லிப்ரே ஆபீஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லிப்ரே ஆபீஸ்
உருவாக்குனர்த டொகியுமென்ட் பவுண்டேசன்
தொடக்க வெளியீடு25 சனவரி 2011 (2011-01-25)
மொழிசி++, ஜாவா
இயக்கு முறைமைலினக்ஸ், மாக் இ.த எக்ஸ், மைக்ரோசாப்ட் விண்டோசு
தளம்IA-32, x86-64, PowerPC
கிடைக்கும் மொழி114
மென்பொருள் வகைமைஅலுவலக தொகுப்பு
உரிமம்குனூ பொதுமக்கள் உரிமம்[1]
இணையத்தளம்www.libreoffice.org

லிப்ரே ஆபீஸ் த டொகியுமென்ட் பவுண்டேசன் உருவாக்கிய ஒரு கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருளாகும். இது 2010 ஆம் வருடத்தில் ஓப்பன் ஆபிசுவிலிருந்து பிரிந்து உருவானதாகும். லிப்ரே ஆபீஸில் சொல் செயலி, விரிதாள், விளக்கப்படம் வரைவதற்கு கிராபிக்ஸ் எடிட்டர், தரவுதளம், கணித சூத்திரத்திற்கு மேத் எடிட்டர் என்பன உள்ளன.

இது நடைமுறையில் பயன்பாட்டில் உள்ள தனியுரிமை உரிம மென்பொருள்களாக உள்ள அலுவலக தொகுப்புகளுக்கு (எ.கா. மைக்ரோ சாப்ட் ஆபீசு) மாற்றாக உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இது பல இயங்கு தளங்களான மைக்ரோசாப்ட் விண்டோசு, Mac OS X 10.4 Tiger-க்கு மேல் பதிப்பு, லினக்சு கெர்னல் 2.6.18 க்கும் கிடைக்கின்றது.

ஜனவரி 2011 (அதன் முதல் நிலையான வெளியீடு) மற்றும் அக்டோபர் 2011 வரை, லிப்ரே ஆபீஸ் சுமார் 7.5 மில்லியன் முறை பதிவிறக்கப்பட்டுள்ளது.[2]

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "GNU LGPL License". The Document Foundation. பார்க்கப்பட்ட நாள் 29 February 2012.
  2. Iain Thomson. "On its first birthday, LibreOffice has reason to celebrate". பார்க்கப்பட்ட நாள் 28 September 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லிப்ரே_ஆபீஸ்&oldid=3153544" இலிருந்து மீள்விக்கப்பட்டது