கொல்கத்தா பெருநகரப் பகுதி

ஆள்கூறுகள்: 22°32′28″N 88°20′16″E / 22.5411°N 88.3378°E / 22.5411; 88.3378
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொல்கத்தா பெருநகரப் பகுதி
பெருநகர கொல்கத்தா
பெருநகர் பகுதி
நாடு இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
மைய நகரம்கொல்கத்தா
மாவட்டங்கள்கொல்கத்தா மாவட்டம்
தெற்கு 24 பர்கானா மாவட்டம்
வடக்கு 24 பர்கனா மாவட்டம்
நதியா மாவட்டம்
ஹவுரா மாவட்டம்
ஹூக்லி மாவட்டம்
அரசு
 • நிர்வாகம்கொல்கத்தா பெருநகர மேம்பாட்டுக் குழுமம்
பரப்பளவு
 • மொத்தம்1,886.67 km2 (728.45 sq mi)
மக்கள்தொகை (2011)[1]
 • மொத்தம்14,112,536
 • அடர்த்தி7,500/km2 (19,000/sq mi)
 • தரம்3வது (இந்தியா அளவில்)
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5.30)
இணையதளம்kmda.wb.gov.in

கொல்கத்தா பெருநகரப் பகுதி (Kolkata Metropolitan Area), இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத் தலைநகரான கொல்கத்தா பெருநகர் பகுதியானது, தில்லி, மும்பைக்கு அடுத்து இந்தியாவின் மூன்றாவது மக்கள் தொகை கொண்ட பகுதியாகும். கொல்கத்தா நகரத்தை மையமாகக் கொண்டுள்ள இப்பெருநகர் பகுதியில் கொல்கத்தா மாவட்டம், தெற்கு 24 பர்கானா மாவட்டம், வடக்கு 24 பர்கனா மாவட்டம், நதியா மாவட்டம், ஹவுரா மாவட்டம் மற்றும் ஹூக்லி மாவட்டங்களின் பகுதிகளைக் கொண்டுள்ளது. கொல்கத்தா பெருநகர மேம்பாட்டுக் குழுமம், கொல்கத்தா பெருநகரப் பகுதியின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

கொல்கத்தா பெருநகரப் பகுதியானது 4 மாநகராட்சிகளும், 37 நகராட்சிகளும் கொண்டது.[2][3]

கொல்கத்தா பெருநகர பகுதிகள்[தொகு]

அதிகார வரம்பு
உள்ளாட்சி அமைப்புகள் பெயர் மொத்தம்
மாநகராட்சிகள் கொல்கத்தா மாநகராட்சி, பிதான்நகர் மாநகராட்சி, ஹவுரா மாநகராட்சி, சந்தன்நகர் மாநகராட்சி 4
நகராட்சிகள்
1. வடக்கு 24 பர்கனா மாவட்டம்
பராநகர், பராசத், பரக்பூர், பட்பாரா, டம் டம், கருளியா, ஹலிசாகர், கமர்ஹட்டி, கஞ்சரபரா, கார்தா, மத்தியகிராம், நய்ஹட்டி, புது பரக்பூர், வடக்கு பரக்பூர், வடக்கு டம் டம், பனிஹட்டி, தெற்கு டம் டம், டிட்டாகர்
2. தெற்கு 24 பர்கானா மாவட்டம்
பரூய்பூர், பட்ஜ் பட்ஜ், ஜெய்நகர் மஜில்பூர், மகேஷ்தலா, புஜாலி, ராஜ்பூர் சோனார்பூர், நரேந்திரபூர்
3. நதியா மாவட்டம்
கயஷ்பூர், கல்யாணி
4. ஹவுரா மாவட்டம்
உலுபெரியா பள்ளி
5. ஹூக்ளி மாவட்டம்
கூக்ளி-சூச்சுரா, வைத்தியபதி, பத்ரேஸ்வர், பன்ஸ்பெரியா, சம்ப்தனி, தன்குனி, கோன்நகர், ரிஷ்ரா, ஸ்ரீராம்பூர் செராம்பூர் உத்தர்பாரா கோட்டுருங்
37

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 1,886.67 சதுர கிலோ மீட்டர் பரப்புளவு கொண்ட கொல்கத்தா பெருநகரப் பகுதியின் மக்கள் தொகை 1,41, 12,536 ஆகும். இதன் மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 7,400 பேர் வாழ்கின்றனர்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://censusindia.gov.in/2011-prov-results/paper2/data_files/india2/Million_Plus_UAs_Cities_2011.pdf பரணிடப்பட்டது 15 திசம்பர் 2011 at the வந்தவழி இயந்திரம்[bare URL PDF]
  2. Kolkata பரணிடப்பட்டது 8 மார்ச்சு 2012 at the வந்தவழி இயந்திரம். Metropolis.org.
  3. "Chapter II – The Vision _ Evolution of Kolkata Metropolitan Area" (PDF). jnnurmmis.nic.in. Archived from the original (PDF) on 11 April 2009. Retrieved 23 December 2017.

வெளி இணைப்புகள்[தொகு]