உள்ளடக்கத்துக்குச் செல்

குரோமியம் உலாவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குரோமியம் உலாவி
உருவாக்குனர்குரோமியம் திட்டம்
தொடக்க வெளியீடு2008
மென்பொருள் வகைமைஇணைய உலாவி
உரிமம்LGPL, BSD, MIT
இணையத்தளம்குரோமியம் முதன்மைத்தளம் குரோமியம் உருவாக்கு தளம் பரணிடப்பட்டது 2010-11-12 at the வந்தவழி இயந்திரம்
Chromium in Manjaro Linux

குரோமியம்(ஆங்கிலம்:chromium browser) ஒரு கட்டற்ற மற்றும் திறந்த மூல வகையைச்சார்ந்த இணைய உலாவி ஆகும். கூகுளின் கூகுள் குரோம் உலாவி குரோமியத்தின் மூல நிரலை அடிப்படையாகக்கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது.[1] குரோமியத்தின் வளர்ச்சி, மேம்பாடு, திறந்த மூல நிரல் அனைத்தும் குரோமியம் திட்டத்தினால் நிர்வகிக்கப்படுகிறது. குரோம் உலாவியும் குரோமியம் உலாவியும் பெரும்பாலான நிரல்களையும் சிறப்புகளையும் ஒரே மாதிரி கொண்டிருந்தாலும் இவைக்களுக்கிடையே சிறிது வேறுபாடு உள்ளது.

குரோமியம் திட்டம் குரோமியம் மாலையிலிருந்து பெயரை பெற்றது. [2] கூகுள் நிறுவனம் குரோமியம் திற மூல உலாவியாக இருக்கும் என்றும் இறுதி உலாவி குரொம் என்றும் நிரலாளர்களுக்கான ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளது.[3] எனினும் மற்ற நிரலாளர்கள் குரோமியம் நிரலை கொண்டு பல பதிப்புகளை குரோமியம் பெயரில் வெளியிட்டனர். இதை சமூக தொகுப்பு உரிமத்தில் வழங்கினர்.

வழக்கமான உலாவிகள் போல் அல்லாமல் குரோமியம் உலாவி செல் நிரலை இணையத்திதல் பயன்படுத்துகிறது. குறைந்த அளவு பயனர் இடைமுகம் இருக்குமாறு இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் இது பயன்படுத்தும் போது திடிரென்று உலாவி செயல்படாமல் இருப்பதையும் இது விரைவாகவும் இருப்பதையும் பயனர்கள் உணரமுடியும் என்று நிரலாளர்கள் கருதுகின்றனர்."[4]


பயன்படுத்தப்படும் இயக்குதளங்கள்

[தொகு]

குரொமுக்கும் குரோமியித்துக்கும் உள்ள வேறுபாடுகள்

[தொகு]
  1. தானியங்கியாக குரோம் இற்றைபடுத்தப்படும்.
  2. பாப்பி (PPAPI) உட்செருகு பதிப்பு அரோப் பிளாசு பிளேயர் மூலம் குரோமில் இணைக்கப்பட்டுள்ளது.[5] குரோமியத்தில் இது தனியாக சமூகம் பகிரும் பொதி மூலம் பதிவேற்றப்படுகிறது.
  3. எம்பி3 MP3, ஏஏசி AAC, எச்264 H.264 ஒலி வடிவங்கள் குரோமால் ஆதரிக்கப்படுகிறது. [6] குரோமியத்தில் இவ்வடிவங்கள் தனியாக தரவிறக்கப்பட்டு பதிவேற்றப்படும்.
  4. குரோம் இணைய கடை (Chrome Web Store) மூலம் எந்த உட்சேருகுகளையும் விண்டோசு, மேம் இயக்கு தள பயனர்களின் குரோமியம் இயக்காது 2015 யூலைக்கு (மே 2015 முதல் விண்டோசு) முன் உட்செருகுகளை (extensions) குரோமியத்தில் பயன்படுத்தி இருந்தாலும் அவை முற்றாக செயல் இழக்கப்படும். )[7]
  5. கூகுள், குரோம் பெயர்கள் கூகுள் நிறுவனத்தின் காப்புரிமை பெற்றவை.[8][9][10]
  6. பயனர்களின் செயல்களையும் உலாவி செயல் படாமல் நொறுங்குவதையும் குரொமில் பயனர் கூகுளுக்கு செல்லாமல் இருக்க தேர்வு செய்யும் உரிமை உள்ளது.
  7. ஆர்எல்இசட் (RLZ tracking) சுவடு என்பது குரொம் உலாவி தரவிறக்கப்பட்டதும் சந்தைபடுத்தலுக்காகவும் பகிர்மான கூட்டு காரணமாகவும் அந்த விடயத்தை கூகுளுக்கு குறியாக்கி அனுப்பும். யூன் ங010 இக்கு பின் கூகுள் ஆர்எல்இசட் (RLZ tracking) சுவடை பயன்படுத்துவதில்லை. குரோமியத்தில் இது இல்லை. ஆர்எல்இசட் (RLZ tracking) சுவட்டுக்கு கூகுளின் காப்புரிமை பெற்றிருந்தது. இப்போது அது காப்புரிமை விலக்கப்பட்டு கட்டற்ற திறமூலமாக கிடைக்கிறது. எனினும் இது குரோமியத்தில் பயன்படுத்தப்படுவதில்லை.[11]
  8. பிடிஎப் முன்தோற்றம் கூகுள் கட்டற்ற முறையில் பிடிஎப் முன்தோற்றம் பார்ப்பதை வெளியிட்டவுடன் குரோமியம் பதிப்பு 47 இக்கு பின் பிடிஎப் முன்தோற்றம் கிடைக்கிறது

மேற்கோள்கள்

[தொகு]
  1. Chromium Project (13 September 2008). "Chromium Developer Documentation". Archived from the original on 13 September 2008. பார்க்கப்பட்ட நாள் 30 July 2012.
  2. Google (September 2008). "Welcome to Chromium". {{cite web}}: |last= has generic name (help)
  3. "Coding Style (Chromium Developer Documentation)". Chromium Developer Documentation. dev.chromium.org. 2009. பார்க்கப்பட்ட நாள் 5 July 2009.
  4. "User Experience (Chromium Developer Documentation)". Chromium Developer Documentation. dev.chromium.org. 2009. பார்க்கப்பட்ட நாள் 5 July 2009.
  5. "Bringing improved support for Adobe Flash Player to Google Chrome".
  6. "Get Chromium on Ubuntu To Play mp4, , MP3 & view PDF files natively".
  7. "Chrome Extension Developer FAQ for upcoming changes in May 2015 related to hosting extensions".
  8. "Google Trademark". United States Patent and Trademark Office. 1 November 2005. பார்க்கப்பட்ட நாள் 31 December 2013.
  9. "Google Trademark". United States Patent and Trademark Office. 17 April 2012. பார்க்கப்பட்ட நாள் 31 December 2013.
  10. "Google Chrome Trademark". United States Patent and Trademark Office. 12 September 2012. பார்க்கப்பட்ட நாள் 31 December 2013.
  11. Google (June 2010). "In The Open, For RLZ". பார்க்கப்பட்ட நாள் 20 June 2010. {{cite web}}: |last= has generic name (help)

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=குரோமியம்_உலாவி&oldid=3396031" இலிருந்து மீள்விக்கப்பட்டது