பேச்சு:குனூ பொதுமக்கள் உரிமம்

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கட்டுரையின் தலைப்பில் அல்லது உள்ளடக்கத்தில் பொது பயன்பாட்டில் இல்லாத அல்லது புதிய தமிழ் சொற்கள் அல்லது சொற்தொடர்கள் உள்ளன. அவற்றுக்கு இணையான பொது பயன்பாட்டில் இருக்கும் அல்லது பொருள் இலகுவில் புலப்படக்கூடிய அல்லது எளிய சொற்கள் இருந்தால் தயவுசெய்து இங்கே தெரிவியுங்கள். நீங்களே கட்டுரையில் மாற்றங்களை ஏற்படுத்தி இங்கே விளக்கம் தந்தாலும் நன்றே.

--Natkeeran 15:44, 28 ஜூன் 2006 (UTC)


இயுஇ யுனிக்ஸ் இல்லை பொது மக்கள் உரிமம் (இயுஇ பொதுஉரி) எப்படியிருக்கின்றது :-)--Natkeeran 16:43, 28 ஜனவரி 2006 (UTC)

நற்கீரன், JAVA, GNOME போன்று இது ஒரு பெயராக இருக்கின்றபடியால், எந்த மொழிபெயர்ப்பும் செய்யாமல் இதனை ஒலி பெயர்ப்பு மட்டுமே செய்திருந்தேன். ஒலிபெயர்ப்பு கூட செய்யாமல் நேரடியாக ஆங்கிலத்திலேயே பயன்ப்டுத்தலாமா என்று கூட யோசித்தேன். தமிழ் பெயர்ப்பு தேவையில்லை என்பது என் எண்ணம். ஆனால் இப்படியான சந்தர்ப்பங்கள் தொடர்பாக பொதுவான கொள்கை ஒன்று தமிழ் விக்கிபீடியாவில் வகுக்கப்படவேண்டும்.

இந்தபிரச்சனைகளால்தான் பொதுவான கலைச்சொற்கள் தொடர்பான பக்கம் ஒன்று விக்கிபீடியாவில் வேண்டும் என்றநிலைப்பாட்டை எடுத்தேன். --மு.மயூரன் 06:10, 30 ஜனவரி 2006 (UTC)

மயூரன், உங்கள் மையப்படுத்தப்பட்ட கலைச்சொல் கலந்துரையாடல் பக்கம் பற்றிய மேலதிக கருத்துக்களை பின்னர் பகிர்கின்றேன். எனினும், எல்லா சமயத்திலும் ஒலி பெயர்ப்பதில் எனக்கு அவ்வளவாக உடன்பாடில்லை. குறிப்பாக ஒரு திட்டத்தில் நாங்களும் குறிப்பிடத்தக்க பங்காளிகளாக இருக்கும் பொழுது (உ+ம்: ஜினு). அதாவது அத்திட்டத்தை நோக்கி எம்மிடம் பரந்த புரிதல் இருக்கும் சந்தர்ப்பதில் அத்திட்டத்தை நோக்கி நாம் பாவிக்கும் சொல் பயன்பாடு காரணமாகவே பரவும், உதாரணம்: புலோக்-வலைப்பதிவு. ஆங்கிலத்தில் புலோக்கிங் ஒரு வினைச்சொலாக தற்போது பாவிக்கப்படுகின்றது. அதேவேளை விக்கிபீடியா என்ற சொல் நன்றாகவே எனக்கு படுகின்றது. தனிப்பட்டரீதியில், என்னால் ஒரு தீர்மானமான முடிவை எடுக்க முடியவில்லை. --Natkeeran 15:58, 30 ஜனவரி 2006 (UTC)