உள்ளடக்கத்துக்குச் செல்

மேல் எகிப்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேல் எகிப்து
அறியப்படவில்லை–கிமு 3150
மேல் எகிப்து is located in Egypt
தினீஸ்
தினீஸ்
நெக்கேன் நகரம்
நெக்கேன் நகரம்
நக்கெதா
நக்கெதா
பார்வோன் மூன்றாம் நக்கதாவின் கைப்பற்றிய மேல் எகிப்தின் முக்கிய நகரங்கள் (clickable map)
தலைநகரம்தினீஸ்
பேசப்படும் மொழிகள்பண்டைய எகிப்தியம்
சமயம்
பண்டைய எகிப்திய சமயம்
அரசாங்கம்முடியாட்சி
பார்வோன் 
• அறியப்படவில்லை
அறியப்படவில்லை
• கிமு 3150
நார்மெர் (இறுதி)
வரலாறு 
• தொடக்கம்
அறியப்படவில்லை
• முடிவு
கிமு 3150
பின்னையது
}
[[எகிப்தின் துவக்க கால அரச மரபுகள் - (கிமு 3150 - 2686)]]
தற்போதைய பகுதிகள் எகிப்து

மேல் எகிப்து (Upper Egypt) (அரபு மொழி: صعيد مصر‎ என்பது பண்டைய எகிப்திற்கு தெற்கே உள்ள நூபியாவிற்கும், வடக்கே உள்ள கீழ் எகிப்திற்கும் இடையே பாயும் நைல் ஆற்றின் இருகரைப் பகுதிகளையும் குறிக்கும். மேல் எகிப்தின் முக்கிய நகரங்கள் தினீஸ், நெக்கென், தீபை மற்றும் நக்காடா ஆகும். கிமு 3150-இல் மேல் எகிப்தில் வரலாற்றுக்கு முற்பட்ட அரசமரபுகள் அழிந்து, எகிப்தின் துவக்க கால அரச மரபுகளின் ஆட்சி துவங்கியது. இவ்வாட்சி கிமு 2686-இல் முடிவுற்றது. பின்னர் கிமு 2686 முதல் 2181 முடிய பழைய எகிப்து இராச்சியம் நிலவியது.

கீழ் எகிப்தின் காவல் தெய்வமான கடவுள் வத்செட்டும், மேல் எகிப்தின் கடவுளான நெக்பெட்டும் இரட்டைப் பெண்கள் என பண்டைய எகிப்தியர்கள் அழைத்தனர்.

புவியியல்

[தொகு]

தற்கால எகிப்தின் தெற்கு அஸ்வான் பகுதி முதல் கீழ் எகிப்தின் தேசியத் தலைநகரம் கெய்ரோ வரை உள்ள பகுதியே மேல் எகிப்து ஆகும். அரபு மொழியில் மேல் எகிப்தில் வாழும் மக்களை சையத் அல்லது செய்யது அரபு மக்கள் என்று என்பர்.

அரசியல்

[தொகு]

மேல் எகிப்து நிர்வாக வசதிக்காக 22 நோம் எனும் ஆட்சிப் பகுதிகளாகப் பிரித்துள்ளனர்.[1]

வரலாறு

[தொகு]
ஹெட்ஜெட், எகிப்தின் வெள்ளை மகுடம்

துவக்க வம்ச காலத்திற்கு முன்னர்

[தொகு]

வரலாற்று காலத்திற்கு முன்னர் மேல் எகிப்தின் முக்கிய நகரம் நெக்கேன் ஆகும்.[2] இந்நகரத்தின் காவல் தெய்வம் நெக்பேத் எனும் பருந்து தேவதை ஆகும்.[3]

புதிய கற்காலத்தின் போது கிமு 3600-இல் நைல் ஆற்றின் கரை ஓரங்களில் மக்கள் வேளாண்மை செய்தும் மற்றும் காட்டு விலங்குகளை, வீட்டு விலங்குகளாகப் பழக்கியும், மக்கள் புதிய பண்பாட்டைத் தோற்றுவித்தனர்.

