மலேசிய அரசியலமைப்பு திருத்தம் 2022

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மலேசிய அரசியலமைப்பு திருத்தம் 2022

மலேசிய அரசியலமைப்பு திருத்தம் 2022
கூட்டரசு அரசியலமைப்பை திருத்துவதற்கான ஒரு சட்டம்
(An Act to amend the Federal Constitution)
சான்றுசட்டம் A1642
Act A1642
நிலப்பரப்பு எல்லைமலேசியா
இயற்றியதுமக்களவை (மலேசியா)
இயற்றப்பட்ட தேதி14 டிசம்பர் மாதம் 2021
இயற்றியதுமேலவை (மலேசியா)
இயற்றப்பட்ட தேதி23 டிசம்பர் மாதம் 2021
சட்ட வரலாறு
சட்ட முன்வரைவுஅரசியலமைப்பு (திருத்தம்) மசோதா 2021
Constitution (Amendment) Bill 2021
அறிமுகப்படுத்தியதுவான் சுனைடி துவாங்கு ஜாபார்
சுருக்கம்
மலேசியா ஒப்பந்தத்தின் படி சபா மற்றும் சரவாக் அரசியலமைப்புத் தகுதியை மீண்டும் நிலைநிறுத்துவது

மலேசிய அரசியலமைப்பு (திருத்தம்) சட்டம் 2022 (ஆங்கிலம்: Constitution of Malaysia (Amendment) Act 2022; மலாய்: Perlembagaan Persekutuan Malaysia (Pindaan) 2022; சீனம்: 2022 年马来西亚联邦宪法修正案); என்பது சபா, சரவாக் மாநிலங்களைத் தீபகற்ப மலேசியாவுடன் சமமான பங்காளிகளாக நிலைநிறுத்த (To restore Sabah and Sarawak as equal partners to Malaya) இயற்றப்பட்ட சட்டத் திருத்தமாகும்.[1][2]

இந்தச் சட்டம் 1963-ஆம் ஆண்டின் மலேசிய ஒப்பந்தத்தை (Malaysia agreement of 1963) (MA63) முறையாகச் செயல் படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. இந்தச் சட்டச் திருத்தம், 2021 டிசம்பர் 14-ஆம் தேதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் (Dewan Rakyat) ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.[3]

பின்னர் 2022 பிப்ரவரி 11-ஆம் தேதி, மலேசிய மாமன்னரின் ஒப்புதலைப் பெற்ற பிறகு (Royal Assent) இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தது.[4]

பொது[தொகு]

2019-ஆம் ஆண்டில், அப்போதைய பாக்காத்தான் ஹரப்பான் (Pakatan Harapan) கூட்டணி அரசாங்கம்; மலேசிய அரசியலமைப்பில் (Constitution of Malaysia) இதே போன்ற ஒரு திருத்தம் செய்யப் படுவதற்கு முன்மொழிவு செய்தது.

அந்த முன்மொழிவு ஏற்றுக் கொள்ளப்பட்டு இருந்தால், சபா, சரவாக் மாநிலங்கள் மலேசியாவின் தொகுதிப் பிரதேசங்கள் என வரையறுக்கும் 1963-ஆம் ஆண்டின் மலேசிய ஒப்பந்தப் பதிவுகளின் 1 (2)-ஆவது பிரிவைத் திருத்தம் செய்ததாக அமைந்து இருக்கும். (The proposal would have amended Article 1(2) to restore its 1963 wording defining Sabah and Sarawak as constituent territories of Malaysia.)

சபா சரவாக் பிரச்சினைகள்[தொகு]

மலேசிய நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் அந்த முன்மொழிவை ஆதரித்தாலும், அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்றுவதற்குத் தேவையான 2/3 பெரும்பான்மை (2/3rds majority required to pass a constitutional amendment) கிடைக்கவில்லை. அதனால் அந்தத் திருத்தம் (மசோதா) தோல்வி அடைந்தது.

பாக்காத்தான் ஹரப்பான் அரசாங்கத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர்; இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 2021 செப்டம்பர் 16-ஆம் தேதி, பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப், 1963-ஆம் ஆண்டு மலேசிய ஒப்பந்தம் தொடர்பான சபா சரவாக் பிரச்சினைகள் (Issues relating to Sabah and Sarawak on Malaysia Agreement 1963); ஒரு சிறப்பு மன்றத்தின் மூலமாகக் கவனிக்கப்படும் என அறிவித்தார்.

