இட்ரியம்(III) ஆக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இட்ரியம்(III) ஆக்சைடு
Yttrium(III) oxide
Yttrium(III) oxide
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
இட்ரியம்(III) ஆக்சைடு.
வேறு பெயர்கள்
இட்ரியா,
ஈரிட்ரியம் மூவாக்சைடு,
இட்ரியம் செசுகியுனாக்சைடு
இனங்காட்டிகள்
1314-36-9 Y
வே.ந.வி.ப எண் ZG3850000
பண்புகள்
Y2O3
வாய்ப்பாட்டு எடை 225.81 கி/மோல்
தோற்றம் வெண் திண்மம்.
அடர்த்தி 5.010 கி/செ.மீ3, solid
உருகுநிலை 2,425 °C (4,397 °F; 2,698 K)
கொதிநிலை 4,300 °C (7,770 °F; 4,570 K)
கரையாது
ஆல்ககால்
அமிலம்-இல் கரைதிறன்
கரையும்
கட்டமைப்பு
படிக அமைப்பு கனசதுரம் (பிக்சுபைட்), cI80[1]
புறவெளித் தொகுதி Ia-3, No. 206
ஒருங்கிணைவு
வடிவியல்
எண்முகம்
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு ஏதும் பட்டியலிடப்படவில்லை.
R-சொற்றொடர்கள் தீங்கற்றது
S-சொற்றொடர்கள் S24/25
Lethal dose or concentration (LD, LC):
>10,000 மி.கி/கி.கி (எலி, வாய்வழி)
>6000 மி.கி/கி.கி (சுண்டெலி, வாய்வழி)[2]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய நேர் மின்அயனிகள் இசுக்காண்டியம்(III) ஆக்சைடு,
இலந்தனம்(III) ஆக்சைடு
தொடர்புடைய சேர்மங்கள் இட்ரியம் பேரியம்
தாமிர ஆக்சைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

இட்ரியம் ஆக்சைடு (Yttrium oxide) என்பது Y2O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட இட்ரியம் தனிமத்தின் சேர்மமாகும். காற்றில் நிலைப்புத் தன்மையுடன் வெண்மை நிறத்துடன் காணப்படும் இச்சேர்மம் இட்ரியா என்றும் அழைக்கப்படுகிறது. பொருள் அறிவியல் சேர்மங்கள் மற்றும் கனிமச் சேர்மங்கள் ஆகிய இரண்டு வகைச் சேர்மங்களுக்கும் பொதுவானதொரு தொடக்கப் பொருளாக இட்ரியம் ஆக்சைடு விளங்குகிறது.

பயன்கள்[தொகு]

பொருள் அறிவியல்[தொகு]

இட்ரியம் ஆக்சைடு ஒரு மிகமுக்கியமான இட்ரியம் சேர்மமாகும். மற்றும் இது இட்ரியம் ஆர்த்தோ வனேடேட்டு தயாரிப்பில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இரிடியம் ஆக்சைடு பாசுபர்கள், தொலைக்காட்சி படக்குழாய்களில் சிவப்பு வண்ணத்தை வழங்குகிறது. இட்ரியம் இரும்பு கார்னெட்டுகள் , நுண்ணலை வடிப்பிகள் ஆகியனவற்றைத் தயாரிப்பதில் இட்ரியம் ஆக்சைடு பயன்படுத்தப்படுகிறது. உயர் வெப்பநிலை மீக்கடத்திகளானYBa2Cu3O7 தயாரிப்பில் Y2O3 பயன்படுத்தப்படுகிறது. 1-2-3" என அறியப்படும் இக்குறியீடு இதிலுள்ள பகுதிப் பொருட்களின் விகிதத்தைக் குறிப்பிடுகிறது.

2 Y2O3 + 8 BaO + 12 CuO + O2 → 4 YBa2Cu3O7

இத்தொகுப்பு வினை 800 0 செ வெப்பநிலையில் நிகழ்கிறது.

