உள்ளடக்கத்துக்குச் செல்

கூகுள் வகுப்பறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கூகுள் வகுப்பறை
Google Classroom
உருவாக்குனர்கூகுள்
தொடக்க வெளியீடுஆகத்து 12, 2014; 9 ஆண்டுகள் முன்னர் (2014-08-12)
இயக்கு முறைமை
மென்பொருள் வகைமைகல்வி மென்பொருள்
இணையத்தளம்classroom.google.com

கூகுள் வகுப்பறை (Google Classroom, கூகுள் கிளாஸ்ரூம்) என்பது கல்விக்காகக் கூகுள் உருவாக்கிய இலவசக் கலப்புக் கற்றல் தளமாகும். இது உருவாக்குதல், விநியோகித்தல், ஒப்படைவு வழங்குதல் ஆகியவற்றைச் செய்வதற்குப் பயன்படுகின்றது. கூகுள் வகுப்பறை மாணவர்களையும் ஆசிரியர்களையும் இணைக்கும் பாலமாக அமைவதோடு அவர்கள் தங்களுக்குள் கோப்புகளை அனுப்பவும் பெற்றுக் கொள்ளவும் பகிரவும் துணைசெய்கின்றது.[1] மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே கல்விகற்க இது உதவுகின்றது. 2021 தரவுகளின்படி, ஏறத்தாழ 150 மில்லியன் பேர் கூகுள் வகுப்பறையைப் பயன்படுத்துகின்றனர்.[2]

கூகுள் வகுப்பறை கூகுள் டாக்சு, கூகுள் தாள்கள், கூகுள் சிலைடுகள், ஜிமெயில், கூகுள் நாட்காட்டி போன்ற கல்விக்கான பல்வேறு கூகுள் பயன்பாட்டுச் செயலிகளை ஒருங்கிணைக்கிறது. மாணவர்களைத் தனிப்பட்ட "வகுப்புக் குறியீடு" ஒன்றின் மூலம் வகுப்பில் சேர அழைக்கலாம், அல்லது பள்ளிக்கூடக் களத்திலிருந்து தானாக இறக்குமதி செய்யலாம். ஆசிரியர்கள் தமது செயற்பாடுகளை கூகுள் டொமைனில் உருவாக்கலாம். ஒவ்வொரு வகுப்பும் அந்தந்த பயனரின் கூகுள் டிரைவில் ஒரு தனிக் கோப்புறையை உருவாக்குகிறது, அங்கு மாணவர் ஒரு ஆசிரியரால் தரப்படுத்தப்பட்ட பணியைச் சமர்ப்பிக்கலாம்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Google Groups". productforums.google.com. பார்க்கப்பட்ட நாள் February 8, 2018.
  2. "A peek at what's next for Google Classroom". Google. February 17, 2021. பார்க்கப்பட்ட நாள் May 26, 2021.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூகுள்_வகுப்பறை&oldid=3431109" இலிருந்து மீள்விக்கப்பட்டது