ஆர்க்குட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆர்க்குட் அல்லது ஓர்க்குட் (Orkut) கூகிள் நிறுவனத்தின் இணையவழி வழங்கும் சமூக வலையமைப்பு (குமுகவலை) சேவையாகும். இச்சேவை இதனைத் தொடங்கிய கூகிள் ஊழியர் ஆர்க்குட் புயுக்கோக்டன் என்பவருடைய பெயராலேயே ஆர்க்குட் என வழங்குகின்றது. இக் குமுகவலை (சமூக வலையமைப்பு) புதிய நட்புறவை வளர்ப்பதோடு இருக்கின்ற நண்பர்களின் தொடர்பையும் நட்புறவையும் பேணிப் பாதுகாக்கின்றது. ஆர்க்குட் அதனுடய போட்டியான குமுக வலையமைப்புகளைக் காட்டிலும் மிகுந்த உரையாடல் விவாதத்தளங்களுக்கும் வழி வகுத்து தருகின்றது. இக் குமுகவலையின் அழைப்பின் பேரிலேயே இதில் இணையமுடியும்.

வரலாறு[தொகு]

ஆர்க்குட் ஆரவாரம் இன்றி ஜனவரி 22, 2004 இல் கூகிளினால் தொடங்கி வைக்கப்பட்டது. துருக்கி நாட்டு நிரலாக்கரான ஆர்க்குட் புயுக்கோக்டன் மென்பொருள் விருத்தியாளரான தனிப்பட்ட மென்பொருள் கூகிளின் நிர்வாகக் கோட்பாடுகளிற்கமைய விருத்தி செயய்ப்பட்டது.

ஆர்க்குட அழைப்பின் பேரிலேயே இணையமுடியுமென்பதால் குறைவாகவே ஆட்கள் இணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட போதும் ஜூலை 2004 ஆர்குட் 1 மில்லியன் பயனர்களைத் தாண்டியது செப்டம்பர் 2004, 2 மில்லியன் பயனர்களை தாண்டியது.

அண்மைக் காலத்தில் ஆர்கூட்டிற்கு தமிழ் இடைமுகம் வழங்கப் பட்டது. இதன் மூலம் இந்திய தமிழ் பேசும் சந்தையை கூகிள் இந்தியா குறி வைத்துள்ளது.

எனினும் அதற்கு பிறகு, கூகிள் கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் ஆர்குட் கணக்கு வழங்குவது துவங்கப்பட்டது.

அக்டோபர் 11 2006 29,609,324 பயனர்களைக் கொண்டுள்ளது

தர்க்கம்[தொகு]

பிரேசிலில் பிரபலம்[தொகு]

ஆர்குட்டின் புவியியற் பரம்பல்
பிரேசில்
63.64%
அமெரிக்கா
13.81%
இந்தியா
9.56%
பாக்கிஸ்தான்
1.80%
ஈரான்
1.22%
ஐக்கிய இராச்சியம்
0.71%
ஜப்பான்
0.54%
போர்த்துக்கல்
0.46%
கனடா
0.44%
இத்தாலி
0.39%

ஆர்க்குட் சமுதாயம் பிரேசில் பயனர்கள் குறைவடைந்து வருகையில் ஆர்க்குட் சேவையில் பெருவெள்ளமாக வரும் பிரேசில் பயனர்கள் இச்சேவையினைப் பதிந்து வருதலானது நல்லதோர் அறிகுறியல்ல. அக்டோபர் 1, 2006 இன்படி பிரேசில் பாவனையாளர்கள் 63% வீதமும் அமெரிக்கா 13.8% உம் இந்தியா 9.5% வீதமும் ஆகும். அளவுக்கதிகமான பிரேசில் பயனர்களால் இச்சேவையில் அதிருப்தி அடைந்துள்ளனர். இச்சேவையில் முதலாவது மாற்றுமொழியாக போர்த்துகீசிய (பிரேசில்) மொழியேயுள்ளது. சமுதாயத்தை நிர்வாகிக்கும் பலர் பயனர்களை ஆங்கிலத்தில் மாத்திரமே தமது கருத்துக்களைத் தெரிவிக்குமாறு வேண்டியுள்ளனர். வேறுசிலரோ இக்குற்றச்சாட்டுக்களையே கருப்பொருளாகக் கொண்டும் குழுக்களை அமைத்துள்ளனர்.

