கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.
கூகுள்+ அல்லது கூகுள் ப்ளசு(Google+ or Google Plus) என்பது கூகுள் நிறுவனம் தயாரித்து வழங்கும் சமூக வலையமைப்புத் தளம் ஆகும். இதன் மூலம் நாம் நமது கருத்துகள், புகைப்படங்கள், காணொளிகள், இணையதள உரலிகள் ஆகியவற்றை நமது வட்டத்தில் உள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். அரட்டை மற்றும் காணொளி அரட்டை ஆகிய வசதிகளும் உள்ளது. இதிலுள்ள +1 பொத்தான் கூகுள்+ இன் சிறப்பம்சமாகும்.
இதன் பிரத்தியேக வசதிகளான பிகாசா ஆல்பத்தினை இப்பக்கத்துடன் இணைத்திருப்பது,ஜியோ என்ற புகைப்படம் எடுக்கப்பட்ட இடத்தினை குறிக்கும் வசதிகள் போன்ற ஏனைய வசதிகள் சிறப்பாக உள்ளது.இதன் அமைப்பு மற்ற வலையமைப்பு சேவைகளைவிட சற்று மிகுதியாக காணப்படுவதால் பேஷ்பூக் உடன் போட்டி நிலவ அதிக வாய்ப்பு உள்ளது.