ஜாவா (நிரலாக்க மொழி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜாவா
Java logo and wordmark.svg
நிரலாக்க கருத்தோட்டம்: பொருள் நோக்கு, அமைவுறு, அதிகாரமுள்ள,பொதுநிலை, பன்முக உருமாதிரி
தோன்றிய ஆண்டு: 1995
உருவாக்குநர்: சண் மைக்ரோசிஸ்டம்ஸ்
இயல்பு முறை: Static, strong, safe, nominative
முதன்மைப் பயனாக்கங்கள்: {{{நடைமுறைப்படுத்துவோர்கள்}}}
பிறமொழித்தாக்கங்கள்: Objective-C, C++, Smalltalk, Eiffel, C#[1]
இம்மொழியினால் ஏற்பட்ட தாக்கங்கள்: C#, D, J#, Ada 2005
இயக்குதளம்: கலப்பு-இயங்குதளம்
இணையத்தளம்: http://www.java.com/

ஜாவா சன் மைக்ரோசிஸ்டம்ஸ் (Sun Microsystems) என்ற நிறுவனத்தினால் இணையத்தை மனதில் கொண்டு சி++ கணினி நிரலாக்க மொழியைப் பின்பற்றி உருவாக்கப் பட்ட பொருள் நோக்கு நிரலாக்க மொழி. சி, சி++ முதலிய மற்ற கணிமொழிகளின் மூல நிரல் அல்லது மூலங்கள் (Source code) இயங்குதளங்களில் இயங்குவதற்கு ஒவ்வொரு முறையும் தொகுக்க (compile) வேண்டியிருந்தது. இக்குறைபாடுகளைக் களைந்து உருவாக்கப்பட்ட ஜாவா கணினி மொழியில் இயங்குதளத்தில் தொகுத்த உடன் அவை இயங்குதளங்களைச் சாராத எண்ணுன்மிக் குறிமுறைகளாக (byte code) மாற்றப்படும். இந்த எண்ணுன்மிக் குறிமுறை நிரல்கள் இயங்குதள சார்பின்னைமை ஏற்படுத்துகின்றன. இவை எண்ணுன்மிக் குறிமுறை இயக்க நேரத்தில், ஜாவா மெய்நிகர் இயந்திரம் (Java Virtual Machine) என்றழைக்கப்படும், மென்பொருளினால் புரிந்துகொள்ளப்பட்டு அந்தந்த இயங்குதளங்களுக்கு ஏற்றவாறு இயக்கப்படும்.

ஜாவா மற்றும் ஜாவாஸ்கிரிப்ட் ஆகிய மொழிகள் பெயர் மற்றும் நடையளவில் ஒத்திருந்த போதிலும் அவை வெவ்வேறு காரணங்களுக்காகத் தோற்றுவிக்கப்பட்ட மாறுபட்ட மொழிகளாகும்.

வரலாறு[தொகு]

ஆரம்பகால வரலாறு[தொகு]

ஜாவா நிரலாக்க மொழி மற்றும் ஜாவா இயங்குசூழல் ஆகியவை சன் மைக்ரோசிஸ்டம்ஸ் நிறுவனத்தின் உட்புற செயற்றிட்டங்களாக மார்கழி 1990 -ல் ஆரம்பிக்கப்பட்டன. பசுமைத் திட்டம் (Green Project) என்ற பெயரில் கலிஃபோர்னியாவின் மென்லோ பார்க் நகரில் ஆரம்பமான இத்திட்டத்தில் ஜேம்ஸ் காஸ்லிங், பாட்ரிக் நோட்டன், மைக் ஷெரிடன் ஆகியோர் முக்கிய பங்கு வகித்தனர். அடுத்த தலைமுறை (next generation) வீட்டுப் பாவனைக்குரிய இலத்திரனியல் உபகரணங்களுக்கான தொழில்நுட்பத்தை வடிவமைப்பதே இவர்களுடையதும் சன் நிறுவனத்தினதுமான அப்போதைய குறிக்கோளாக இருந்தது.

