கூகிள் லூனர் எக்சு பரிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கூகிள் லூனர் எக்சு பரிசு என்பது ஒரு விண்வெளிப் போட்டி. இது கூகிளின் ஆதரவுடன் எக்சு பரிசு அறக்கட்டளையால் நடாத்தப்படுகிறது. இந்தப் போட்டி 2007 இல் அறிவிக்கப்பட்டது.

போட்டி விதிமுறைகள்[தொகு]

இந்தப் போட்டியில் அரச சாரா அமைப்புகள் நிலாவுக்கு விண்வெளிம் ஏவி, தரையிறங்கி, நிலாவின் நிலப்பரப்பில் பயணிக்க வேண்டும். அங்கிருந்து பூமிக்கு குறிப்பிட்ட சில நிகழ்ப்படங்களை அனுப்ப வேண்டும். நிலாவில் இறக்கப்படும் தானியங்கி அல்லது மனிதர்கள் குறைந்தது 500 மீட்டர்கள் அங்கு பயணிக்க வேண்டும்.

பரிசுத் தொகை[தொகு]

மேற் குறிப்பிட்ட போல் வெற்றிகரமாக நிலாவில் ஒரு தானியங்கியை இறக்கி, பயணிக்கும் குழுவுக்கு 20 மில்லியன் டொலர்கள் பரிசு. இது தவிர 5 மில்லியன் இரண்டாம் பரிசும் உண்டு. 5 மில்லியன் மேலதிக பரிசுகளையும், சில இலக்குகளை அடைவதன் மூலம் பெறலாம்.