இட்ரியம் ஆக்சைடின் வெப்பக் கடத்துத்திறன் 27 வாட்டுகள்/மீட்டர்•கெல்வின்) ஆகும்.[3]

கனிமத் தொகுப்பு வினை[தொகு]

கனிமச் சேர்மங்கள் தயாரிப்பில் இட்ரியம் ஆக்சைடு ஒரு முக்கியமான தொடக்கப் பொருளாக விளங்குகிறது. கரிம உலோக வேதியியலில், இட்ரியம் ஆக்சைடுஅடர் கந்தக அமிலம் மற்றும் அமோனியம் குளோரைடு ஆகியவற்றுடன் சேர்ந்து வினைபுரிந்து YCl3 சேர்மமாக மாறுகிறது.

சீரொளி அல்லது லேசர்கள்[தொகு]

தொலை நோக்கு திண்மநிலை சீரொளிப் பொருளாக Y2O3 கருதப்படுகிறது. குறிப்பாக இட்டெர்பியத்துடன் இணைந்த சீரொளிகள் ஒரு மாசாக தொடர் செயல்பாடு[4] மற்றும் துடிப்புச் செயல்பாடு[5] ஆகிய இரண்டு வகைகளிலும் திறனுள்ள செயல்பாட்டை அனுமதிக்கின்றன. அதிக ச் செறிவு கிளர்ச்சி நிலை (1% ஒழுங்கு) மற்றும் குறைவுக் குளிர்ச்சி நிலை இரண்டிலும் சீரொளி அதிர்வெண் தணிப்பது மற்றும் கட்டுப்படுத்த இயலாத அகண்ட அலைவரிசை உமிழ்வு ஆகியன நடைபெறுகின்றன.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. Yong-Nian Xu; Zhong-quan Gu; W. Y. Ching (1997). "Electronic, structural, and optical properties of crystalline yttria". Phys. Rev. B56 (23): 14993–15000. doi:10.1103/PhysRevB.56.14993. Bibcode: 1997PhRvB..5614993X. 
  2. "Yttrium compounds (as Y)". Immediately Dangerous to Life and Health. National Institute for Occupational Safety and Health (NIOSH).
  3. P. H. Klein and W. J. Croft (1967). "Thermal conductivity , Diffusivity, and Expansion of Y2O3, Y3Al5O12, and LaF3 in the Range 77-300 K". J. Appl. Phys. 38 (4): 1603. doi:10.1063/1.1709730. Bibcode: 1967JAP....38.1603K. 
  4. J. Kong; D.Y.Tang; B. Zhao; J.Lu; K.Ueda; H.Yagi; T.Yanagitani (2005). "9.2-W diode-pumped Yb:Y2O3 ceramic laser". Applied Physics Letters 86 (16): 161116. doi:10.1063/1.1914958. Bibcode: 2005ApPhL..86p1116K. 
  5. M.Tokurakawa; K.Takaichi; A.Shirakawa; K.Ueda; H.Yagi; T.Yanagitani; A.A. Kaminskii (2007). "Diode-pumped 188 fs mode-locked Yb3+:Y2O3 ceramic laser". Appl.Phys.Lett. 90 (7): 071101. doi:10.1063/1.2476385. Bibcode: 2007ApPhL..90g1101T. 
  6. J.-F.Bisson; D.Kouznetsov; K.Ueda; S.T.Fredrich-Thornton; K.Petermann; G.Huber (2007). "Switching of emissivity and photoconductivity in highly doped Yb3+:Y2O3 and Lu2O3 ceramics". Appl.Phys.Lett. 90 (20): 201901. doi:10.1063/1.2739318. Bibcode: 2007ApPhL..90t1901B. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இட்ரியம்(III)_ஆக்சைடு&oldid=2747270" இலிருந்து மீள்விக்கப்பட்டது