கெடா மாநில ஆட்சிக்குழு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கெடா மாநில ஆட்சிக்குழு
Kedah State Executive Council
Majlis Mesyuarat Kerajaan Negeri Kedah
2023–தற்போது
உருவான நாள்14 ஆகஸ்டு 2023
மக்களும் அமைப்புகளும்
அரசுத் தலைவர்சனுசி முகமது நோர்
பெரிக்காத்தான் (PN) பாஸ் (PAS)
நாட்டுத் தலைவர்கெடா சுல்தான் சலாவுதீன்
அமைச்சர்களின் மொத்த எண்ணிக்கை11
உறுப்புமை கட்சி
சட்ட மன்றத்தில் நிலைகூட்டணி அரசு
33 / 36
எதிர்க்கட்சித் தலைவர்பாவ் ஓங் பாவ் எக்
பாக்காத்தான் அரப்பான் (PH)மக்கள் நீதிக் கட்சி (PKR)
வரலாறு
Legislature term(s)15-ஆவது ஜொகூர் மாநிலச் சட்டமன்றத் தொடர்

கெடா மாநில ஆட்சிக்குழு (ஆங்கிலம் Kedah State Executive Council (EXCO); மலாய்: Majlis Mesyuarat Kerajaan Negeri Kedah (MMKN) என்பது மலேசியா கெடா மாநில அரசாங்கத்தின் நிர்வாக ஆட்சிக்குழுவாகும். கெடா சுல்தான் அவர்களால் நியமிக்கப்பட்ட கெடா மந்திரி பெசார் ஆட்சிக் குழுவிற்கு தலைமை தாங்குகிறார். அவர் கெடா மாநில சட்டமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற்றவராக இருக்க வேண்டும். ஆட்சிக்குழுவில் மாநிலச் செயலாளர், மாநில சட்ட ஆலோசகர் மற்றும் மாநில நிதி அதிகாரி ஆகியோரும் இடம் பெறுகிறார்கள்.

கெடா ஆட்சிக்குழு மலேசிய அமைச்சரவை கட்டமைப்பைப் போன்றதாகும். ஆனாலும் இந்த ஆட்சிக்குழு அளவில் சிறியது. கூட்டாட்சி நடுவண் அரசாங்கத்தின் பொறுப்புகளும், மாநில அரசாங்கத்தின் பொறுப்புகளும் வேறுபடுவதால்; மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு இடையிலான பல துறைகளும் மாறுபடுகின்றன.

கெடா ஆட்சிக்குழு உறுப்பினர்கள் கெடா மந்திரி பெசாரால் தேர்ந்தெடுக்கப்பட்டு சுல்தானால் நியமிக்கப்படுகிறார்கள். கெடா ஆட்சிக்குழுவிற்கு அமைச்சுகள் இல்லை; மாறாக பல குழுக்கள் உள்ளன. ஒவ்வொரு குழுவும் மாநில விவகாரங்கள், செயல்பாடுகள் மற்றும் பல்வகைத் துறைகளைக் கவனித்துக் கொள்ளும். ஆட்சிக்குழுவின் உறுப்பினர்கள் வழக்கமாக ஒரு குழுவின் தலைவராக இருப்பார்கள்.

அலுவல் சார்ந்த அரசு உறுப்பினர்கள்[தொகு]

அரசாங்கப் பதவி பெயர்
மாநிலச் செயலாளர் பாக்கார் டின் (Bakar Din)
மாநிலச் சட்ட ஆலோசகர் நோர் அசுரா சோடி (Nor 'Azura Mohamed Zohdi)
மாநில நிதி அதிகாரி அமார் செயிக் மகமூட் நாயிம் (Ammar Shaikh Mahmood Naim)

ஆட்சிக்குழு உறுப்பினர்களின் பட்டியல்[தொகு]

14 ஆகஸ்டு 2023 முதல் கெடா ஆட்சிக்குழுவின் உறுப்பினர்கள்:[1][2]

