மென்பொருள் வகைமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மென்பொருள் வகைமை (Software categories) என்பது கணியக் கணித்தலில் பயனாகும் மென்பொருட்களின் தொகுதிகள் குறித்தும், அதனால் ஏற்பட்டு நிலவும் மென்பொருட்களின் வகைகள் குறித்தும் தெளிவுபடுத்துகிறது. மென்பொருட்களின் தொகுதிகளை அவற்றின் இயக்குதளங்களின் அடிப்படையிலும், ஒவ்வொரு மென்பொருளும் பெற்றுள்ள உரிமத்தின் அடிப்படையிலும் சில வகைகளாகப் பிரிக்கலாம்.

பயன்பாட்டுத் தொகுதிகள்[தொகு]

  • இத்தொகுதியின் கீழ் ஒரு பயனரின் பயன்பாட்டு அடிப்படையில் மென்பொருட்கள் தொகுத்துக் குறிக்கப்படுகின்றன.

எடுத்துக்காட்டாக, பயன்பாட்டு மென்பொருட்களில் எம் எசு ஆபிசு, லிபரே ஆபிசு

  • கட்டக மென்பொருள் என்பன மேற்கூறிய பயன்பாட்டு மென்பொருட்கள் இயங்கத் தேவையான மென்பொருட்களைக் குறிக்கிறது. எடுத்துக்காட்டாக, இயக்குதளத்தைக் கூறலாம்.

உரிமைத் தொகுதிகள்[தொகு]

இவற்றினை ஒரு மென்பொருள் பெற்றுள்ள உரிமத்தைக் கொண்டு தொகுதிகளாகப் பிரிக்கலாம்.

    • மென்பொருள் வெளியீட்டாளர் மட்டுமே உரிமை உடையவராகத் திகழும் மென்பொருள் ஆகும். அதனை விற்கவும், மாற்றவும், பகிரவும் பிறருக்கு உரிமை இல்லை.
    • திறமூல மென்பொருள் என்பது கட்டற்ற மென்பொருளுக்கும், வெளியீட்டாளும் பெற்றுள்ள உரிமக்கு இடைப்பட்டது ஆகும். இருப்பினும், இவற்றில் பலவித மென்பொருள் உரிமங்கள் உள்ளன. அனைத்திற்குமான மூலநிரலைக் காண இயலும்.[1]
    • கட்டற்ற உரிமை என்பது முழுக்க முழுக்க அத்தகைய மென்பொருட்களின் மூலநிரல்களை, யாதொரு விதிகளும் இல்லாமல் பெற்று, மற்றவருக்கு பகிரலாம்; மாற்றி புதுவகை மென்பொருட்களாக உருவாக்கலாம்; நகல் எடுத்து விற்கலாம்.[2]
    • இவை தவிர பிற உரிமையுள்ள (Shareware,Freeware) மென்பொருட்களும் நிலவுகின்றன. இவற்றினை தொடரந்து பயன்படுத்தினால் தொகை செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடனும், இலாப நோக்கமற்ற பகிர்வுரிமையுடனும், இற்றைபடுத்துதலுக்கான கட்டணத்துடனும் விளங்குகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மென்பொருள்_வகைமை&oldid=2488880" இருந்து மீள்விக்கப்பட்டது