நாடாளுமன்றத்தில் மசோதா[தொகு]

அதன் பின்னர், சபா சரவாக் பிரச்சினைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அவற்றுக்கு பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தலைமை தாங்கினார். அந்தப் பேச்சுவார்த்தைகளில் சபா, சரவாக் முதலமைச்சர்கள் மற்றும் மலேசிய அமைச்சரவையைச் சேர்ந்த எட்டு அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

அதைத் தொடர்ந்து 2021 அக்டோபர் 19-ஆம் தேதி, பிரதமர் துறை அமைச்சர் (சபா மற்றும் சரவாக் விவகாரங்கள்) மேக்சிமஸ் ஓங்கிலி (Maximus Ongkili) ஒரு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று அறிவித்தார். 1963-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மலேசிய ஒப்பந்தம் (Malaysia Agreement 1963); திருத்தம் செய்யப்படுவதற்கு சிறப்பு மன்றம் ஒப்புக் கொண்டால், மலேசிய அரசியலமைப்பின் 1(2) மற்றும் 160(2) சட்டப் பிரிவுகளின் (Articles 1(2) and 160(2) of the Federal Constitution); திருத்தம் தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்படலாம் என்றும் அறிவித்தார்.

ஆழ்கடல் மீன்பிடி உரிமங்கள்[தொகு]

2021 அக்டோபர் 19-ஆம் தேதி நடந்த அதே கூட்டத்தில், சபா மற்றும் சரவாக் மாநில அரசாங்கங்களுக்கு ஆழ்கடல் மீன்பிடி உரிமங்களை (Deep Fishing Licences) வழங்குவதற்கான அதிகாரத்தை வழங்க சிறப்பு மன்றம் ஒப்புக்கொண்டது. இதற்கு முன்னர், ஆழ்கடல் மீன்பிடி உரிமம் வழங்குவதற்கு புத்ராஜெயா மத்திய அரசு சரவாக் மாநில அரசிற்கு தடை விதித்து இருந்தது. [5]

இறுதியாக 2021 நவம்பர் 3-ஆம் தேதி, பிரதமர் துறை அமைச்சர் (சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள்) வான் சுனைடி துவாங்கு ஜாபார் (Wan Junaidi bin Tuanku Jaafar) அவர்களால் அந்தச் சட்டத் திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.[6] அந்தச் சட்டத் திருத்தங்கள் நான்கு மாற்றங்களைக் கொண்டிருந்தன:[7]

சட்டத்திருத்தங்கள்[தொகு]

  • சபா மற்றும் சரவாக் ஆகியவற்றை மலேசியாவின் "பிரதேசங்கள்" என்பதை மீண்டும் நிலைநிறுத்துவதற்கு, பிரிவு 1(2) ஐ திருத்துதல்
    • (Amending Article 1(2) to restore the definition of Sabah and Sarawak as constituent "territories" of Malaysia)
  • மலேசியாவின் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 160-இல்; சபா மற்றும் சரவாக் மாநிலங்கள்; மலேசியக் கூட்டமைப்பில் இணைந்த நாளை மலேசியா தினம் என்பதை 160(2) சட்டத் துணைப் பிரிவாகச் சேர்த்தல்.
    • (Adding to Article 160 of the Constitution of Malaysia (Article 160(2) a formal definition of Malaysia Day as the day when Sabah and Sarawak joined the Federation)
  • 160(2) துணைப் பிரிவில் உள்ள கூட்டமைப்பு என்பதன் வரையறையைத் திருத்தம் செய்தல்
    • (Amending in Article 160(2) the definition of the Federation)
  • சபா மற்றும் சரவாக்கின் பூர்வீகவாசிகளின் வரையறையை பிரிவு 161A-இல் திருத்தம் செய்தல்
    • (Amending in Article 161A the definition of natives of Sabah and Sarawak)

சரவாக் பூர்வீக மக்கள்[தொகு]

  • சரவாக் பூர்வீக மக்கள் என்பவர்கள் யார் என்பதை மத்திய அரசாங்கத்தால் மட்டும் தீர்மானிக்கும் முந்தைய வரையறை பிரிவு 161A (7)-ஐ ரத்து செய்வது; அதுவே சட்டப்பிரிவு 161A-க்கான திருத்தங்களை உள்ளடக்கியது ஆகும். இந்தச் சட்டப் பிரிவின் திருத்தம் மூலமாக யாரை சரவாக் பூர்வீகமாகக் கருதலாம் அல்லது ஏற்றுக் கொள்ளலாம் என்பதை வரையறுக்கும் முடிவு, சரவாக் மாநில அரசாங்கத்திற்கு வழங்கப் படுகிறது.[7]
    • (The amendments to Article 161A included a repeal of Article 161A(7) which provided for a specific federally-imposed definition of a native of Sarawak. This gave the Sarawak state government autonomy to define who could be considered a native of Sarawak instead.)

