உள்ளடக்கத்துக்குச் செல்

கத்ரு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கத்ரு, (கத்+உரு, பொருள் வலிமை உள்ள உருவம் பெற்றவள், கேட்டவள்) இந்து தொன்மவியலின்படி, தக்கனின் அறுபது மகள்களில் ஒருவர். மரீசி முனிவரின் மகனான காசிப முனிவர் மணந்த தக்கனின் 13 மகள்களில் கத்ருவும் ஒருவர். காசிப முனிவர் மூலம் ஆயிரம் நாகர்களைப் பெற்றெடுத்தவள். அவர்களில் முதன்மையானவர்கள் தட்சகன் முதலான நாகர்கள்.[1]. அருணன் மற்றும் கருடன் ஆகியோரின் தாயான வினதா கத்ருவின் சக்களத்தி ஆவார்.

வினதை அடிமை ஆதல்

[தொகு]

ஒரு முறை வானத்தில் சென்று கொண்டிருந்த இந்திரனின் உச்சைச்சிரவமென்னும் குதிரையின் நிறம் குறித்து, கத்ரு கேட்டதற்கு, அதன் நிறம் வெண்மை என வினதை கூற, கத்ரு அதன் நிறம் கருமை எனக் கூறியதால், குதிரையின் சரியான நிறம் குறித்த போட்டியில் தோற்றவர், வென்றவர்க்கு அடிமை என ஒப்பந்தமாயிற்று.

கத்ரு போட்டியில் வெல்ல வேண்டி தன் மக்களான ஆயிரக்கணக்கான கருநாகங்களை அழைத்து, உச்சைச்சிரவம் எனும் இந்திரனின் தேவலோக குதிரையின் உடலைச் சுற்றிக் கொள்ளுங்கள் என ஆணையிட, அவ்வாறே கருநாகங்கள் உச்சைச்சிரவம் என்ற வெண் குதிரைச் சுற்றிக் கொள்ள, குதிரை பார்ப்பதற்கு கருநிறமாக மாறியது. கத்ரு உடனே வினதையை அழைத்துக் கொண்டு கருமையாக இருந்த உச்சைச்சிரவம் எனும் குதிரையைக் காட்டினாள். வினதையும் குதிரையின் நிறம் கருமை என ஏற்றுக் கொண்டு, வினதை தன் குழந்தைகளான கருடன் மற்றும் அருணன் உடன் நாகர்களின் தாயான கத்ருவுக்கு அடிமையானாள்.

அடிமைத் தனத்திலிருந்து விடுதலை

[தொகு]

கருடன் கத்ருவிடம் தனது தாயையும் தங்களையும் விடுதலை வேண்டினான். அதற்கு கத்ரு, தேவ லோகத்திலிருந்து எங்களுக்கு அமிர்தம் கொண்டு வந்து தர வேண்டும் என்றதற்கு, கருடனும் தேவலோகத்திலிருந்து அமிர்த கலசத்தை கொண்டு வந்து நாகர்கள் முன்பு தர்ப்பைப்புல் மீது வைத்தார். உடன் வினதா, கருடன் மற்றும் அருணன் நாகர்களின் தாய் கத்ருவிடமிருந்து விடுதலையானர்கள். நாகர்கள் கடலில் குளித்துவிட்டு கலசத்திலிருந்த அமிர்தத்தை உண்ண வருகையில், இந்திரன் அமிர்த கலசத்தை தூக்கிக் கொண்டு சென்று விட்டார். ஏமாந்த நாகர்கள் அமிர்த கலசம் வைத்திருந்த தர்பைப்புல்லை தங்கள் நாக்கினால் நக்கியதால், பாம்பினங்களுக்கு நாக்குகள் பிளவுண்டன.

