ஜொகூர் மாநில ஆட்சிக்குழு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜொகூர் மாநில ஆட்சிக்குழு
Johor State Executive Council
Majlis Mesyuarat Kerajaan Negeri Johor
2022–தற்போது
உருவான நாள்15 மார்ச் 2022
மக்களும் அமைப்புகளும்
அரசுத் தலைவர்ஓன் அபீஸ் காசி (UMNO)
நாட்டுத் தலைவர்சுல்தான் இப்ராகிம் இசுகந்தர்
அமைச்சர்களின் மொத்த எண்ணிக்கை11
உறுப்புமை கட்சி
சட்ட மன்றத்தில் நிலைகூட்டணி அரசு
வரலாறு
Legislature term(s)15-ஆவது ஜொகூர் மாநிலச் சட்டமன்றத் தொடர்

ஜொகூர் மாநில ஆட்சிக்குழு (ஆங்கிலம் Johor State Executive Council (EXCO); மலாய்: Majlis Mesyuarat Kerajaan Negeri Johor (MMKN) என்பது மலேசியா ஜொகூர் மாநில அரசாங்கத்தின் நிர்வாக ஆட்சிக்குழுவாகும். ஜொகூர் சுல்தான் அவர்களால் நியமிக்கப்பட்ட ஜொகூர் மந்திரி பெசார் ஆட்சிக் குழுவிற்கு தலைமை தாங்குகிறார். அவர் ஜொகூர் மாநில சட்டமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற்றவராக இருக்க வேண்டும். ஆட்சிக்குழுவில் மாநிலச் செயலாளர், மாநில சட்ட ஆலோசகர் மற்றும் மாநில நிதி அதிகாரி ஆகியோரும் இடம் பெறுகிறார்கள்.

ஜொகூர் ஆட்சிக்குழு மலேசிய அமைச்சரவை கட்டமைப்பைப் போன்றதாகும். ஆனாலும் இந்த ஆட்சிக்குழு அளவில் சிறியது. கூட்டாட்சி நடுவண் அரசாங்கத்தின் பொறுப்புகளும், மாநில அரசாங்கத்தின் பொறுப்புகளும் வேறுபடுவதால்; மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு இடையிலேயும் பல துறைகளும் மாறுபடுகின்றன.

ஜொகூர் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் ஜொகூர் மந்திரி பெசாரால் தேர்ந்தெடுக்கப்பட்டு சுல்தானால் நியமிக்கப்படுகிறார்கள். ஜொகூர் ஆட்சிக்குழுவிற்கு அமைச்சுகள் இல்லை, மாறாக பல குழுக்கள் உள்ளன. ஒவ்வொரு குழுவும் மாநில விவகாரங்கள், செயல்பாடுகள் மற்றும் பல்வகைத் துறைகளைக் கவனித்துக் கொள்ளும். ஆட்சிக்குழுவின் உறுப்பினர்கள் வழக்கமாக ஒரு குழுவின் தலைவராக இருப்பார்கள்.

அலுவல் சார்ந்த அரசு உறுப்பினர்கள்[தொகு]

அரசாங்கப் பதவி பெயர்
மாநிலச் செயலாளர் அசுமி ரொகானி
மாநிலச் சட்ட ஆலோசகர் அமீர் நசுருதீன்
மாநில நிதி அதிகாரி முகம்ட் ரீதா அப்துல் காதிர்[1]

ஆட்சிக்குழு உறுப்பினர்களின் பட்டியல்[தொகு]

     பாரிசான் நேசனல் (11)

15 மார்ச் 2022 முதல் ஜொகூர் ஆட்சிக்குழுவின் உறுப்பினர்கள்[2][3][4][5] :

