குனூ பொதுமக்கள் உரிமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
GPLv3 Logo.svg

குனூ பொதுமக்கள் உரிமம் (GNU GPL) என்பது குனூ திட்டத்திற்கென ரிச்சர்ட் ஸ்டால்மன் என்பவரால் எழுதப்பட்ட மென்பொருள் உரிம ஒப்பந்தமாகும். இதுவே தளையறு மென்பொருட்களுக்கென இன்று பயன்படுத்தப்படும் உரிம ஒப்பந்தங்களுள் மிகவும் பிரபலமானதாகும்.

இவ்வுரிம ஒப்பந்தத்தின் மிக அண்மைய வெளியீடு, குனூ பொது மக்கள் உரிமம் பதிப்பு 3 (GPL v3) ஆகும். இப்பதிப்பு 1991 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

இது நான்கு வகையான தளையறு நிலைகளை பயனர்களுக்கு வழங்குகிறது.

  • தளையறு நிலை 0 - எத்தகைய நோக்கத்திற்காகவும் மென்பொருளை தொழிற்படுத்துவதற்கு /பயன்பத்துவதற்கான தளையறு நிலை.
  • தளையறு நிலை 1 - (அம்)மென்பொருள் எவ்வாறு தொழிற்படுகிறது என்பதை கற்றுக்கொள்ளவும், உங்கள் தேவைகளுக்கேற்ப அதனை உள்வாங்கிக்கொள்ளவும் தடுக்காத தளையறு நிலை. ஆணை மூலத்தை பார்வையிட அனுமதித்தல் இதற்கான முன்னிபந்தனை
  • தளையறு நிலை 2 - நகல்களை மீள்வினியோகம் செய்வதற்கான தளையறு நிலை. இதன்மூலம் நீங்கள் உங்கள் அயலவர்களுக்கு உதவமுடியும்.
  • தளையறு நிலை 3 - மென்பொருளை மேம்படுத்துவதற்கும், மேம்பாடுகளை பொதுமக்களுக்கு வெளியிடுவதற்குமான தளையறு நிலை. இதன்மூலம் மொத்த சமுதாயமும் பயன்பெறுகிறது. இவ்வாறு விநியோகிக்கப்படும் மென்பொருள்களின் ஆணைமூலம் பார்வைக்கு வழங்கப்பட வேணும் என்பது இதற்கான முன்நிபந்தனை

ஒரு மென்பொருள், பயனாளர்களுக்கு மேற்கண்ட எல்லா தளையறு நிலைகளையும் வழங்கும்பட்சத்திலேயே அது கட்டற்ற மென்பொருள் எனக் கொள்ளப்படும்.

இத்தகைய மென்பொருட்களின் நகல்களை, மாற்றங்கள் செய்யப்பட்டநிலையிலோ அல்லது மாற்றம் எதுவும் செய்யாமலோ, இலவசமாகவோ, கட்டணங்கள் பெற்றுக்கொண்டோ, எங்கேயும் எவருக்கும் மீள்விநியோகம் செய்வதற்கு நீங்கள் எவருடைய அனுமதியையும் பெற்றுக்கொள்ளத் தேவையில்லை. செய்யும் மாற்றங்கள் பற்றி எவருக்கும் அறிவிக்க வேண்டிய கட்டாயமும் இல்லை.