உள்ளடக்கத்துக்குச் செல்

இட்ரியம் ஆக்சி புளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இட்ரியம் ஆக்சி புளோரைடு
பண்புகள்
FOY
வாய்ப்பாட்டு எடை 123.90 g·mol−1
தோற்றம் வெண்மையான தூள்
அடர்த்தி 5.18 கி/செ.மீ³
கட்டமைப்பு
படிக அமைப்பு நாற்கோணம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

இட்ரியம் ஆக்சிபுளோரைடு (Yttrium oxyfluoride) என்பது YOF என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மம் ஆகும்.[1]சாதாராண சுற்றுச்சூழல் நிபந்தனைகளில் இது நிறமற்ற திண்மமாகக் காணப்படுகிறது.[2]

தயாரிப்பு[தொகு]

  • இட்ரியம் புளோரைடின் படிகநிலை நீரேற்றை வெற்றிடத்தில் 900 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தினால் இட்ரியம் ஆக்சிபுளோரைடு உருவாகிறது.
2YF
3
* 1/2H
2
O
YOF + YF
3
+ 2HF
  • இட்ரியம் புளோரைடை 800 பாகை செல்சியசு வெப்பநிலையிலுள்ள மீவெப்ப நீராவியினைக் கொண்டு நீராற்பகுப்புக்கு உட்படுத்தும்போதும் இட்ரியம் ஆக்சிபுளோரைடு உருவாகிறது.
YF3 + H2O → YOF + 2HF

பண்புகள்[தொகு]

இட்ரியம் ஆக்சிபுளோரைடு நாற்கோண படிகத் திட்டத்தில் a = 0.3910 நானோமீட்டர், c = 0.5431 நானோமீட்டர் என்ற கூடு அளவுகள் கொண்ட நிறமற்ற படிகங்களாக உருவாகிறது. அறுகோண படிகத்திட்டதின்படி a = 0.38727 நானோமீட்டர், c = 1.897 நானோமீட்டர், அணு எண் (Z) = 6. என்ற கூடு அளவுருக்கள் கொண்ட படிகமாக உருவாகிறது

பயன்பாடுகள்[தொகு]

நிலையான இட்ரியம் ஆக்சிபுளோரைடு சேர்மம், பிளாஸ்மா செயல்முறை சாதனங்களின் உட்சுவர்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.[3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Mann, A. W.; Bevan, D. J. M. (1970). "The crystal structure of stoichiometric yttrium oxyfluoride, YOF". Acta Crystallographica B26 (12): 2129–2131. doi:10.1107/S0567740870005496. http://scripts.iucr.org/cgi-bin/paper?S0567740870005496. பார்த்த நாள்: 16 June 2017. 
  2. Рипан, Р.; Четяну, И. (1992). Неорганическая химия (in Russian).{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  3. Shiba, Yoshinobu (January 2017). "Stable yttrium oxyfluoride used in plasma process chamber". Journal of Vacuum Science & Technology A: Vacuum, Surfaces, and Films 35 (2): 021405. doi:10.1116/1.4975143. 
  4. Tsunoura, Toru; Yoshida, Katsumi; Yano2, Toyohiko; Kishi, Yukio (2 May 2017). "Fabrication, characterization, and fluorine-plasma exposure behavior of dense yttrium oxyfluoride ceramics". Japanese Journal of Applied Physics 56 (6S2): 06HC02. doi:10.7567/JJAP.56.06HC02. Bibcode: 2017JaJAP..56fHC02T. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இட்ரியம்_ஆக்சி_புளோரைடு&oldid=3023045" இலிருந்து மீள்விக்கப்பட்டது