சரவாக் பூர்வீகம்[தொகு]

  • தயாக் வர்த்தகம் மற்றும் தொழில்துறை கழகம் (Dayak Chamber of Commerce and Industry) இந்த திருத்தத்தை வரவேற்றது. இந்த நிகழ்வை "கனவு நனவானது" என்று வர்ணித்தது. இந்தச் சட்டத் திருத்தம், கலப்பு திருமணங்களின் மூலமாகப் பிறந்த குழந்தைகளைச் சரவாக் பூர்வீகம் என அனுமதிக்கும் உரிமையை சரவாக் மாநில அரசாங்கத்திற்கு வழங்குகிறது. மலேசிய அரசியலமைப்பின் பிரிவு 161A(7) இல்; பட்டியலில் சேர்க்கப்படாத சரவாக் பூர்வீக பழங்குடியினர் சரவாக் பூர்வீகமாக மாறுவதற்கும் இந்தச் சட்டத் திருத்தம் அனுமதி அளிக்கிறது.
    • (The Dayak Chamber of Commerce and Industry welcomed this amendment in particular, calling it a "dream come true" because it would allow the Sarawak state government to include children of mixed marriages and of native tribes not listed in Article 161A(7) in the definition of a Sarawak native.)

கலப்புத் திருமணம் மூலமாக பிறந்த குழந்தைகளின் உரிமை[தொகு]

  • முன்பு "சரவாக் நிலச் சட்டத்தின் கீழ், பூர்வீகப் பெற்றோருக்கும்; அவரின் கலப்புத் திருமணம் மூலமாகப் பிறந்த குழந்தைக்கும் இடையே சொத்துடைமை மாற்றங்கள்; அல்லது பூர்வீக நிலங்களை மாற்றிக் கொடுத்தல் போன்றவை தடைசெய்யப்பட்டு இருந்தன. ஏனெனில் அந்தக் குழந்தை சட்டத்தின் கீழ் சரவாக் பூர்வீகமாகக் கருதப்படவில்லை.[8]
    • (Under the Sarawak Land Code, dealings in native lands, such as transfers, between a native parent and his or her child of mixed marriage are prohibited because the child is not considered a native under the law.)

சட்டத் திருத்தம்[தொகு]

2021 டிசம்பர் 14-ஆம் தேதி, 6 மணிநேர விவாதத்திற்குப் பிறகு, மலேசிய நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்ட திருத்தம்; 199 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மேலும் 21 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கவில்லை.[9] இந்தச் சட்டம் 2022 பிப்ரவரி 11-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.[10]

2022 பிப்ரவரி 15-ஆம் தேதி சரவாக் மாநில சட்டமன்றம் அதன் மாநில அரசியலமைப்பில் சில திருத்தங்களை நிறைவேற்றியது. சரவாக் முதலமைச்சர் (Chief Minister) எனும் மாநிலத்தின் அரசாங்கத் தலைவரின் பதவி; பிரதமர் (Premier of Sarawak) என மாற்றம் செய்யப்பட்டது.[7]

சான்றுகள்[தொகு]

  1. "Official Portal of The Parliament of Malaysia - Bills". www.parlimen.gov.my. பார்க்கப்பட்ட நாள் 2022-01-06.
  2. "Dewan Rakyat passes Constitution (Amendment) Bill 2021". The Edge Markets. 2021-12-14. Archived from the original on 2022-01-06. பார்க்கப்பட்ட நாள் 2022-01-06.
  3. Yunus, Arfa (2021-12-14). "Dewan Rakyat approves constitution amendments to empower Sabah, Sarawak". New Straits Times (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-06.
  4. "MA63 amendments passed". The Star (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-06.
  5. Lee, Stephanie (19 October 2021). "Bill to return Sabah, Sarawak to equal constitutional status to be tabled soon, says Ongkili". The Star. பார்க்கப்பட்ட நாள் 11 November 2021.
  6. Razak, Radzi (3 November 2021). "Govt to table four constitutional amendments to restore Sabah and Sarawak's position". Malay Mail. பார்க்கப்பட்ட நாள் 11 November 2021.
  7. 7.0 7.1 7.2 "MA63 amendments passed". Borneo Post Online. 22 July 2022. https://www.theborneopost.com/2022/07/22/ma63-amendments-passed/. 
  8. Ling, Sharon (16 December 2021). "Constitutional amendment paves way for children of mixed marriages to be recognised as natives, says DCCI" (in en). The Star. https://www.thestar.com.my/news/nation/2021/12/16/constitutional-amendment-paves-way-for-children-of-mixed-marriages-to-be-recognised-as-natives-says-dcci. 
  9. Zulkifli, Ahmad Mustakim (2021-12-14). "MPs unanimously vote for constitutional amendments to empower Sabah, Sarawak". MalaysiaNow (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-14.
  10. "Admendments [sic] to Federal Constitution come into force on Feb 11, says Wan Junaidi". The Star. 11 February 2022. பார்க்கப்பட்ட நாள் 12 February 2022.

வெளி இணைப்புகள்[தொகு]

மேலும் கண்க[தொகு]