இப்பணிக்காக இவர்கள் முதலில் சி++ மொழியை பாவிப்பதற்கு எண்ணியிருந்த போதிலும், பின்பு பலவித காரணங்களால் அது நிராகரிக்கப்பட்டது. அவர்கள் வளங்கள் வரையறுக்கப்பட்டதொரு உள்ளமைப்பு இயந்திரம் (embedded system) -ஐ உருவாக்க நினைத்திருந்தனர். சி++ மொழியானது ஏற்படுத்தும் நினைவகக் கால்தடங்கள் (memory footprints) இவ்வாறான இலத்திரனியல் உபகரணங்களுக்குத் தேவைக்கதிகமாகப் பெரிதானதாக இருப்பதும், சி++ மொழிக்கே உரியதான கடினத்தன்மை மென்பொருட் பிழைகள் எற்படக் காரணமாக இருக்கும் என்பதும் இம்மொழி நிராகரிக்கப்பட முக்கியக் காரணங்களாக இருந்தது. அத்துடன் சி++ மொழியானது நினைவகச் சுத்திகரிக்கும் (garbage collection அல்லது GC) வசதிகளைக் கொண்டிருக்கவில்லை. இதனால் மென்பொருளாளர்கள் தாங்களே நினைவகச் சுத்திகரிப்பை ஆற்றவேண்டியிருந்தது. இது மிகக் கடினமானதும் தவறுகள் அதிகமாக எற்பட வாய்ப்புள்ளதுமான ஒரு பணியாகும். மேலும் சி++ மொழியானது மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு, பரவலாக்கப்பட்ட நிரலாக்கம் (distributed programming), இயக்க இழை (threading) போன்ற வசதிகளை கொண்டிருக்காதது மட்டுமின்றி பல்வேறுபட்ட கருவிகளில் உபயோகிக்கத்தக்கவாறு இயங்குதள சார்பின்மையையும் (platform independence) கொண்டிருக்கவில்லை.

1995 இல் சன் மைக்ரோசிஸ்டம்ஸ் ஜாவா 1.0 ஐ வெளியிடத்து. இது பிரபலமான தளங்களினை போலவே"ஒருமுறை எழுதி, எங்கு வேண்டுமானாலும் இயக்கலாம்" உறுதியளித்தார். மிகவும் பாதுகாப்பான இணைய மற்றும் கோப்பு அணுகல் கட்டுப்பாடுகள் அனுமதித்தது.ஜாவா விரைவில் பிரபலமான பின்னர் முக்கிய இணைய உலாவிகளில் வலை பக்கங்களில் உள்ள ஜாவா ஆப்லேட்ஸ்-ஐ இயக்கும் திறன் இணைக்கப்பட்டது.
1998 டிசம்பர் இல் ஜாவா 2 வெளியீட்டிற்கு பின் J2EE நிறுவன பயன்பாடுகள் மற்றும் மொபைல் பயன்பாடுகள் (மொபைல் ஜாவா) பெரிய அளவில் இழந்து கீழே பதிப்பு J2ME இலக்கு. J2SE ஸ்டாண்டர்ட் பதிப்பு நியமிக்கப்பட்ட. 2006 இல், சந்தைப்படுத்தல் நோக்கங்களுக்காக சன்,ஜாவா EE, ஜாவா ME, மற்றும் ஜாவா SE புதிய J2 பதிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டது.
2006,நவம்பர் 13, அன்று, சன் குனு பொது மக்கள் உரிமத்தின்(GPL) கீழ், இலவச மற்றும் திறந்த மூல மென்பொருலாக ஜாவாவின் பெரும்பகுதி வெளியிடப்பட்டது.

2007,மே 8 அன்று, சன் இதை முழுமையான இலவச திறந்த மூல மென்பொருளாக நிபந்தனைகளின் கீழ் விநியோகம் செய்யப்படுகிறது. 2010 முதல் ஒவ்வொரு ஆண்டும் 930 மில்லியன் ஜாவா நிகழ்நேர சூழல் மற்றும் 3 பில்லியன் மொபைல் தொலைபேசிகளில் ஜாவா பதிவிறக்கம் செய்யப்பட்டன.

பதிப்புகள்[தொகு]

பதிப்புகள் வெளி வந்த நாள்
JDK 1.0 ஜனவரி 21, 1996
JDK 1.1 பிப்ரவரி 19, 1997
J2SE 1.2 (டிசம்பர் 8, 1998
J2SE 1.3 மே 8, 2000
J2SE 1.4 பிப்ரவரி 6, 2002
J2SE 5.0 செப்டம்பர் 30, 2004
ஜாவா SE 6 டிசம்பர் 11, 2006
ஜாவா SE 7 ஜூலை 28, 2011
ஜாவா SE 8 March 18, 2014

ஜாவாவின் அடிப்படை கொள்கைகள்[தொகு]

ஜாவா மொழி உருவாக்கப்பட்ட போது ஐந்து முதன்மை இலக்குகள் இருந்தன,அவை
 • எளிய பொருள் சார்ந்த மற்றும் இணக்கமாக இருக்க வேண்டும்
 • வலுவான மற்றும் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும்
 • கட்டமைப்பு-நடுநிலை மற்றும் எங்கும் எடுத்து செல்லக்கூடியதாக இருக்க வேண்டும்
 • உயர் செயல்திறனுடன் இயக்க வேண்டும்

