைடுகள் போலவே பேரியம் சல்பைடும் நச்சுத்தன்மை மிக்கதாகும். தண்ணீருடன் வினைபுரிய நேரிட்டால் நச்சுத்தன்மையுள்ள வாயுவான ஐதரசன் சல்பைடை வெளியிடுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Lide, David R., ed. (2006). CRC Handbook of Chemistry and Physics (87th ed.). Boca Raton, FL: CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0487-3.
  2. Holleman, A. F.; Wiberg, E. "Inorganic Chemistry" Academic Press: San Diego, 2001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-352651-5.
  3. F. Licetus, Litheosphorus, sive de lapide Bononiensi lucem in se conceptam ab ambiente claro mox in tenebris mire conservante, Utini, ex typ. N. Schiratti, 1640. See http://www.chem.leeds.ac.uk/delights/texts/Demonstration_21.htm பரணிடப்பட்டது 2011-08-13 at the வந்தவழி இயந்திரம்
  4. "Lapis Boloniensis". www.zeno.org.
  5. Lemery, Nicolas (1714). Trait℗e universel des drogues simples.
  6. Ozanam, Jacques; Montucla, Jean Etienne; Hutton, Charles (1814). Recreations in mathematics and natural philosophy .
  7. Marggraf, Andreas Sigismund (1767). Chymische Schriften.
  8. Lastusaari, Mika; Laamanen, Taneli; Malkamäki, Marja; Eskola, Kari O.; Kotlov, Aleksei; Carlson, Stefan; Welter, Edmund; Brito, Hermi F. et al. (2012). "The Bologna Stone: history's first persistent luminescent material". European Journal of Mineralogy 24 (5): 885–890. doi:10.1127/0935-1221/2012/0024-2224. பன்னாட்டுத் தர தொடர் எண்:0935-1221. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேரியம்_சல்பைடு&oldid=4154883" இலிருந்து மீள்விக்கப்பட்டது