கூகுள் அலோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கூகுள் அலோ
உருவாக்குனர்கூகுள்
இயக்கு முறைமைஆண்ட்ராய்டு, ஐஓஎஸ்
கிடைக்கும் மொழிஆங்கிலம்
உருவாக்க நிலைஇயக்கத்தில்
மென்பொருள் வகைமைஉடனடித் தகவற்பரிமாற்றம்
இணையத்தளம்allo.google.com


கூகுள் அலோ என்பது கூகுள் தயாரித்துள்ள ஒரு உடனடித் தகவற்பரிமாற்றம் செய்ய உதவும் கைபேசி பயன்பாடு (mobile app) ஆகும். இந்த அலோவில் உள்ள புத்திசாலித்தனமான பதில் அனுப்பும் தொழில்நுட்பம் மூலம் ஒருவர் தட்டச்சு உதவி இல்லாமலே பதில் செய்தி அனுப்ப இயலும்.[1] அலோ மே 18, 2016 அன்று கூகிளின் மேம்பாட்டாளர் மாநாட்டில் (கூகிள் I / O) அறிவிக்கப்பட்டு செப்டம்பர் 21, 2016 அன்று தொடங்கப்பட்டது. இந்த அலோ பயன்பாடு ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் கிடைக்கும்.

வரலாறு[தொகு]

அலோ, கூகுள் மேம்பாட்டாளர் மாநாட்டில் (Google I/O) மே 18, 2016 அன்று அறிவிக்கப்பட்டது.[2] அந்த நேரத்தில் கூகிள் 2016 கோடைகாலத்தில் அலோ வெளியிடப்படும் என்று கூறப்பட்டது. அறிவித்தது போலவே, கூகிள் செப்டம்பர் 21, 2016 அன்று அலோவை வெளியிட்டது.

அம்சங்கள்[தொகு]

அலோ தொலைபேசி எண்களைச் சார்ந்தது.

இயல்புநிலையில்[தொகு]

அலோவின் "ஸ்மார்ட் பதில்" செயல்பாடு, கூகிள் இயந்திர கற்றல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒருவர் என்ன பதில் செய்திகள் அனுப்பலாம் என்று பரிந்துரைக்கும். பயன்பாட்டாளர் தமக்குத் தேவையான பதிலைத் தேர்தெடுத்து அனுப்பலாம். பதில்களைப் பரிந்துரைக்கும் பொருட்டு, அப்பயனருக்கு வரும் படிமங்களையும் அலோ ஆராய்கிறது. கூகிள் அகப்பெட்டி (Inbox) பயன்பாட்டில் காணப்படும் ஸ்மார்ட் பதில் அம்சம் போன்று, காலப்போக்கில் பயனர் நடத்தையில் இருந்து அலோவும் அதன் பரிந்துரைகளை மேம்படுத்திக் கொள்கிறது. உரையாடலுக்கான மெய்நிகர் உதவியாகவுள்ள ”கூகுள் அசிஸ்டெண்ட்”க்கு உதவும் பயன்பாடுகளுள் அலோவும் ஒன்றாகும்.

மறைவு நிலை[தொகு]

காலாவதியாகும் அரட்டைகள், தனிப்பட்ட அறிவிப்புகள் இறுதிவரை மறையாக்கம் (end-to-end encryption) ஆகியவற்றை உள்ளடக்கிய மறைவு நிலையானது (Incognito mode) அலோவில் ஒரு விருப்பத் தேர்வாக உள்ளது.

ஏற்றுக் கொள்ளுதல்[தொகு]

மெய்நிகர் உதவி[தொகு]

பிசி வேர்ல்டின் மார்க் ஹேச்மேன் அலோவிற்கு சாதகமான திறனாய்வைக் கொடுத்துள்ளார்.

விருப்ப மறையாக்கம்[தொகு]

கூகிள் அலோ அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அதில் இறுதி வரை மறையாக்கம் இயல்பாக அணைக்கப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளதால் அரசின் கண்காணிப்புக்கு வழிவகுத்துக் கொடுப்பதாக, பாதுகாப்பு வல்லுநர்களும் அந்தரங்க உரிமைக்காக குரல்கொடுப்போரும் விமர்சிக்கின்றனர்.

செய்தி தக்கவைப்பு[தொகு]

அலோ முதல் அறிமுகப்படுத்தப்பட்ட போது, அதன் டெவலப்பர்கள் மட்டும் தற்காலிகமாகக் மறைநிலை அல்லாத செய்திகளை சேமிப்பது பற்றி பேசினார்கள்.

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்[தொகு]

  1. Reisinger, Don (23 September 2016). "What Makes Google's Allo a Smarter Approach to Messaging". eWeek. QuinStreet Inc. 23 September 2016 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. Lunden, Ingrid (18 May 2016). "Google debuts Allo, an AI-based chat app using its new assistant bot, smart replies and more". TechCrunch. AOL Inc. 22 May 2016 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூகுள்_அலோ&oldid=3286804" இருந்து மீள்விக்கப்பட்டது