ஒன்டிரைவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(விண்டோஸ் லைவ் ஸ்கைடிரைவ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஒன்டிரைவ்
உருவாக்குனர்மைக்ரோசாப்ட்
மென்பொருள் வகைமைஇணைய கோப்புச் சேமிப்பகம்
உரிமம்இலவசமென்பொருள்
இணையத்தளம்ஒன்டிரைவ்

ஒன்டிரைவ் (முன்னர் விண்டோஸ் லைவ் போல்டேஸ் அல்லது வின்டோஸ் லைவ் ஸ்கைடிரைவ் என்றறியப்பட்டது) வி்ன்டோஸ் லைவ் சேவைகளுள் ஒன்றான இது இணையத்தில் கோப்புக்களை பதிவேற்றிவிட்டு இணையமூடாககக் கோப்புக்களைப் பாதுக்காப்பான முறையில் வின்டோஸ் லைவ் ஐடி (Windows Live ID) மூலமாக பகிர உதவுகின்றது. இம்முறையில் பிரத்தியேகமான கோப்புக்கள், தொடர்புகளையும் பகிரக்கூடியதாக உள்ளதுடன், கோப்புக்களைப் பொதுவிலும் பகிர இயலும். கோப்புக்கள் பொதுவில் பகிரப்பட்டால் அதைப் பதிவிறக்குவதற்கு விண்டோஸ் லைவ் ஐடி தேவைப்படாது.

இச்சேவையானது தற்போது 15 ஜிகாபைட் இடவசதியினைத் தருவதோடு ஒருகோப்பின் அதிகபட்ட அளவானது 50 மெகாபைட் ஆகும். (அறிமுகப்படுத்தப்பட்ட போது இச்சேவையானது 500 மெகாபைட் இடவசதியும் படிப்படிப்படியாக அதிகரித்து கடைசியாக 5 ஜிகாபைட்டும் வழங்கியது). ஒரேசமயத்தில் 5 கோப்புக்கள் அளவில் மேலேற்றம் செய்யலாம். விருப்பம் என்றால் மைக்ரோசாப்ட் ஆக்டிவ் எக்ஸ் ரூலை நிறுவி விண்டோஸ் எக்ஸ்புளோளரூடாகவும் கோப்புக்களை இழுத்துக் கொண்டுபோய்ப் போடும் வசதியினை அளிக்கின்றது.

வரலாறு[தொகு]

ஆரம்பத்தில் ஐக்கிய அமெரிக்காவில் உள்ள பீட்டா சோதனையாளர்களுக்கே இச்சேவை வழங்கப்பட்டுச் சோதிக்கப்பட்டது. பின்னர் 1 ஆகஸ்ட், 2007 இல் இச்சேவையானது பல நாடுகளிற்கும் சோதனைக்காக விரிவாக்கப்பட்டது. 9 ஆகஸ்ட், 2007 முதல் விண்டோஸ் லைவ் போல்டர் விண்டோஸ் லைவ் ஸ்கைடிரைவ் ஆகப் பெயர் மாற்றப்பட்டது. 22 மே 2008 இன் படி 62 நாடுகளில் இச்சேவையானது கிடைக்கின்றது. [1][2]

மேம்படுத்தல்கள்[தொகு]

  • 02 டிசம்பர் 2008 அன்று இடவசதியானது 5 ஜிகாபைட்டிலிருந்து 25 ஜிகாபைட்டாக அதிகரிக்கப்பட்டது. அத்துடன் மேலும் சில வசதிகள் இணைக்கப்பட்டது.
  • விண்டோஸ் லைவ் ஸ்பேசஸ் உடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
  • 500 மெகாபைட் சேமிப்பு அளவில் இருந்து 1 ஜிகாபைட் சேமிப்பளவாகக் கோப்பின் அளவு மாற்றப்பட்டுள்ளது.
  • பொதுவில் பகிரப்படும் கோபுறைகளிற்கு RSS ஊட்டு வசதிகள்.
  • விண்டோஸ் லைவ் ஸ்கைடிரைவ் இல் இருந்து தொடர்புகளை நேரடியாகச் சேர்க்கும் வசதி.
  • அண்மையில் பார்க்கப்பட்ட ஸ்கைடிரைவ் பக்கங்கள்
  • கோப்புக்களை இழுத்துக் கொண்டுபோய் போடும் வசதி.
  • பிறிதோர் இணையத்தளத்தில் பொதுக் கோப்புக்களையும் பொதுக்கோப்புறைகளையும் இணைக்கும் வசதி.
  • லினக்ஸ் இயங்குதளமூடாக இச்சேவையினைப் பெறுவதற்கான ஒப்பந்தைக் கைச்சாத்திடுவதில் சிரமங்கள் இருப்பினும் விண்டோஸ் இயங்குதளமூடாக இச்சேவையினை உறுதிசெய்தவுடன் லினக்ஸ் ஊடாகவும் இச்சேவையினைப் பெற்றுக்கொள்ளலாம்.

வெளியிணைப்புக்கள்[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒன்டிரைவ்&oldid=3547071" இருந்து மீள்விக்கப்பட்டது