யூடியூப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(யூட்யூப் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
YouTube, LLC
யூடியூப், எல்.எல்.சி.
வகை கூகிள் துணை நிறுவனம்
நிறுவியது 2005
தலைமையகம் சான் புரூனோ, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
முக்கிய நபர்கள் ஸ்டீவ் சென், CTO
சாட் ஹர்லி, CEO
ஜவேத் கரீம், Advisor
உரிமையாளர் கூகிள்
Slogan Broadcast Yourself
இணையத்தளம் YouTube.com
இணையத்தள வகை நிகழ்படம்
விளம்பரம் கூகிள், ஆட்சென்ஸ்
பதிவு தேவை இல்லை
(பதிவேற்றத்துக்கு தேவை)
மொழி 12 மொழிகள்
தொடக்கம் பெப்ரவரி 15, 2005
தற்போதைய நிலை Active

யூடியூப் (இலங்கை வழக்கம்: யுரியூப்; ஆங்கிலம்: YouTube) கூகிள் நிறுவனத்தின் இணையவழி வழங்கும் இணையத்தளம் ஆகும். இந்த இணையத்தளத்தில் பயனர்களால் நிகழ்படங்களைப் பதிவேற்றமுடியும். அடோப் ஃப்ளாஷ் மென்பொருளை பயன்படுத்தி பயனர்களால் நிகழ்படங்களைப் பார்க்கமுடியும். யூடியூபில் கிட்டத்தட்ட 6.1 மில்லியன் நிகழ்படங்கள் உள்ளன.

பெப்ரவரி 2005இல் தொடங்கப்பட்ட யூடியூபை அக்டோபர் 2006இல் கூகிள் நிறுவனம் வாங்கியது.

வரலாறு[தொகு]

பிப்ரவரி 2005 -ல் பேபால் நிறுவனத்தில் பணிபுரிந்த சாட் ஹர்லி , ஸ்டீவ் சென் , ஜாவேத் கரீம் ஆகிய மூன்று பேர் இணைந்து இந்த இணையதளத்தைத் தொடங்கினர்.சாட் ஹர்லி பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தில் படித்தவர் . ஸ்டீவ் கரீம் மற்றும் ஜாவேத் கரீம் இருவரும் இல்லினோயஸ் பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள். நவம்பர் 2005 ற்கும் எப்ரல் 2006 ற்கும் இடையே 11.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஸீகியோயியா கேபிடல் நிறுவம் இதில் முதலீடு செய்தது.

'மி அட் ஸூ' என்ற காணொளியே இதில் முதலில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளி. ஜாவேத் கரீம் 2005 ஆம் ஆண்டு , ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி இரவு 08:27 ற்கு பதிவேற்றம் செய்தார்.

யூடியூப் நிகழ்படத்தைத் தரவிறக்கம் செய்தல்[தொகு]

இப்போது இணையதளத்தில் உள்ள நிகழ்படங்களைத் தரவிறக்கம் செய்வதற்கு பல மென் பொருட்களை அனைவரும் பாவித்து வருகின்றனர். தரவிறக்கம் செய்ய வேண்டிய நிழற்படத்தின் உரலியில் (www.ssyoutube.com) என்று சேர்ப்பதன் மூலம் தேவையான வடிவ அளவு நிழற்படத்தினை தரவிறக்கிக்கொள்ளலாம். மேலும் இங்கே மேற்கோள்கள் பகுதியில் 3 இணைய தளத்தின் முகவரி இணைக்கப்பட்டுள்ளது[1]. இந்த இணையத் தளத்தினுள் சென்றதும் இங்கே தரவிறக்கம் செய்ய வேண்டிய நிகழ்படத்தின் உரலியை (URL) காப்பி செய்து அங்கு URL என்று கேட்டு இருக்கும் இடத்தில் ஒட்டவும். அதன்பிறகு catch என்பதை அழுத்தவும். அடுத்து எந்த வகை நிகழ்படம் வேண்டுமோ அதைத் தேர்வு செய்து கொள்ளவும். அதன்பிறகு நிகழ்படம் தரவிறக்கம் ஆகிவிடும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1. http://catchvideo.net/ 2.http://www.savevid.com/ 3.http://www.savevideodownload.com/download.php


"https://ta.wikipedia.org/w/index.php?title=யூடியூப்&oldid=1745276" இருந்து மீள்விக்கப்பட்டது