கூகிள் டாக்
![]() | இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கூகிள் டாக் | |
![]() | |
---|---|
சோதனையில் இருக்கும் கூகிள் டாக் இலச்சினை. | |
பராமரிப்பாளர்: | கூகிள் |
மென்பொருள் வெளியீடு: | 1.0.0.105 (18 டிசம்பர், 2007) [+/-] |
மேலோட்ட வெளியீடு: | ஒன்றும் இல்லை. [+/-] |
இயங்குதளம்: | வின்டோஸ் 2000, எக்ஸ்பி, சேவர் 2003, விஸ்டா |
பயன்: | இணையவழி ஒலி பரிமாற்றம்/நிகழ்நிலைத் தூதுவன் client |
உரிமம்: | Proprietary இலவச பொருள் |
இணையத்தளம்: | கூகிள்டாக் |
கூகிள் டாக் (Google Talk) என்பது இணைய உரையாடல் மற்றும் இணையமூடான ஒலியழைப்புக்களை ஏற்படுத்தும் ஒரு கூகிளின் சேவையாகும். கூகிள் டாக் 24 ஆகஸ்ட் 2005 முதல் வெள்ளேட்டத்திலுள்ளது. வேறு சில இணைய உரையாடல் மென்பொருட்களைப் போன்றல்லாது கூகிள் டாக் துதுவன் திறந்த XMPP protocol ஐப் பாவிப்பதோடு வேறு இணைய உரையாடல் மென்பொருட்களையும் கூகிள் டாக் உடன் இணைவதையே கூகிள் விரும்புகின்றது.
இதனை வெளியிட்ட தினத்தில் இருந்து கூகிள் டாக் மென்பொருள் விண்டோஸ் 2000, விண்டோஸ் XP மற்றும் விண்டோஸ் 2003 சேவர் இயங்குதளத்தில் மாத்திரமே கிடைக்கின்றது. ஏனைய இயங்குதளங்களில் உள்ளவர்கள் ஜபர்' தொழில்நுட்பத்தினூடாக கெயிம் போன்ற இணைய உரையாடல் மென்பொருட்களிற்கூடாக இணைந்துகொள்ளலாம் (மேலே குறிப்பிட்ட இயங்குதளங்கள் உட்பட). எனினும் இணையமூடான ஒலி அழைப்புக்கள் கூகிள் டாக்கில் மாத்திரமே வேலை செய்யும். கூகிள் ஜிங்கிள் என்ற பெயருடன் இணையமூடான ஒலி அழைப்புக்களை வெளியிட்டுள்ளனர்.
வரலாறு[தொகு]
23 ஆகஸ்ட் 2005 ஆப்பிள் X கணினியூடான ஜபர் தொழில்நுட்பத்திலமைந்த இணைய உரையாடல் சேவையா முன்மொழியப் பட்டிருந்தது. கூகிளின் போர்ட் (Port) 5222 இச்சேவையில் இணையமுடியும். 7 பெப்ரவரி 2006 இல் இருந்து ஜிமெயில் மின்னஞ்சல் சேவையில் நுழைந்தவர்களிற்கு கூகிள் டாக் இணைய உரையாடல் சேவை மின்னஞ்சலூடாகக் வரும் சில வாரங்களில் கிடைக்கும் என்றனர். இவ்வாறு ஜிமெயில் மின்னஞ்சலூடாக உரையாடலில் ஈடுபடுவது கூகிள் டாக் பாவனையாளர்களை அதிகரிக்கச் செய்யும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.
தொழில் நுட்பத் தகவல்கள்[தொகு]
ஒத்தியங்கும் தன்மையே கூகிள் டாக்கின் பலம் என கூகிள் கூறியுள்ளது. கூகிள் டாக் ஜபர் மற்றும் XMPP தற்போதுள்ள் செய்திகளைப் பரிமாறவும் உதவியது. 17 ஜனவரி 2006 இலிருந்து கூகிள் சேவரிலிருது சேவருக்கான எந்தவொரு மீண்டும் அழைக்கும் (dialback protocol) ஜபர் தொழில் நுட்பமுள்ள் சேவரை ஆதரிக்கத் தொடங்கியது.
கூகிள் டாக் உரையாடல்கள் யாவும் தானாகவே ஜிமெயில் மின்னஞ்சலில் ஓர் கோப்புறைக்குள் சேமிக்கப் படும். இந்நடைமுறையானது ஓரிடத்தில் உரையாடல்களைச் சேமிப்பதால் தேடல்களை இலகுவாக்குவதோடு எந்தக் கணினியில் சேமித்தோம் என்ற பிரச்சினையும் கிடையாது.