பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பதிவிறக்கம் என்பது கணனி வலையமைப்பின் ஊடாக எமது கணனிக்கு வேறு ஒரு கணனியில் இருந்து தரவுகளைப் பெற்றுக்கொளவதைக் குறிக்கும். இத்தகய பதிவிறக்கங்கள் இணைய வழங்கிகள், FTP வழங்கிகள், மின்னஞ்சல் வழங்கிகளில் இருந்து நடைபெறலாம். பதிவிறக்கம் என்பது இவ்வாறு ஒரு பதிவிறக்க வழங்கப்பட்ட கோப்பை பெறும் செயல்முறை அல்லது பெற்ற ஒரு நிகழ்வைக் குறிக்கும்.
பதிவேற்றம் என்பது பதிவிறக்கத்திற்கு எதிர்மறையான செயற்பாடு. அதாவது எமது கணனியில் இருந்து ஒரு வழங்கிக்கோ அல்லது வேறு ஒரு கணனிக்கோ தரவுகளை அனுப்புதல் அல்லது அனுப்பும் செயன்முறையைக் குறிப்பிடும்.