கூகுள் தொலைக்காட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கூகுள் தொலைக்காட்சியின் இலச்சினை

கூகுள் தொலைக்காட்சி (பேச்சு வழக்கில் கூகுள் டி..வி.) என்பது இணைய இணைப்புடன் கூடிய ஒரு தொலைக்காட்சி ஆகும். இத்திட்டம் ஆனது கூகுள் நிறுவனத்தால் நடத்தப்படும் கூகுள் I/O என்ற நிகழ்வில் மே 20, 2010 அன்று அறிவிக்கப்பட்டது. இத்தொலைக்காட்சி ஆனது கூகுள், இன்டெல், லாகிடெக், சோனி ஆகிய நிறுவனத்தாரின் கூட்டு முயற்சியில் உருவானதாகும். இந்தத் தொலைக்காட்சியானது ஆண்ட்ராய்டு இயக்க அமைப்பையும் கூகுள் குரோம் இணைய உலவியையும் கொண்டு "ஒரு புதுவிதத் தொலைக்காட்சி அனுபவத்தைக் கொடுக்கும்".[1] சோனி நிறுவனமும் லாகிடெக் நிறுவனமும் கூகுள் தொலைக்காட்சியை அக்டோபர் 6, 2010 அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டன.[2]

உருவாக்கம்[தொகு]

ஆண்ட்ராய்டு இயக்க அமைப்பைப் பயன்படுத்திக் கூகுள் தொலைக்காட்சித் திட்டம் நடந்து வருவதாக ஊடகங்கள் மார்ச்சு 2010 -இலேயே செய்திகள் வெளியிட்டன. இருந்தபோதிலும் பங்குதாரர்கள் இதனை உறுதிப்படுத்தாமலேயே இருந்தனர்.[3][4][5]

சிறப்புக் கூறுகள்[தொகு]

சோனி இணையத் தொலைக்காட்சி

கூகுள் தொலைக்காட்சியானது கூகுளின் தற்போதைய அனைத்து உற்பத்திப் பொருள்களையும் விடச் சிறந்து விளங்குகிறது. கூகுளின் ஆண்ட்ராய்டு இயக்க அமைப்பானது தொலைக்காட்சியின் அடிப்படையாகும். இது உருவாக்குனர்கள் பலவிதமான பயன்பாடுகளை உருவாக்கவும் அதன்மூலம் தொலைக்காட்சி அமைப்பின் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது. கூகுள் குரோம் இணைய உலவியானது தொலைக்காட்சியிலிருந்தே இணையத்தை அணுகப் பயன்படுகிறது. வாடிக்கையாளர்கள் எச்பிஓ, சிஎன்பிசி போன்ற வழங்குனர்களிடமிருந்து ஆக்கங்களைப் பெறவும் இது உதவுகிறது. மேலும் கூகுள் தொலைக்காட்சியின் பங்குதாரர்கள் தனிச்சிறப்பான வழியில் ஆக்கங்களைப் பெற்றிட பயன்பாடுகளைத் தயாரித்து வருகின்றனர். எடுத்துக்காட்டாக நெட்ஃப்ளிக்சு எனும் பயன்பாடானது வாடிக்கையாளர்கள் நெட்ஃப்ளிக்சு நிறுவனத்தின் காணொளிக் காப்பகத்தை (Video library) அணுகி அதிலிருந்து தேவையான படங்களைப் பார்க்க வழி செய்கிறது. ஆண்ட்ராய்டு கைபேசிகளும் ஆப்பிள் கைபேசிகளும் கூகுள் தொலைக்காட்சிக்குத் தொலையியக்கியாகப் (Remote control) பயன்படுத்தப்படலாம். கூகுள் தொலைக்காட்சியானது கம்பியில்லாத் தொலையியக்கி, முழுமையான ஆங்கில விசைப்பலகையுடன் (QWERTY) சந்தைக்கு வருகிறது.

சாதனங்கள்[தொகு]

 • சோனி இணையத் தொலைக்காட்சி - 24", 32", 40", 46" அளவுகளில்.[6]
 • சோனி இணையத் தொலைக்காட்சி - 24",32",40",46" அளவுகளில். புளூ ரே[7]
 • லாகிடெக் ரெவ்யூ (PN 970-000001)[8]

புளூம்பெர்க்கின் அறிக்கைப்படி தோசிபாவும் விசியோவும் 2011ஆம் ஆண்டின் வாடிக்கையாளர் மின்னணுவியல் கண்காட்சியில் (Consumer Electronics Show) தத்தமது கூகுள் தொலைக்காட்சிக்கான சாதனங்களை வெளியிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.[9]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Industry Leaders Announce Open Platform to Bring Web to TV" (மே 20, 2010). பார்த்த நாள் திசம்பர் 4, 2010.
 2. "கூகுள் தொலைக்காட்சி வருகிறது" (அக்டோபர் 4, 2010). பார்த்த நாள் December 4, 2010.
 3. பில்ட்டன், நிக் (மார்ச்சு 17, 2010). "Google and Partners Seek TV Foothold". த நியூயார்க் டைம்சு. http://www.nytimes.com/2010/03/18/technology/18webtv.html. பார்த்த நாள்: மே 21, 2010. 
 4. "Google TV on the cards in three-way project". த ஸ்பை ரிப்போர்ட் (மீடியா ஸ்பை). மார்ச்சு 20, 2010. http://www.mediaspy.org/report/2010/05/21/google-tv-throws-down-the-gauntlet/. பார்த்த நாள்: மே 21, 2010. 
 5. பௌல்ட்டன், கிளின்ட் (மார்ச்சு 18, 2010). "கூகுள் தொலைக்காட்சி உங்களது தொலைக்காட்சியைப் பெரிய கணினியாக்க வருகிறது". eWeek.com. http://www.eweek.com/c/a/Search-Engines/Google-TV-Coming-to-Make-Your-TV-a-Larger-Computer-815990/. பார்த்த நாள்: மே 21, 2010. 
 6. சோனி எலக்ட்ரானிக்சு, இன்க்.. "NSG-MR1 - மாதிரி முகப்பு". சோனி ஈசப்போர்ட். பார்த்த நாள் 2010-12-18.
 7. சோனி ஈசப்போர்ட் - NSZ-GT1 - மாதிரி முகப்பு
 8. கூகுள் தொலைக்காட்சியுடன் லாகிடெக் ரெவ்யூ
 9. "தோசிபாவும் விசியோவும் கூகுள் தொலைக்காட்சி சாதனங்களை வெளியிடத் திட்டம்". புளூம்பெர்க். http://www.sfgate.com/cgi-bin/article.cgi?f=/g/a/2010/11/24/bloomberg1376-LCCX5R0D9L3501-7HK4ELMJ1JCG8I2ASADV4B4QDL.DTL#. பார்த்த நாள்: திசம்பர் 4, 2010. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கூகுள்_தொலைக்காட்சி&oldid=1358530" இருந்து மீள்விக்கப்பட்டது