ஓதுதல்
Jump to navigation
Jump to search
கருத்துருக்கள் |
---|
சடங்குகள் |
ஓதுதல் என்பதற்கு படித்தல்; சொல்லுதல்; கற்பித்தல்; இரகசியமாகப் போதித்தல்; செபஞ்செய்தல்; மந்திரம் உச்சரித்தல்; பாடுதல்; தோடம் நீங்குவதற்காக அன்னம் முதலியவற்றிலே மந்திரஞ்சொல்லி உருவேற்றுதல் என்று பொருள்.[1]
இந்து சமயத்தில்[தொகு]
இந்து சமயத்தில் சுருதி, ஸ்மிருதி மந்திரங்களை ஓதுதலை, பாராயணம் செய்வது எனப் பொருள்படும்.
சைவ சமயத்தில்[தொகு]
சைவ சமயத்தில் சிவன் கோயில்களிலும், சைவ பாடசாலைசாலைகளிலும், வீடுகளிலும் தேவாரம், திருவாசகம் போன்ற பன்னிரு திருமுறைகளை இசையுடன் பாடுவதை ஓதுவதல் என்பர். திருமுறைகளை ஓதுதல் பணி செய்பவர்களை ஓதுவார் என அழைப்பர். சைவக் கோயில்களில் சைவத் திருமுறைகளை ஓதுவதற்கு தகுதியும், முறையும் உள்ளது.[2]
வைணவ சமயத்தில்[தொகு]
வைணவக் கோயில்களில் வேத மந்திரங்களுடன் ஆழ்வார்கள் அருளிய நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாடல்களையும் ஓதுதல் செய்வார்கள்.