கூகிள் புகைப்படங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Use American English

கூகிள் புகைப்படங்கள்
Google Photos icon (2020).svg
உருவாக்குனர்கூகிள்
தொடக்க வெளியீடுமே 28, 2015; 6 ஆண்டுகள் முன்னர் (2015-05-28)
இயக்கு முறைமைஆண்ட்ராய்டு இயங்குதளம்,ஐஓஎஸ்
உருவாக்க நிலைசெயலில்
மென்பொருள் வகைமைபகிர்தல்

கூகிள் புகைப்படங்கள் (Google Photos) என்பது கூகிள் உருவாக்கிய புகைப்பட பகிர்வு மற்றும் சேமிப்பக சேவை ஆகும். இது 2015 ஆம் ஆண்டு மே மாதம் அறிவிக்கப்பட்டது.

வரலாறு[தொகு]

கூகிள் தன்னுடைய முந்தைய பதிப்பான கூகிள் ப்ளஸ்ஸை விட சிறப்பானதொரு அறிவிப்பாக கூகிள் புகைப்படங்கள் அமைந்தது.அதனை விட வெற்றிகரமாகவும் அமைந்தது.[1] இது முகநூலிற்கு போட்டியாக கருதப்பட்டது ஆனால் இதனால் வெற்றிபெற இயலவில்லை இதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது[2].புகைப்படங்களை பொதுவெளியில் பகிர்வதற்காகவே இது தயாரிக்கப்பட்டது ஆனால் அந்த அளவிற்கு வரவேற்பு இல்லாத போது தனிப்பட்ட முறையில் புகைப்படங்களை பகிர்வதற்கு அனுமதிக்கப்பட்டன.

அம்சங்கள்[தொகு]

கூகிள்படங்களுக்கு இரு வகையான சேமிப்பு அமைப்புகள் உள்ளன: "உயர் தரம்" மற்றும் "அசல் தரம்". உயர் தரத்தில் 16 மெகாபிக்சல்கள் மற்றும் 1080p ரெசல்யூசன் போன்றவற்றை சேமிக்கலாம். அசல் தர புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களின் அசல் தீர்மானம் மற்றும் தரம் ஆகியவற்றைப் பாதுகாக்கிறது.ஆனால் கூகிள் கண்க்கினைப் பொறுத்து இவை மாறுபடும்.

இந்த வசதியானது ஆண்ட்ராய்டு இயங்குதளம்,ஐஓஎஸ் மற்றும் அதன் அதிகாரபூர்வ இணையதளம் போன்றவற்றில் கிடைக்கும்.[1].மேலும் புகைப்படங்களை உள்நினைவகத்தில் சேமித்து எப்பொது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.\

மேம்படுத்தல்கள்[தொகு]

டிசம்பர் 2015 இல், கூகுள் பகிரப்பட்ட புகைப்படங்களை ஆல்பங்களாக உருவாக்கியது. பயனர்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஒரு ஆல்பத்தில் சேர்க்கலாம், மேலும் பிற கூகிள் புகைப்படங்களை பிற பயனர்களுடன் இந்த ஆல்பத்தை பகிர்ந்து கொள்ளவும் இயலும். பெறுநர் அவர்களது சொந்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் சேர்க்கலாம், மேலும் புதிய படங்கள் சேர்க்கப்படும் போது அறிவிப்புகளைப் பெறலாம். பயனர்கள் தங்கள் சொந்த, தனிப்பட்ட தொகுப்பிற்குச் சேர்க்க, பகிரப்பட்ட ஆல்பங்களிலிருந்து படங்களையும் வீடியோக்களையும் சேமிக்கவும் இயலும்.[3][4][5] மார்ச் 2016-ல் புகைப்படங்கள் தானாகவே ஆல்பங்களில் சேர்க்க வழிவகை செய்யப்பட்டது.மேலும் அதில் தட்டச்சு செய்யும் மேம்பாடுகளையும் மேற்கொண்டனர்.[6][7]

வளர்ச்சி[தொகு]

அக்டோபர் 2015,இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்ட ஐந்து மாதத்திற்கு பின் 100 மில்லியன் பயனர்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை 3.72 டெராபைட்டுகள் பதிவேற்றினர்.[8][9][10]

இந்த எண்ணிக்கையானது மே 2017-ல் ஐநூறு மில்லியன் பயனர்கள் 1.2 பில்லியன் உகைப்படங்ள் பதிவேற்றம் செய்துள்ளனர்.[11][12]

இவற்றையும் காண்க[தொகு]

பிகாசா

சான்றுகள்[தொகு]

 1. 1.0 1.1 Kastrenakes, Jacob (May 28, 2015). "Google announces unlimited picture and video storage with new Photos app". Vox Media. மூல முகவரியிலிருந்து June 1, 2015 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் February 6, 2017.
 2. Lowensohn, Josh (May 28, 2015). "Hands-on with Google's new Photos service". Vox Media. பார்த்த நாள் February 4, 2017.
 3. Gallagher, James (December 10, 2015). "Shared memories made easy with Google Photos". கூகிள். பார்த்த நாள் February 6, 2017.
 4. Boehret, Katherine (December 10, 2015). "Google Photos' new shared albums aren’t designed for a social world". Vox Media. பார்த்த நாள் February 6, 2017.
 5. Olanoff, Drew (December 10, 2015). "Google Photos Gets Easy-To-Use Shared Albums". AOL. பார்த்த நாள் February 6, 2017.
 6. Halleux, Francois de (March 22, 2016). "Smarter photo albums, without the work". Google. பார்த்த நாள் February 12, 2017.
 7. Perez, Sarah (March 22, 2016). "Google Photos gets smarter, automatically creates albums with your best photos". AOL. பார்த்த நாள் February 12, 2017.
 8. Perry, Chris (October 20, 2015). "11 things to know about Google Photos". Google. பார்த்த நாள் February 6, 2017.
 9. Thorp-Lancaster, Dan (October 20, 2015). "Google Photos reaches 100 million monthly active users". மூல முகவரியிலிருந்து மார்ச் 10, 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் February 6, 2017.
 10. Bergen, Mark (October 20, 2015). "With 100 Million Monthly Users, Google Is Ready to Talk About Numbers With Google Photos". Vox Media. பார்த்த நாள் February 6, 2017.
 11. Yeung, Ken (May 17, 2017). "Google Photos passes 500 million users". பார்த்த நாள் May 17, 2017.
 12. Matney, Lucas (May 17, 2017). "Google has 2 billion users on Android, 500M on Google Photos". AOL. பார்த்த நாள் May 17, 2017.

வெளிஇணைப்புகள்[தொகு]