மெசொப்பொத்தேமியாவைப் போன்று, மேல் எகிப்திலும் புதிய களிமண் மட்பாண்டங்கள் தயாரிக்கப்பட்டது. பொருள் உற்பத்தியில் செப்பு உலோகத்தின் பயன்பாடு அதிக அளவில் இருந்தது. [4] மெசொப்பொத்தேமியாவைப் போன்றே செங்கற்களை சூரிய வெளிச்சத்தில் காயவைத்து தயாரித்தனர். மேலும் மெசொப்பொத்தேமியாவைப் போன்றே கட்டிடக் கலை அமைப்புகள் மேல் எகிப்தியர்கள் பின்பற்றி கட்டினர். [4]

மேல் எகிப்தியர்களுக்கும், கீழ் எகிப்தியர்களுக்கும் அடிக்கடி போர் மூண்டது. போரில் மேல் எகிப்திய மன்னர் நார்மெர் என்பவர் கீழ் எகிப்தின் நைல் ஆற்றின் வடிநிலப்பகுதிகளைக் கைப்பற்றி ஒரே குடையின் கீழ் ஆண்டார். [5]

வரலாற்று காலத்திற்கு முந்தைய மேல் எகிப்தின் ஆட்சியாளர்கள்

[தொகு]

மேல் எகிப்தின் ஆட்சியாளர்களின் குறிப்புகள் முழுவதும் உறுதிச் செய்யப்படாத ஒன்றாகும்.

பெயர் உருவம் குறிப்புகள் காலம்
மன்னர் யானை கிமு நான்காயிரம் ஆண்டின் முடிவு
மனன்ர் எருது கிமு நான்காயிரம் ஆண்டு
மன்னர் முதலாம் இசுக்கோர்ப்பியன் கிமு 3200 ?
ஐரி-ஹோர்
கிமு 3150?
பார்வோன் கா [6][7]
கிமு 3100
இரண்டாம் இசுகோர்ப்பியோன்
கிமு 3150
நார்மெர்
மேல் எகிப்தையும், கீழ் எகிப்தையும் ஒன்றிணைத்தவர்.[8] கிமு 3100

மேல் எகிப்தின் ஆட்சிப் பிரிவுகள்

[தொகு]
பண்டைமேல் எகிப்து மற்றும் கீழ் எகிப்தின் ஆட்சிப் பிரிவுகள்
! எண் பண்டைய பெயர் தலைநகரம் தற்காலத் தலைநகரம் மொழிபெயர்ப்பு
1 தா-சேத்தி அபு / எபு (யானை) அஸ்வான் எல்லைப் பகுதி / வில் வடிவ நிலம்
2 வெட்ஜெஸ்-ஹோர் ஜெபா எதுபு ஹோரசின் மணிமுடி
3 நெக்கேன் நெக்கேன் அல்-காப் புனிதத் தலம்
4 வசேத் நிவிட்-சட் / வசேத் (தீபை) கர்னாக் செப்டர்
5 ஹராவி கேப்து கிப்ட் இரு வல்லூறுகள்
6 ஆ-தா லுனெத் தெந்தேரா முதலை
7 சேஷ்ஹெஷ் டயோஸ்போலிஸ் பர்வா ஹு கிலுகிலுப்பு ஒலி எழுப்பும் கருவி
8 அப்த்ஜு அப்த்ஜு அல்-பீர்பா பெரிய நிலம்
9 மின் அபு / கென் - மின் அக்மிம் தங்கம்
10 வத்தெஜ் ஜெபு எடுஃபு நல்லபாம்பு
11 சேத் சாசோதேப் சுதுப் சேத் எனும் விலங்கு
12 து-ப் அட்-செக்கேம் குவா அல்-கெபிர் விரியன் பாம்பு மலை
13 அதேப்-கெண்ட் சவுட்டி அஸ்யுத் மேல் சிசாமோர் மற்றும் வைப்பர்
14 அதேப்-பெகு குசே அல்-குசியா கீழ் சிசாமோர் மற்றும் வைப்பர்
15 அரே நோம் கெமுனு ஹெமொபோலிஸ் [9]
16 ஒரேக்ஸ் நோம் ஹர் ஒரேக்ஸ் [9]
17 அன்பு சகா அல்-கைஸ் அனுபிஸ்
18 செப் துட்ஜோய் எல்-ஹிபா சேத் தேவதை
19 உவாப் பெர்-மெட்ஜெத் எல்-பனசா இரண்டு செங்கோல்
20 அதேப்-கெண்ட் இனாசியா அல்-மதினா தெற்கத்திய அத்தி மரம்
21 அதேப்-பெகு செனகென் பையும் வடக்கத்திய அத்தி மரம்
22 மதேன் தேபிகு அத்பித் கத்தி

