உள்ளடக்கத்துக்குச் செல்

மோகன்தாசு கரம்சந்த் காந்தியின் படுகொலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் படுகொலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மோகன்தாசு கரம்சந்த் காந்தியின் படுகொலை
மிகச்சிறிய பெரெட்டா கைத்துப்பாக்கியின் படம்
இடம்புது தில்லி
நாள்30 ஜனவரி 1948
தாக்குதலுக்கு
உள்ளானோர்
மோகன்தாசு கரம்சந்த் காந்தி
ஆயுதம்பாதித்தானியங்கும் கைத்துப்பாக்கி (பெரெட்டா)
இறப்பு(கள்)1 (காந்தி)
தாக்கியோர்நாதுராம் கோட்சே

மகாத்மா காந்தி ஜனவரி 30, 1948 அன்று ஒளிவு மறைவின்றி நாதுராம் கோட்சே வால் சுட்டுக்கொல்லப்பட்டது மோகன்தாசு கரம்சந்த் காந்தியின் படுகொலை என்று கூறப்படுகிறது. 1934 ல் இருந்து தொடர்ந்து 5 முறை அவரை கொலை செய்ய முயன்று தோற்று , 6 வது முறை அவர் கொலை செய்யப்பட்டார் .

முதல் முயற்சி

[தொகு]

ஜூன் 25, 1934 அன்று காந்தி புனேவுக்கு தன் மனைவி கஸ்தூரிபாய் காந்தியுடன் மாநகராட்சி அரங்கத்தில் உரையாற்ற சென்றார். அவர்கள் இரண்டு மகிழுந்தில் சென்றனர்.[சான்று தேவை] காந்தியும் அவர் மனைவியும் இருந்த மகிழுந்து அரங்கத்தை சென்று அடையும் முன்னரே, முதலாவது மகிழுந்து அரங்கத்தை வந்து சேர்ந்தது. அந்த வாகனம் அரங்கத்தினுள் நுழைந்த சில நிமிடங்களில் அதனை நோக்கி எறியப்பட்ட கையெறிக்குண்டு அதன் முன் வெடித்தது. இதனால் புனே ஊராட்சித் தலைமை அதிகாரி, இரு காவலர்கள் மற்றும் ஏழு இதர உறப்பினர்கள் பலத்த காயமடைந்தனர். காந்தி எக்காயமுமின்றி உயிர் தப்பினார்.[சான்று தேவை] அது குறித்து எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை யாரும் கைது செய்யப்படவில்லை. இது கப்பூர் விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.[சான்று தேவை]

இரண்டாவது முயற்சி

[தொகு]

மே 1944, காந்தி அகா கான் அரண்மணை சிறையில் இருந்து மலேரியா தாக்குதலினால் விடுவிக்கப்பட்டார். மருத்துவர் அறிவுறுத்தலின் படி பஞ்ச்கனி மலை வாழ்விடத்தில் தங்கவைக்கப்பட்டார். இவர் இருப்பிடத்தை எப்படியோ அறிந்து நாதுராம் கோட்சே குழுவினர் 20 இளைஞர்களுடன் [சான்று தேவை]சிறப்பு பேருந்தில் வந்திறங்கினர். மாலையில் நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் காந்தியை நோக்கி காந்தி எதிர்ப்பு வாசகங்களைக் கூறிக்கொண்டே மிகுந்த ஆவேசத்துடன் உள்ளே நுழைந்தனர். ஆனால் அங்கு இருந்த கூட்ட நெரிசலில் அவர்களால் காந்தியை நெருங்க முடியவில்லை காந்தியை பத்திரமாக அவர் தொண்டர்கள் அழைத்துச் சென்று விட்டனர்[சான்று தேவை].

மூன்றாவது முயற்சி

[தொகு]

காந்தி முகமது அலி ஜின்னாவுடன் பேச்சு வர்த்தை நடத்துவதற்காக செப்டம்பர் 9, 1944 ல் சேவாகிராம் ஆசிரமத்தை விட்டு மும்பைக்கு பயணமானார் வழியில் ஹிந்து மகா சபாவினர் இடைமறித்தனர்.[சான்று தேவை] அவரை மும்பையில் ஜின்னாவுடன் சந்திப்பதற்கு ஆட்சேபம் தெரிவித்தனர். அந்த கூட்டத்தின் தலைவனாக நாதுராம் கோட்சே அவர்கள் காந்தியைக் கொல்வதற்கு முயன்றனர். அவர்களை காவலர்கள் தடுத்து எதற்கு காந்தியை கொல்வதற்கு முயல்கிறாய் என்று வினவியதற்கு வீர் சாவர்க்கர் கட்டளைப்படி அவரைக் கொல்லவேண்டும் என்று கூறினர். டாக்டர் சுசிசிலா நாயர் கப்பூர் ஆணையத்தின் முன் இவ்விவரங்களை அளித்துள்ளார் எனக் கூறப்படுகிறது.[சான்று தேவை]

