பனோராமியோ
![]() | |
![]() பனோராமியோ: உலகின் ஒளிப்படங்கள் | |
வலைத்தள வகை | ஒளிப்படங்களை பகிர்தல் |
---|---|
கிடைக்கும் மொழி(கள்) | பன்மொழி |
உரிமையாளர் | கூகிள் |
உருவாக்கியவர் | ஒக்கீம் கியூனிகா அபிலா (Joaquín Cuenca Abela), இணை உருவாக்குனர் எடியுராடோ மஞ்சொன் அக்லியர் (Eduardo Manchón Aguilar]] இணை உருவாக்குனர் ஒசே புளோரிடோ (Jose Florido) பங்காளி |
வணிக நோக்கம் | ஆம் |
பதிவு செய்தல் | இலவசம் |
வெளியீடு | 3 அக்டோபர் 2005 |
தற்போதைய நிலை | இயங்கிவருகிறது |
உரலி | http://www.panoramio.com/ |
பனோராமியோ ஒளிப்படங்களை புவியில் ஒளிப்படம் எடுக்கப்பட்ட இடத்துடன் சேர்த்துப் பகிரும் ஓர் இணையத்தளம் ஆகும். இத்தளத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒளிப்படங்கள் கூகுள் எர்த் (கூகிள் உலகம்), கூகிள் மேப்ஸ் (கூகிள் தேசப்படம்) ஆகிய இடங்களிலும் கிடைக்கும். இத்தளத்தின் நோக்கம் என்னவென்றால் ஓரிடத்தைப் பற்றித் அறிவதற்கு ஏலவே ஒளிப்படப்பிடிப்பாளர்கள் எடுத்த ஒளிப்படங்களைப் பார்வையிடுவன் மூலம் அவ்விடத்தைப் பற்றித் தெளிவான விபரங்களைப் பயனருக்குக் கொடுப்பதாகும். இவ்விணையத்தளம் பன்மொழிகளில் கிடைக்கிறது. இதில் தமிழும் அடங்கும்.
இதன் தலைமை அலுவலகம் சூரிச் இல் உள்ள கூகிள் சுவிஸ் அலுவலகத்தில் உள்ளது.[1]
சரித்திரம்[தொகு]
பனோரமியோ 2005 ஆம் ஆண்டு கோடைகாலப் பருவத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இது அதிகாரப்பூர்வமாக 3 அக்டோபர் 2005 இல் வெளியிடப்பட்டது. 19 மார்ச் 2007 இல் பயனர்களால் மேலேற்றம் செய்யப்பட்ட 1 மில்லியன் ஒளிப்படங்களைத் தாண்டிக் கொண்டது.[2] 3 மாதங்களின் பின்னர் ஜூன் 17, 2007 இல் ஒளிப்படங்களின் எண்ணிக்கை 2 மில்லியனைத் தாண்டியது [3] சுமார் 4 மாதங்களின் பின்னர் ஒளிப்படங்களின் எண்ணிக்கை 5 மில்லியனைத் தாண்டியது.[4]
30 மே 2007 இல் கூகிள் இத்தளத்தை கையகப்படுத்துவதாக அறிவித்தது.[5] ஜூலை 2007 இல் இது கூகிளின் இணையத்தளமாகியது.[6]
இத்தளத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான எடியுராடோ ஜனவரி 2010 இல் தமது புதிய திட்டமான அஸ்காரோவை நடைமுறைப்படுத்த பனோராமியோவில் இருந்து விலகினார். Askaro பரணிடப்பட்டது 2012-01-26 at the வந்தவழி இயந்திரம்.[7] இதனால் ஏற்பட்ட பதவி வெற்றிடத்தை ஜெராட் ஊடாக நிரப்பிக்கொண்டனர்.[8] இன்றளவும் ஜெராட்டே தலைவராகச் செயற்படுகின்றார். இதன் இணை உருவாகுனர்களில் ஒருவரான ஜக்குவினும் இத்திட்டத்தில் இருந்து மே 2010 இல் இருந்து விலகிக் கொண்டார்.[9]
வசதிகள்[தொகு]
ஒழுங்கமைப்பு[தொகு]
பனோராமியோ பயனர் tags என்றழைக்கப்படும் பட்டிகள் மூலம் அந்தப் படத்தைப் பற்றியும் அந்தப் படம் எடுக்கப்பட்ட இடத்தைப் பற்றியுமான விபரங்களைப் பகிர்வதன் மூலம் தேடுபொறிமூலம் படங்களைத் தேடியறிந்து கொள்ள உதவுகின்றது எனினும் தமிழில் தேடுவதில் வழுக்கள் இருக்கின்றன [10]. பனோராமியோத் தளமே நீண்டகாலமாக பட்டி முகில் (Tag Cloud) தத்துவங்களை நடைமுறைப்படுத்தியவர்களில் முக்கிய தளங்களில் ஒன்று.