கத்ரு பிள்ளைகள் [2]

[தொகு]

கத்ரு தனக்கு வலிமை வாய்ந்த பிள்ளைகள் வேண்டும் என்று கணவர் காசிப முனிவரிடம் கேட்டாள். அவர் 105 முட்டைகள் தந்தார். அவற்றால் அவள் 105 பிள்ளைகளைப் பெற்றாள். 104 மகன்கள். ஒரு மகள். அவர்களின் பெயர்கள்:

 1. ஆதிசேசன்
 2. வாசுகி
 3. தட்சகன்
 4. கார்கோடகன்
 5. தனஞ்செயன்
 6. காளியன்
 7. நாகபுராணன்
 8. புஞ்சன்
 9. புரஞ்சகன்
 10. ஏலாபுத்திரன்
 11. வாமணன்
 12. நிலன்
 13. அநிலன்
 14. கல்மாச்
 15. சபலணன்
 16. ஆரியகன்
 17. புண்டிரகன்
 18. விசாலன்
 19. போதகன்
 20. சுமநோகன்
 21. ரதிமுகன்
 22. ததிமுகன்
 23. விமலன்
 24. குண்டலன்
 25. பிண்டகன்
 26. பந்தகன்
 27. ஆப்தன்
 28. கோடரகன்
 29. சங்கபாதன்
 30. சிகன்
 31. நிஷ்டூகன்
 32. ஏமன்
 33. உக்கமுகரன்
 34. நகுசன்
 35. பிங்கலன்
 36. கோகர்ணன்
 37. அவ்வியகர்ணன்
 38. அவிர்முகன்
 39. முதகரன்
 40. கம்பளாகவன்
 41. அசுவநரன்
 42. தானியகன்
 43. உருத்தன்
 44. சுவருத்தன்
 45. சம்வாதகன்
 46. சங்கநாகன்
 47. பிண்டரகன்
 48. அசரன்
 49. சேட்சமகரன்
 50. சுமுகன்
 51. பிண்டநகன்
 52. ரசேட்சமுகன்
 53. பிடரகன்
 54. கரவீரன்
 55. புட்பதவுஷ்டரன்
 56. நகரன்
 57. பலகரன்
 58. சாலகன்பகன்
 59. வில்வயாண்டூரன்
 60. பாதகபராசிதன்
 61. பதங்கக்கிரீவன்
 62. ரத்தாட்சன்
 63. அபராதிகன்
 64. முசீகாதன்
 65. சங்கசரன்
 66. புண்ணிய-தமுசடரன்
 67. அரித்திரன்
 68. அபானமித்திரன்
 69. சோதிகன்
 70. சீவகன்
 71. பராதீதன்
 72. அவக்கிரீவன்
 73. கவர்வியன்
 74. திரிதராட்டிரன்
 75. புட்கரன்
 76. சல்லியன்
 77. வீரஜன்
 78. சாலுண்டன்
 79. கபோதவன்
 80. வில்வகன்
 81. சுபாகு
 82. சலபிண்டன்
 83. அஸ்திபத்திரன்
 84. முகரகோணன்
 85. நாசிகன்
 86. குஞ்சரன்
 87. குரங்கன்
 88. பிரகாரன்
 89. தித்திரி
 90. புரிலன்
 91. பாலகண்டன்
 92. குண்டான்
 93. குதரன்
 94. பிரபகரசு
 95. முதகாண்டன்
 96. வீரன்
 97. குடாரன்
 98. அகுருசன்
 99. காகோதரன்
 100. அரிதி
 101. கர்க்கரசன்
 102. அகர்க்கரன்
 103. குண்டோதரன்
 104. மகோதரன்
 105. ஜரத்காரை

மேற்கோள்கள்

[தொகு]
 1. http://mahabharatham.arasan.info/search/label/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81
 2. தினத்தந்தி நாளிதழ் 7-4-2020
"https://ta.wikipedia.org/w/index.php?title=கத்ரு&oldid=2948090" இலிருந்து மீள்விக்கப்பட்டது