நான்காவது முயற்சி

[தொகு]

ஜூன் 29, 1946 ல் காந்திக்கென்று ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு தொடர்வண்டியில் பயணித்தபொழுது அத்தொடர்வண்டி மும்பை அருகேயுள்ள நேரல்க்கும் கர்ஜட்க்கும் இடையே தடம் புரண்டது. தொடர் வண்டியின் ஒட்டுநர் அறிக்கை இருப்புப்பாதையின் கடையாணிகளை விசமிகள் வேண்டுமென்றே காந்திக்கு குறிவைத்து கழற்றியுள்ளதால் தடம் புரண்டது என்ற அறிக்கையை சமர்ப்பித்தார். ஏனென்றால் காந்தியின் சிறப்பு தொடர்வண்டி மட்டுமே அவ்வழியில் செல்வதாயிருந்தது. வேறு எந்த வண்டியும் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.[சான்று தேவை]

ஐந்தாவது முயற்சி

[தொகு]
நிற்பவர்கள்: சங்கர் கிஸ்தையா, கோபால் கோட்சே, மதன்லால் பக்வா, திகம்பர் இராமச்சந்திர பாட்கே(ஒப்புதல் வாக்குமூலம் அளித்தவர்). அமர்ந்திருப்பவர்கள்: நாராயண் அப்தே, வினாயக் டி சாவர்க்கர் , நாதுராம் கோட்சே, விஷ்ணு இராமகிருஷ்ண கார்க்கரே

ஜனவரி 20, 1948, மதன்லால் பக்வா, சங்கர் கிஸ்தயா, திகம்பர் பட்கே, விஷ்ணு கார்கேற், கோபால் கோட்சே, நாதுராம் கோட்சே மற்றும் நாராயண் அப்தே இவர்கள் அனைவரும் தில்லியில் பிர்லா பவனில் கூடி அடுத்தக்கட்டத் தாக்குதலைத் தீர்மானித்தனர். அதன்படி காந்தி பேசும் மேடை அருகே வெடிகுண்டை வெடிக்கச்செய்து அதன்மூலம் கலவரம் ஏற்பட்டவுடன் காந்தியை சுட்டுக் கொல்லத் தீர்மானிக்கப்பட்டது. சுட்டுக்கொல்ல திகம்பர் பக்டேவும் அல்லது சங்கர் கிஸ்தி இருவரில் யாராவது நிலைமைக்குத் தகுந்தார்போல் செயல்படவேண்டும் என்ற தீர்மானத்தின்படிப் புறப்பட்டனர்.அதன்படி தனியார் வாகனத்தை பயன்படுத்தி காந்தி பேசும் மேடையருகே மத்னலால் பக்வாவால் பற்றவைக்கப்பட்டது எதிர்பாராதவிதமாக குண்டு வெடிக்கவில்லை இதனால் இந்த முயற்சியும் தோல்வியுற்றது.மதன்லால் பக்வாவை விட்டுவிட்டு மற்றவர்கள் அவ்விடத்தை விட்டு அகன்றனர். காவல்துறை மதன்லால் பக்வாவை விசாரித்ததில் உண்மைகள் தெரிந்தன ஆனால் காவல்துறையால் உடனிருந்தவர்களை பிடிக்கமுடியவில்லை.[சான்று தேவை] அவர்கள் தங்கியிருந்த இருப்பிடத்தைவிட்டு தப்பிவிட்டனர் .[சான்று தேவை]

ஆறாவது மற்றும் இறுதி முயற்சி

[தொகு]

வல்லபாய் படேலுடன் பேசி முடித்த பிறகு, புதுதில்லியின் பிர்லா இல்லத்திலிருந்து 30 சனவரி 1948 அன்று காந்தியடிகள் தன் பேரனின் மருமகளான அபா காந்தி மற்றும் கொள்ளுப் பேத்தி மனு காந்தி ஆகியவர்களின் துணையுடன் தோட்டத்தின் வழியாக மாலைக் கூட்டுப் பிரார்த்தனைக்கு சென்று கொண்டிருந்த போது, நாதுராம் கோட்சே கைத்துப்பாக்கியால் காந்தியடிகளை மாலை 5.12 மணியளவில் சுட்டுக் கொன்றார்.[1][2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Gandhiji shot dead - The Hindu (January 31, 1948)
  2. Gandhi shot dead

வெளி இணைப்புகள்

[தொகு]