உள்ளடக்கத்துக்குச் செல்

கூகுள் டிரைவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கூகுள் ட்ரைவ்
Google Drive
வடிவமைப்புகூகுள்
உருவாக்குனர்கூகிள்
தொடக்க வெளியீடுஏப்ரல் 24, 2012; 12 ஆண்டுகள் முன்னர் (2012-04-24)
இயக்கு முறைமை
கிடைக்கும் மொழிஆங்கிலம், மேலும் பல மொழிகளில்
உருவாக்க நிலைஇயக்கத்தில்
மென்பொருள் வகைமைதொலைநிலை தகவல் சேமிப்பு
உரிமம்Proprietary software
இணையத்தளம்www.google.com/intl/ta/drive/

கூகுள் டிரைவ் என்பது இணைய வழியில் கோப்புகளை சேமிக்கும் சேவையாகும். இது கூகுள் நிறுவனத்தினால், ஏப்பிரல் 24, 2012 ஆம் நாள் வெளியிடப்பட்டது.[2]. இதன் மூலம் இணைய வழியில் ஒருவர் கோப்புகளைச் சேமிக்கலாம். தன் கோப்புகளை பிறருடன் பகிரலாம். கூட்டாகத் தொகுக்கலாம். இதற்கு முன்னர், கூகிள் டாக்ஸ் என்ற சேவை, கோப்புகளை கூட்டாகத் தொகுக்கும் வசதியை அளித்தது. தற்போது, இந்த சேவையும் கூகுள் ட்ரைவில் கிடைக்கும். பொதுவெளியில் தெரியும்படி பகிரப்படும் கோப்புகளை தேடல் பொறிகளின் மூலம் கண்டறியலாம்.

சேமிப்பகம்

[தொகு]

கூகுள் டிரைவைப் பயன்படுத்தும் அனைவருக்கும் 15 ஜிபி நினைவகம் வழங்கப்படும். இந்த நினைவகத்தை கூகுள் டிரைவ், ஜிமெயில், கூகுள் பிளஸ் படங்கள் (பிக்காசா வெப் ஆல்பம்ஸ்) ஆகியவற்றுக்கு பயன்படுத்தலாம்.[3][4] அதிக நினைவகத்தைப் பெற விரும்பும் நபர், அளவிற்கேற்ப சந்தா தொகையை மாதந்தோறும் செலுத்தி தேவையான அளவில் பெறலாம். 100 ஜிபிக்கான சந்தா தொகை $4.99 அமெரிக்க டாலர்கள்.[5][6] முதலில் 1 ஜி.பி வழங்கப்பட்ட நினைவகம் பின்னர் 10 ஜிபியாக அதிகரிக்கப்பட்டது. மே 13, 2013 அன்று இந்த நினைவகம் ஜிமெயில், கூகுள் டிரைவ், பிக்காசா ஆகியனவற்றுள் பகிர்ந்துகொள்ள வழிசெய்தது.[7]

நகர்பேசிகளில் (கைபேசி) கூகிள் டிரைவ் வசதி

[தொகு]

ஆண்டிராய்டு இயங்குதளத்தைக் கொண்டுள்ள நகர்பேசிகளில் டிரைவ் வசதியை இயக்கலாம். இதை இயக்க, கூகுள் பிளேயில் இருந்து இதற்கான செயலியை இலவசமாக பதவிறக்கிப் பயன்படுத்தலாம்.[8] கணினியில் செய்வது போன்றே எல்லா வகை ஆவணங்களை உருவாக்கித் தொகுக்க முடியும். கையெழுத்து, பிற ஆவணம் போன்றவற்றை படமெடுத்து, அவற்றை எழுத்துகளாக மாற்றி தொகுக்கவும் செய்யலாம்.[9] ஐபோனுக்கான கூகுள் பயன்பாட்டைக் கொண்டு கூகுள் டாக்ஸ் வசதியை பயன்படுத்தவும் வழி செய்யப்பட்டுள்ளது. பிற கைபேசிகளிலும் இந்த கோப்புகளை பார்க்கும் வசதி உள்ளது [10]

ஏற்கப்பட்ட கோப்பு வடிவங்கள்

[தொகு]

கூகுள் டிரைவில் கீழ்க்காணும் கோப்பு வடிவங்களைத் திறந்து பார்க்க முடியும்.[11]

  • படங்கள் - .JPEG, .PNG, .GIF, .TIFF, .BMP
  • நிகழ்படங்கள் - WebM(WebMovieFormat), .MPEG4, .3GPP, .MOV, .AVI, .MPEGPS, .WMV, .FLV
  • உரைக் கோப்புகள் .TXT
  • மீயுரைக் குறியீட்டு மொழிகள் - .CSS, .HTML, .PHP, .C, .CPP, .H, .HPP, .JS
  • மைக்ரோசாப்ட் வேர்டு
  • மைக்ரோசாப்ட் எக்செல்
  • மைக்ரோசாப்ட் பவர்பாயிண்டு
  • அடோப் போர்டபிள் டாக்குமெண்ட் (.PDF)
  • ஆப்பிள் பேஜஸ்
  • அடோப் இல்லசுற்றேட்டர்
  • அடோப் போட்டோசாப்
  • ஆட்டோடெஸ்க் ஆட்டோகேட் (.DXF)
  • .SVG
  • போஸ்ட்ஸ்கிரிப்டு - .EPS, .PS
  • எழுத்துருக்கள் - .TTF, .OTF
  • .XML
  • சேமிப்பு வடிவங்கள் - .ZIP, .RAR

மேலும் பார்க்கவும்

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. "Google Drive". Google.com. Retrieved 2013-03-04.
  2. Mossberg, Walter S. (25 ஏப்பிரல் 2012). "Google Stores, Syncs, Edits in the Cloud". The Wall Street Journal. http://online.wsj.com/article/SB10001424052702303459004577362111867730108.html. பார்த்த நாள்: 2012-04-25. 
  3. Lockhart, Joshua (2013-05-14), "Google Introduces Unified Cloud Storage: 15GB For Google Drive, Gmail, & Google+ Photos [Updates]", MakeUseOf, archived from the original on 2013-06-07, retrieved 2013-06-05
  4. Whitney, Lance (2013-03-05), "Google now redirects Picasa Web Albums to Google+ Photos", CNET, retrieved 2013-06-05
  5. "How Google storage plans work - Google Drive Help". Support.google.com. Retrieved 2012-04-26.
  6. "Buy Storage". Google. Retrieved 2013-07-03.
  7. "15GB Free Storage". W3Reports. Retrieved 13 May 2013.
  8. "Google Drive - Android-apps op Google Play". Play.google.com. Retrieved 2013-03-04.
  9. {{cite web|url=http://googlemobile.blogspot.com/2011/04/introducing-new-google-docs-app-for.html |title=Introducing the new Google Docs app for Android | publisher=Googlemobile.blogspot.com |date=2011-04-27 |accessdate=2013-03-04}}
  10. "Docs.Google.com". Google.com. Retrieved 2013-03-04.
  11. "File formats in Google Docs". Support.google.com. Retrieved 2013-03-04.

இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூகுள்_டிரைவ்&oldid=3610938" இலிருந்து மீள்விக்கப்பட்டது