பெயர் துறை கட்சி சட்டமன்றத் தொகுதி பதவி தொடக்கம் பதவி முடிவு
சனுசி முகமது நோர்
மந்திரி பெசார்
(Muhammad Sanusi Nor)
  • மாநில திட்டமிடல்
  • நிலம், கனிம மற்றும் புவி அறிவியல் விவகாரங்கள்
  • பூமி வளங்கள்
  • நிதி
  • அரசுடன் இணைக்கப்பட்ட நிறுவனங்கள்
  • பொருளாதாரம்
  • வளர்ச்சி
  • வெளி உறவுகள்
பெரிக்காத்தான்
(பாஸ்)
ஜெனெரி சட்டமன்றத் தொகுதி
(Jeneri)
14 ஆகஸ்டு 2023 தற்போது
சித்தி ஆயிசா கசாலி
(Siti Aishah Ghazali)
  • கிராமப்புற வளர்ச்சி
  • வறுமை
  • மனித வள மேம்பாடு
மெர்பாவ் புலாஸ் சட்டமன்றத் தொகுதி
(Merbau Pulas)
21 ஆகஸ்டு 2023
முகமது ஆசாம் அப்துல் சமத்
(Mohd Azam Abd Samat)
  • கல்வி
  • மத விவகாரங்கள்
  • தொடர்பு துறை
சுங்கை லீமாவ் சட்டமன்றத் தொகுதி
(Sungai Limau)
ஆயிம் இல்மன் அப்துல்லா
(Haim Hilman Abdullah)
  • தொழில் மற்றும் முதலீடு
  • உயர் கல்வி
  • அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை
ஜித்ரா சட்டமன்றத் தொகுதி
(Jitra)
முனீர் முகமது யூசப் சக்காரியா
(Munir Mohamad Yusoff Zakaria)
  • பொது பணிகள்
  • இயற்கை வளம்
  • தண்ணிர் விநியோகம்
  • சுற்றுச்சூழல்
கோலா நெராங் சட்டமன்றத் தொகுதி
(Kuala Nerang)
மன்சூர் சக்காரியா
(Mansor Zakaria)
  • வீட்டுவசதி
  • உள்ளூர் அரசு
  • சுகாதாரம்
கோலா கெட்டில் சட்டமன்றத் தொகுதி
(Kuala Ketil)
முகம்மத் ராதி மாட் டின்
(Muhamad Radhi Mat Din)
  • நுகர்வோரியல்
  • வாழ்க்கைச் செலவுகள்
  • இளைஞர்கள் மற்றும் விளையாட்டு
அலோர் மெங்குடு சட்டமன்றத் தொகுதி
(Alor Mengkudu)
அலிமாத்தோன் சாடியா சாட்
(Halimaton Shaadiah Saad)
  • பெண்கள், குடும்பம் மற்றும் சமூக நலம்
  • ஒற்றுமை
பெரிக்காத்தான்
(பெர்சத்து)
புக்கிட் காயூ ஈத்தாம் சட்டமன்றத் தொகுதி
(Bukit Kayu Hitam)
சொவாகிர் கனி
(Dzowahir Ab Ghani)
  • வேளாண்மை
  • பயிர்த் தோட்டங்கள்
  • போக்குவரத்து
சுக்கா மெனாந்தி சட்டமன்றத் தொகுதி
(Suka Menanti)
மொகமட் சாலே சாயிடின்
(Mohd Salleh Saidin)
  • சுற்றுலா
  • கலாசாரம்
  • தொழில்முனைவு
குபாங் ரோத்தான் சட்டமன்றத் தொகுதி
(Kubang Rotan)
ஓங் சியா சென்
(Wong Chia Zhen )
  • மனித வளம்
  • சீன, இந்திய மற்றும் சயாமிய விவகாரங்கள்
  • அரசு சாரா நிறுவனங்கள்
பெரிக்காத்தான் (கெராக்கான்) கூலிம் சட்டமன்றத் தொகுதி
(Kulim)

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sanusi sworn in as Kedah MB". The Star. 14 August 2023. பார்க்கப்பட்ட நாள் 14 August 2023.
  2. "Bersatu gets 3 exco posts in Kedah, down by 2 from previous term". Malaysiakini. 2023-08-21. பார்க்கப்பட்ட நாள் 2023-08-21.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கெடா_மாநில_ஆட்சிக்குழு&oldid=3953998" இலிருந்து மீள்விக்கப்பட்டது