ஜாவாவின் சிறப்பம்சங்கள் :[தொகு]

 • எளிமையானது
 • பலமானது
 • பாதுகாப்பானது
 • இயங்குதள சார்பின்மை
 • எளிதில் ஒரு இயங்குதளத்திலிருந்து மற்றொன்றிற்கு மாற்றலாம்

அனைத்து இயந்திரங்களும் புரிந்துக் கொள்ளக்கூடியது 0 மற்றும் 1 மட்டுமேயாகும். ஜாவா நிரல், நிரல் எழுதப்பட்ட இயந்திரத்திலேயே 0 மற்றும் 1 -ஐ மட்டுமே கொண்ட கோப்புகளாக சேமிக்கப்படுகிறது. இதன் மூலம்தான் ஜாவா நிரலாக்க மொழி இயங்குதள சார்பின்மையை அடைகிறது.

பயண்பாடுகள்[தொகு]

ஜாவா இயங்குதளம்[தொகு]

ஜாவா மொழியில் எழுதப்பட்ட கணினி திரல்கள் எந்த வன்பொருள்/இயக்கதளத்திலும் ஒரே மாதிரி இயங்கும் பண்பு உடையது.குறிப்பிட்ட இயந்திரம் நேரடியாக ஜாவா பைட்குறியீட்டை புரிந்துகொள்ள ஒரு இடைநிலை பிரதிநிதித்துவம் வேண்டும்.ஜாவா பைட்குறியீட்டு நிரல்கள் இயந்திர குறியீடு முறையில் இருக்கும்,இதை வழங்கும் வன்பொருளுக்கு குறிப்பாக எழுதப்பட்ட ஒரு மெய்நிகர் இயந்திரம் (VM) மூலம் புரியவைக்கலாம். இறுதி பயனர்கள் பொதுவாக ஜாவா நிகழ்நேர சூழல் (JRE) முழுமையான ஜாவா பயன்பாடுகளை தங்கள் சொந்த கணினியில் நிறுவியோ அல்லது வலை உலாவியில் ஜாவா ஆப்லேட்ஸாக பயன்படுத்தப்படுகிறது.

செயலாக்கங்கள்[தொகு]

ஜனவரி 27, 2010 இல் சன் மைக்ரோசிஸ்டமிடம் ஜாவா SE இயக்குதளத்தை உத்தியோகபூர்வமாக மேம்படுத்த ஆரக்கிள் நிறுவனம் உரிமம் பெற்றது. இதை தொடர்ந்து மாக் X,விண்டோஸ் மற்றும் சோலாரிஸ் இயங்குதளங்களுக்கான ஆரக்கிள் வெளியிடப்பட்டது.

செயல்திறன்[தொகு]

ஜாவாவில் எழுதப்பட்ட நிரல்கள் சி++ ஐ விட மெதுவாகவும்,அதிக இடம் தேவை படுவதாகவும் இருப்பினும் 1997/1998ல் ஜாவா 1.1 ன் ஒரேநேர தொகுப்பு அறிமுகத்தின் பின் ஜாவா நிரல்களின் செயல்படுத்தும் வேகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்தது. டிசம்பர் 2012 நிலவரப்படி ஜாவா7 சி++ ஐ விட சுமார் 44% மெதுவானதாக தெரிந்தது

தானியங்கி நினைவக மேலாண்மை[தொகு]

ஜாவா நினைவகத்தை நிர்வகிக்க ஒரு தானியங்கி குப்பை சேகரிப்பை பயன்படுத்துகிறது.கோப்புகளை உருவாக்கும் போது தேவையற்ற பகுதிகளை தானாகவே நீக்குகின்றது.ஒரு கோப்புகள் ஏதும் இல்லாமல் இருந்தால், "பூஜ்ய சுட்டிக்காட்டி விதிவிலக்கு" மோளம் அது நீக்கப்பட வேண்டும். இதனால் நிரல்கள் இயங்கும் வேகம் அதிகரிக்கின்றது.

மேற்கோள்கள்[தொகு]

 1. In Java 5.0, several features (the enhanced for loop, autoboxing, varargs, annotations and enums) were introduced, after proving themselves useful in the similar (and competing) language C#. [1][2][3]

புற இணைய இணைப்புகள்[தொகு]

 • மிக எளிமையாக இந்நிரல் மொழியைக்குறித்து கற்பிக்கும் இணையத் தளம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாவா_(நிரலாக்க_மொழி)&oldid=1772195" இருந்து மீள்விக்கப்பட்டது