உள்ளடக்கத்துக்குச் செல்

ஆண்ட்ராய்டு தொலைக்காட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆண்ட்ராய்டு தொலைக்காட்சி
உருவாக்குனர்கூகுள்
உற்பத்தியாளர்கூகுள்
வகைதிறன் தொலைக்காட்சி
வெளியீட்டு தேதிசூன் 25, 2014 (4 ஆண்டுகளுக்கு முன்)
இயக்க அமைப்புஆண்ட்ராய்டு இயங்குதளம்
Graphics1280 × 720, 1920 × 1080, 2560 × 1440, 3840 × 2160
Online servicesகூகுள் பிளே
Predecessorகூகுள் தொலைக்காட்சி
வலைத்தளம்www.android.com/tv

ஆண்ட்ராய்டு தொலைக்காட்சி (Android TV) என்பது எண்ணிம ஊடக இயக்கிக்காக வடிவமைக்கப்பட்டுள்ள ஆண்ட்ராய்டு இயங்குதளம் ஆகும். கூகுள் தொலைக்காட்சிக்கு மாற்றாக உருவாக்கப்பட்டுள்ள இந்த தொலைக்காட்சியில் குரல் தேடல் மற்றும் பல செயலிகள் மற்றும் சேவைகள் மேலும் கூகுளின் தொழில்நுட்பங்களான கூகுள் அசிஸ்டண்ட், கூகுள் காஸ்ட் மற்றும் நாவ்ளேட்ஜ் கிராஃப் போன்ற வசதிகள் இதில் உள்ளன.

வரலாறு

[தொகு]

இதற்கான முறையான அறிவிப்பு 2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற கூகுள் மேம்பாட்டாளர் மாநாட்டில் வெளியானது. இந்த தொலைக்காட்சியில் நிகழ்பட ஆட்டத்தினை புளூடூத் மூலம் விளையாடும் வகையிலும் கூகுள் பிளே கேம்ஸ் கட்டமைப்பின் மூலம் விளையாடுவதற்கும் முன்னுரிமை அளித்தனர்.[1][2] இந்த மேம்பாட்டாளர் மாநாட்டில் கலந்துகொண்ட சிலருக்கு ADT-1 மற்றும் கருவிப்பெட்டி வழங்கப்பட்டன. தி இன்ஃபர்மேசன் எனும் நிறுவனத்தின் தகவல்படி ADT-1 ஆனது நெக்சஸ் தொலக்காட்சியை அடிப்படையாகக் கொண்டது எனவும் இதனை கூகுள் நிறுவனம் மேம்படுத்தியது எனத் தெரிவித்தது.[3][4]

எய்சஸ் நிறுவனத்தால் மேம்படுத்தப்பட்ட முதல் ஆண்ட்ராய்டு தொலைக்காட்சியானது அக்டோபர் 2014 இல் நடத்தப்பட்ட வன்பொருள் நிகழ்வில் கூகுள் வெளியிட்டது.[5]

சான்றுகள்

[தொகு]
  1. "Google launches Android TV -- and here's what it looks like" (in en). PCWorld. http://www.pcworld.com/article/2367696/google-launches-android-tv-and-heres-what-it-looks-like.html. 
  2. Opam, Kwame (June 25, 2014). "Google officially unveils Android TV". The Verge. Vox Media. பார்க்கப்பட்ட நாள் June 27, 2014.
  3. "The Information: ADT-1 Is Actually A Cancelled 'Nexus TV' Project, Head Of Android@Home Has Left Google". Android Police.
  4. "Here's Google's Android TV developer kit, the ADT-1" (in en-US). Geek.com. 2014-06-26 இம் மூலத்தில் இருந்து 2019-11-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191110001843/https://www.geek.com/android/heres-googles-android-tv-developer-kit-the-adt-1-1597864/. 
  5. "Nexus Player is Google's first Android TV device". The Verge. https://www.theverge.com/2014/10/15/6982375/google-nexus-player-android-tv-set-top-box-announced.