கூகிள் ஏர்த்திற்கு ஏற்றுகொள்ளுவதற்கான நிபந்தனைகள்[தொகு]
தனியார்கள், வாகனங்கள், சந்தைகள் போன்றவற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் ஒளிப்படங்கள் பொதுவாக பனோராமியாவில் கூகிள் ஏர்த்திற்கோ அல்லது கூகிள் மேப்ஸ் இற்கோ ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.
தொடர்பாடலும் ஒத்திசைவும்[தொகு]
அனுமதிகள்[தொகு]
பனோராமியோ தளத்தில் மேலேற்றம் செய்பவர்களே ஒளிப்படம் தொடர்பான அனுதியைத் தீர்மானிக்கின்றனர். இதில் பங்களிப்பவர்கள் முற்றிலும் தமக்கே பதிப்புரிமையுள்ளதாகவே அல்லது கிரியேட்டிவ் காமன்ஸ் அனுமதி அளிக்கலாம்.
ஏனையவை[தொகு]
பனோராமியோ ஐபோனின் அதிகாரப் பிரயோகம் ஒன்றின் ஊடாகவும் விண்டோஸ் போன் 7 இன் மூன்றாம் தரப்பு மென்பொருள் ஊடாகவும் பனோராமியோப் படங்களைப் பார்வையிடலாம்.[12]
உசாத்துணைகள்[தொகு]
- ↑ "Panoramio.com". 2017-09-06 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-03-20 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Manchón, Eduardo (2007-03-19). "One million geolocated photos at Panoramio". Panoramio's Blog. Panoramio. 2007-03-28 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2007-08-10 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Manchón, Eduardo (2007-06-07). "2 million photos in Panoramio". Panoramio's Blog. Panoramio. 2007-07-01 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2007-08-10 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Manchón, Eduardo (2007-10-25). "1 million registered users and 5 million photos uploaded". Panoramio's Blog. Panoramio. 2007-10-27 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2007-10-28 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Hanke, John (2007-05-30). "A picture's worth a thousand clicks". The Official Google Blog. Google. 2007-08-10 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "The Official Website of Panoramio". 2010-12-06 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2008-06-01 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Manchón, Eduardo (2010-01-20). "New Time". Panoramio's Blog. Panoramio. 2010-01-23 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-01-20 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Manchón, Eduardo (2010-01-20). "Panoramio's Team: Gerard Sanz Viñas". Panoramio's Blog. Panoramio. 2019-04-18 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-01-20 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Cuenca, Joaquín (2010-05-11). "Good Bye Joaquín!". Panoramio's Blog. Panoramio. 2010-05-14 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-05-11 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Umapathy, Regunathan (2011-03-20). "Unable to search Tamil UNICODE tags". Panoramio forum. Umapathy. 2011-03-20 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "GoogleEarth Acceptance Policy Viewer : Selection or deny criteria for google earth". panoramio. 07 August er 2011. 2014-04-16 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-09-07 அன்று பார்க்கப்பட்டது. Italic or bold markup not allowed in:
|publisher=
(உதவி); Check date values in:|date=
(உதவி) - ↑ "Panoramio Viewer : browse Panoramio images on your Windows Phone 7". 1800PocketPC. 21 November 2010. Italic or bold markup not allowed in:
|publisher=
(உதவி)[தொடர்பிழந்த இணைப்பு]
வெளியிணைப்புக்கள்[தொகு]
- பனோராமியோ பயனர் பரணிடப்பட்டது 2013-02-10 at the வந்தவழி இயந்திரம்
- பனோராமியோ பரணிடப்பட்டது 2011-02-24 at the வந்தவழி இயந்திரம் அதிகாரப்பூர்வத் தளம். (ஆங்கில மொழியில்)
- கூகிள் ஏர்த் (ஆங்கில மொழியில்)
- கூகிள் ஏர்த் விக்கிப்பீடியா, பனோராமிய லேயர்களைச் (layers) களைச் சேர்க்கின்றது (ஆங்கில மொழியில்)
- பனோராமியோ மட்டுனர்களுக்கான ஒருங்கமைப்பைபு. எப்ரல் 2010 சூரிச் பரணிடப்பட்டது 2011-02-10 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கில மொழியில்)