பிக்காசா (Picasa) என்பது பரவலாகப் பயன்படும் புகைப்படம் சம்பந்தமான ஒரு மென்பொருள் ஆகும். இதனை ஒரு புகைப்பட தொகுப்பு ஏடாகவும் பயன்படுத்தலாம். கூகிள் கணக்கு உள்ள யார் வேண்டுமானாலும் இதனை பயன்படுத்தலாம். இதன் மூலம் நாம் இணையத்தில் புகைப்படங்களை சேமிக்கவும், தொகுக்கவும், பகிர்ந்துகொள்ளவும், பதிவேற்றவும் முடியும். இதனை கூகிள் நிறுவனம் வழங்குகிறது. இதனை ஒருவரின் தனிக் கணினியில் பதிவிறக்கம் செய்யாமல் நேரடியாக இணையத்தின் ஊடாகவே பயன்படுத்தும் வசதியும் உள்ளது.