புள்ளிவிபரங்களின் படி பிரேசிலில் 9% வீதமானவர்கள் இச்சேவையைப் பதிவுசெய்துள்ளனர். இதுவே ஒரு நாட்டில் பதிவுசெய்யப் பட்டவர்க்ளின் மிகக் கூடுதலான வீதம் ஆகும். பிரேசில் செய்தித் தளத்தில் ஆர்க்குட்டின் அண்மைய பேட்டியில் ஆர்க்குட வட அமெரிக்கர்கள் ஏன் இந்த சேவையைப் புறக்கணிக்கின்றனர் என்பது தனக்குத் தெரியாது என்றும் ஆர்குட்டின் முதன்மையான (பிரதான) இலக்கு பிரேசில் நாடாகவே இருக்கும் என்றார்.

வெறுப்பூட்டும் குழுக்கள்[தொகு]

இவற்றில் சில இனவாதம் பற்றியும் நாசிசம் (ஆரியரே உயர்வென்று கூறும்) வெள்ளையர்களே உயர்ந்தவர்கள் என்று கூறும் குழுக்கள் பயனர் அனுமதியை மீறுவதாகக் கூறி அழிக்கபபட்டன. எனினும் இவ்வாறான மனிதப் பண்பற்ற குழுக்களை அடையாளம் காண்பது ஆர்க்குட்டிற்குக் கடினமானதால் இவ்வாறான குழுக்கள் சில இன்னமும் இயங்கி வருகின்றன.

2005 ஆம் ஆண்டில் கறுப்பினத்தவருக்கு எதிராக எழுதிய கருத்துக்களினால் பிரேசில் நாட்டவர் ஒருவர் சிறைத்தண்டனை பெற்றார்.

ஆர்க்குட் பயனர் உரிம ஒப்பந்தம்[தொகு]

ஆர்க்குட்டின் பயனர் ஒப்பந்தம்:

ஆர்க்குட்.காம் இணையத்தளத்தில் வெளியிடப்படுபவையோ அல்லது காட்டப்படுபவையோ உலகளாவிய வகையில் பிரதி பண்ணக் கூடிய (படி எடுக்ககூடிய) அனுமதியை ஏனையவர்களுக்கு வழங்குவதாகும்

ஈரான் தணிக்கை[தொகு]

ஈரான் நாட்டில் மிகப் பரவலமாக (பிரபலமாக) இருந்த ஆர்க்குட் இணையத்தளமானது அந்நாட்டினால் தணிக்கைக்குள்ளாக்கப் பட்டுள்ளது. இதற்கு இது இஸ்லாமியக் கொள்கைகளுக்கெதிராக துணைகள் தேடுதல், டேட்டிங் (Dating) போன்றவற்றில் ஈடுபடுவதாலாகும். இவ்வாறு ஈரான் நாடானது இச்சேவையை இடைநிறுத்தியதும் http://www.orkutproxy.com/ என்னும் ஓர் இணையத்தளம் ஆரம்பிக்கப் பட்டதெனினும் இச்சேவையானது இடைநிறுத்தப் பட்டுள்ளது. Open Proxy server ஊடாக இணையமுடியுமெனினும் இது சாதாரண கணினிப் பாவனையாளரால்(பயன்படுத்துபவரால்) செய்யமுடியாத ஒன்றாகும்.

ஆகஸ்ட் 2006 இல் ஐக்கிய அரபு அமீரகமும் தணிக்கையில் ஈரானுடன் இணைந்து கொண்டது.

முடிவு[தொகு]

ஃபேஸ்புக்கிற்கு முன்னோடியாக திகழ்ந்த ஆர்க்குட் சமூக வளைத்தளமானது யாகூ! நிறுவனத்தின் ஒரு அங்கமாகும். இதனை 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30ஆம் தேதியிலிருந்து மூடிவிடப்போவதாக கூகிள் நிறுவனம் அறிவித்துள்ளது. [1][2]

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்க்குட்&oldid=3768713" இலிருந்து மீள்விக்கப்பட்டது