மேல் எகிப்தின் பார்வோன்களின் ஆட்சி மையமாக தீபை நகரம் விளங்கியது. சுமேரியாவின் அசிரியர்கள் போரில் தீபை நகரத்தை அழித்தனர். மேல் எகிப்து மற்றும் கீழ் எகிப்தை ஒருங்கிணைந்த பின்னர் கிமு 3150 முதல் கிமு 2690 முடிய 460 ஆண்டுகள் எகிப்தை ஆண்ட முதல் வம்சம் மற்றும் இரண்டாம் வம்ச ஆட்சிக் காலத்தை எகிப்தின் துவக்க அரசமரபுகள் ஆகும். ஒருங்கிணைந்த எகிப்தின் முதல் அரச மரபின் ஆட்சிக் காலத்தில் தலைநகரம் தீனிஸ் நகரத்திலிருந்து மெம்பிசுக்கு மாற்றப்பட்டது. எகிப்தின் முதல் அரச வம்சத்தினர் எகிப்தை கிமு 3150 முதல் கிமு 2890 வரையும்; இரண்டாம் அரச வம்சத்தினர் கிமு 2890 முதல் 2686 முடியவும் ஆண்டனர். [10][11]கிமு 2686ல் பழைய எகிப்து இராச்சியம் தோன்றிய பின் இத்துவக்க கால எகிப்திய அரச மரபுகள் முற்றிலும் மறைந்து போனது.[12] பண்டைய எகிப்திய துவக்க கால அரச மரபு மன்னர்கள் மைய அரசமைப்பை நிறுவி, மாகாணங்களில் அரச குடும்பத்தினரை ஆளுநர்களாக நியமித்தனர்.

பழைய எகிப்து இராச்சியம்கிமு 2686– கிமு 2181

[தொகு]

எகிப்தின் பழைய இராச்சியத்தின் வரலாறு, கிமு 2686-இல் துவங்கி, கிமு 2181-இல் முடிவுற்றது. இந்த இராச்சியத்தின் ஆட்சியாளர்களான பார்வோன்கள் இறந்ததற்கு பின்னர் உடல்களை அடக்கம் செய்வதற்கு பிரமிடுகளை கட்டியதால், பழைய எகிப்திய இராச்சியத்தை பிரமிடுகளின் காலம் என வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுவர். இவ்வம்சத்தின் பார்வோன்கள் புகழ்பெற்ற கிசா பிரடுமிகளைக் கட்டினர்.[13]

எகிப்தின் மத்தியகால இராச்சியம்

[தொகு]

எகிப்தின் மத்தியகால இராச்சியம் கிமு 2050 முதல் 1710 முடிய பண்டைய எகிப்தை ஆண்டது. எகிப்தின் பதினோறாவது வம்ச பார்வோன் இரண்டாம் மெண்டுகோதேப், மேல் எகிப்தையும், கீழ் எகிப்தையும் ஒருங்கிணைத்து, மத்தியகால எகிப்திய இராச்சியத்தை நிறுவினார்.[14]மத்தியகால எகிப்திய இராச்சியத்தில் ஒசைரிஸ் கடவுள் மக்களிடையே புகழ்பெற்றது.[15] [16]11வது வம்சத்தினர் தீபை நகரத்தை தலைநகரமாகக் கொண்டு எகிப்தை ஆண்டனர். 12-வது வம்சத்தினர் லிஸ்டு நகரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தனர்.

புது எகிப்து இராச்சியம்

[தொகு]

எகிப்தின் பதினெட்டாம் வம்சம் முதல் இருபதாம் வம்சத்தினர் வரை புது எகிப்து இராச்சியத்தை கிமு 16-ஆம் நூற்றாண்டு முதல் கிமு 11-ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்தனர். எகிப்தின் 19-வது வம்சத்தை நிறுவிய பார்வோன் ராமேசசை முன்னிட்டு, ராமேசேசியர்களின் காலம் என அழைப்பர்.

இதனையும் காண்க

[தொகு]

மேலும் படிக்க

[தொகு]


மேற்கோள்கள்

[தொகு]
  1. The Encyclopedia Americana Grolier Incorporated, 1988, p.34
  2. (Bard & Shubert 1999, ப. 371)
  3. (David 1975, ப. 149)
  4. 4.0 4.1 (Roebuck 1966, ப. 52–53)
  5. (Roebuck 1966, ப. 53)
  6. Rice 1999, ப. 86.
  7. Wilkinson 1999, ப. 57f.
  8. Shaw 2000, ப. 196.
  9. 9.0 9.1 (Grajetzki 2006, ப. 109–111)
  10. The Predynastic And Early Dynastic Periods
  11. Early Dynastic Period In Egypt
  12. Shaw, Ian, ed. (2000). The Oxford History of Ancient Egypt. Oxford University Press. p. 479. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-815034-2.
  13. "Old Kingdom of Egypt". Ancient History Encyclopedia. https://www.ancient.eu/Old_Kingdom_of_Egypt/. 
  14. Osiris
  15. Osiris
  16. David, Rosalie (2002). Religion and Magic in Ancient Egypt. Penguin Books. p. 156

ஆதார நூற்பட்டியல்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேல்_எகிப்து&oldid=4060846" இலிருந்து மீள்விக்கப்பட்டது