பெயர் துறை கட்சி சட்டமன்றத் தொகுதி பதவி தொடக்கம் பதவி முடிவு
ஓன் அபிஸ் காசி
மந்திரி பெசார்
(Onn Hafiz Ghazi)
  • இயற்கை வளங்கள்
  • நிர்வாகம்
  • நிதி
  • திட்டமிடல்
  • பொருளாதார வளர்ச்சி
பாரிசான் நேசனல் (அம்னோ) மாச்சாப் 15 மார்ச் 2022 13 பிப்ரவரி 2024
  • இயற்கை வளங்கள்
  • நிர்வாகம்
  • நிதி
  • திட்டமிடல்
  • பொருளாதார வளர்ச்சி
  • சுற்றுலா[6]
13 பிப்ரவரி 2024 தற்போது
சகாரி சரிப்
(Zahari Sarip)
  • வேளாண்மை
  • வேளாண்மை சார்ந்த தொழில்
  • கிராமப்புற வளர்ச்சி
பூலோ காசாப் 26 மார்ச் 2022
முகமட் சப்னி சுக்கோர்
(Mohd Jafni Md Shukor)
  • வீடு
  • உள்ளூர் அரசு
புக்கிட் பெர்மாய்
கைரின் நிசா
(Khairin Nisa)
  • மகளிர்
  • குடும்பம்
  • சமூக வளர்ச்சி
செரோம்
முகமது கைரி மாட் சா
(Mohd Hairi Mad Shah)
  • இளைஞர்
  • விளையாட்டு
  • தொழில்முனைவோர் மேம்பாடு
  • நிறுவனங்கள்
  • மனித வளம்
லார்க்கின் 13 பிப்ரவரி 2024
  • இளைஞர்
  • விளையாட்டு
  • தொழில்முனைவோர் மேம்பாடு
  • நிறுவனங்கள்
13 பிப்ரவரி 2024 தற்போது
முகமது பாரிட் முகமது காலித்
(Mohd Fared Mohd Khalid)
  • இசுலாமிய சமய விவகாரங்கள்
செமேரா 26 மார்ச் 2022
முகமது பாசிலி முகமது சாலே
(Mohamad Fazli Mohamad Salleh)
  • பொதுப்பணி
  • போக்குவரத்து
  • உள்கட்டமைப்பு
புக்கிட் பாசிர் 13 பிப்ரவரி 2024
  • பொதுப்பணி
  • போக்குவரத்து
  • உள்கட்டமைப்பு
  • தொடர்பு துறை
13 பிப்ரவரி 2024 தற்போது
நோர்லிசா நோ
(Norlizah Noh)
  • கல்வி
  • தகவல்
  • தொடர்பு
ஜொகூர் லாமா 26 மார்ச் 2022 13 பிப்ரவரி 2024
அசுனான் தமின்
(Aznan Tamin)
  • கல்வி
  • தகவல்
தஞ்சோங் சூராட் 13 பிப்ரவரி 2024 தற்போது
லிங் தியான் சூன்
(Ling Tian Soon)
  • சுகாதாரம்
  • ஒற்றுமை
பாரிசான் நேசனல்
(மலேசிய சீனர் சங்கம்)
யோங் பெங் 26 மார்ச் 2022 13 பிப்ரவரி 2024
  • ஆரோக்கியம்
  • சுற்றுச்சூழல்
13 பிப்ரவரி 2024 தற்போது
லீ திங் கான்
(Lee Ting Han)
  • முதலீடு
  • வணிகம்
  • நுகர்வோர் விவகாரங்கள்
பாலோ 26 மார்ச் 2022 13 பிப்ரவரி 2024
  • முதலீடு
  • வர்த்தகம்
  • நுகர்வோர் விவகாரங்கள்
  • மனித வளம்
13 பிப்ரவரி 2024 தற்போது
ரவீன் குமார் கிருஷ்ணசாமி
(Raven Kumar Krishnasamy)
  • சுற்றுலா
  • சுற்றுச்சூழல்
  • கலாசாரம்
  • பரம்பரை
பாரிசான் நேசனல்
(மலேசிய இந்திய காங்கிரசு)
தெங்காரோ 26 மார்ச் 2022 13 பிப்ரவரி 2024
  • ஒற்றுமை
  • கலாசாரம்
  • பாரம்பரியம்
13 பிப்ரவரி 2024 தற்போது

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Senarai Ahli Majlis Mesyuarat Kerajaan". பார்க்கப்பட்ட நாள் 1 November 2021.
  2. "10 Johor exco members sworn in". New Straits Times. https://www.nst.com.my/news/nation/2022/03/783356/10-johor-exco-members-sworn. 
  3. "Johor MB confirms state exco reshuffle two years into his administration". The Star. 11 February 2024. பார்க்கப்பட்ட நாள் 11 February 2024.
  4. "Tanjung Surat rep sworn in as new Johor exco member, portfolio still unclear". The Star. 13 February 2024. பார்க்கப்பட்ட நாள் 14 February 2024.
  5. "Johor Lama rep dropped from Johor exco line-up in reshuffle, four portfolios unchanged". The Star. 13 February 2024. பார்க்கப்பட்ட நாள் 14 February 2024.
  6. "Onn Hafiz taking over tourism portfolio, Johor exco reshuffle on the cards". The Star. 8 February 2024. பார்க்கப்பட்ட நாள் 11 February 2024.

வெளி இணைப்புகள்[தொகு]