தெற்கு 24 பர்கனா மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெற்கு 24 பர்கனா மாவட்டம்
দক্ষিণ চব্বিশ পরগণা জেলা
தெற்கு 24 பர்கனாமாவட்டத்தின் இடஅமைவு மேற்கு வங்காளம்
மாநிலம்மேற்கு வங்காளம், இந்தியா
நிர்வாக பிரிவுகள்இராஜதானி கோட்டம்
தலைமையகம்ஆலிப்பூர்
பரப்பு9,960 km2 (3,850 sq mi)
மக்கட்தொகை81,61,961 (2011)
மக்கள்தொகை அடர்த்தி819/km2 (2,120/sq mi)
நகர்ப்புற மக்கட்தொகை1,089,730
படிப்பறிவு77.51%
பாலின விகிதம்956
மக்களவைத்தொகுதிகள்5
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை30
முதன்மை நெடுஞ்சாலைகள்தேசிய நெடுஞ்சாலை 117
சராசரி ஆண்டு மழைபொழிவு1750 mm
அதிகாரப்பூர்வ இணையத்தளம்
மேற்கு வங்காளத்தின் தென்கிழக்கில் அமைந்த தெற்கு 24 பர்கனா மாவட்டம் எண் 18

தெற்கு 24 பர்கனா மாவட்டம் (South 24 Parganas district) (Pron: pɔrɡɔnɔs), கிழக்கு இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் 23 மாவட்டங்களில் ஒன்றாகும். இராஜதானி கோட்டத்தில் அமைந்த ஏழு மாவட்டங்களில் இம்மாவட்டமும் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் தலைமையிட நகரம் அலிப்பூர் ஆகும்.

மேற்கு வங்காள மாநிலத்தின் அதிக மக்கள்தொகை கொண்ட மாவட்டங்களில் இம்மாவட்டம் இரண்டாம் இடத்தை வகிக்கிறது. பரப்பளவில் முதல் இடத்தை வகிக்கிறது. மக்கள்தொகையில் 640 இந்திய மாவட்டங்களில் இம்மாவட்டம் ஆறாம் இடத்தை வகிக்கிறது.[1]

இம்மாவட்டத்தின் ஒரு பகுதி கொல்கத்தா நகரத்தை ஒட்டியும், ஒரு பகுதி சுந்தரவனக்காடுகள் ஒட்டியும் அமைந்துள்ளது.

பர்கனா பெயர்க் காரணம்[தொகு]

தில்லி சுல்தானகத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட வேளாண்மை நில அலகு என்ற பர்கனா என்ற சொல் பாரசீக மொழிச் சொல்லாகும். ஒரு பர்கனா என்பது மௌசா (mouza) எனப்படும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கிராமங்களின் சிறு தொகுப்பாகும். பர்கனாவின் மிகப் பெரிய தொகுப்பிற்கு தரஃபு அல்லது மாவட்டம் எனப்படும். பர்கனா முறை இந்தியாவை ஆண்ட பிரித்தானிய இந்தியாவின் கவர்னர் ஜெனரல் காரன் வாலிஸ் 1793-ஆம் ஆண்டில், பர்கனா நில அளவை முறை ஒழிக்கப்பட்டு வருவாய் மாவட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது.[2]

மாவட்ட எல்லைகள்[தொகு]

தெற்கு 24 பர்கனா மாவட்டத்தின் வடக்கில் கொல்கத்தா மாவட்டம், வடகிழக்கில் வடக்கு 24 பர்கனா மாவட்டம், தெற்கில் வங்காள விரிகுடா, மேற்கில் கிழக்கு மிட்னாபூர் மாவட்டம், வடமேற்கில் ஹவுரா மாவட்டம் எல்லைகளாக அமைந்துள்ளது.

பொருளாதாரம்[தொகு]

நெல் வேளாண்மை, மீன் வளர்ப்பு உற்பத்திக் கூடங்கள், தொழிற்சாலைகள் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்காக மாவட்டத்தின் மேற்கு பகுதியில் பால்ட்டா எனும் பகுதியில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைந்துள்ளது.

2006-ஆம் ஆண்டில் இந்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை படி, பொருளாதாரத்தில் பின்தங்கிய இந்திய மாவட்டங்களில் 250வது இடத்தில் உள்ளது.

நிலவியல்[தொகு]

இம்மாவட்டத்தின் தெற்கு பகுதியில் கங்கை ஆறு, பிரம்மபுத்திரா ஆறு மற்றும் பத்மா ஆறுகள் வங்காள விரிகுடாவின் வடிநிலத்தில் கலக்கும் இடத்தில் அடர்ந்த சுந்தரவனக்காடுகள் அமைந்துள்ளது. இக்காட்டில் வங்காளப் புலிகள் நிறைந்துள்ளது.

சுந்தரவன சதுப்புக் காட்டை யுனேஸ்கோ நிறுவனம், உலகப்பாரம்பரியக்களமாக அறிவித்துள்ளது. சுந்தரவனக்காட்டில் சுந்தரவனம் உயிர்க்கோளக் காப்பகம் அமைந்துள்ளது.

மாவட்ட நிர்வாகம்[தொகு]

9,960 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் நிர்வாக வசதிக்காக அலிப்பூர் சதர் உட்கோட்டம், பருய்பூர் உட்கோட்டம், கன்னிங் உட்கோட்டம் மற்றும் டையமண்ட் துறைமுகம் உட்கோட்டம், காக்தீவு உட்கோட்டம் என ஐந்து உட்கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த உட்கோட்டங்களில் இருபத்து ஒன்பது வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், ஏழு நகராட்சி மன்றங்கள் அமைந்துள்ளது. [3]

இம்மாவட்டத்தில் முப்பத்து மூன்று காவல் நிலையங்களும், இருபத்தி ஒன்பது வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், 312 ஊராட்சி மன்றங்கள் கொண்டுள்ளது.

அலிப்பூர் சதர் உட்கோட்டம்[தொகு]

இந்த உட்கோட்டத்தில் அலிப்பூர் தாகுர்புகுர்-மகேஷ்தலா, விஷ்ணுபூர்-I, விஷ்ணுபூர்-II, பட்ஜ்-பட்ஜ்-I, மற்றும் பட்ஜ்-பட்ஜ்-II என ஐந்து ஊராட்சி ஒன்றியங்களும், பட்ஜ்-பட்ஜ், மகேஷ்தலா மற்றும் புஜாலி என மூன்று நகராட்சி மன்றங்களையும் கொண்டுள்ளது.

பருய்பூர் உட்கோட்டம்[தொகு]

இந்த உட்கோட்டத்தில் சோனார்பூர், ஜாய்நகர்-I, ஜாய்நகர்-II, குல்தாலி, பருய்பூர், பான்கர்-I மற்றும் பான்கர்-II என ஏழு வட்டார வளர்ச்சி அலுவலகங்களும் மற்றும் ஜாய்நகர், பருய்புர் மற்றும் ராஜ்புர்-சோனார்புர் என மூன்று நகராட்சி மன்றங்கள் அமைந்துள்ளது.

கன்னிங் உட்கோட்டம்[தொகு]

இந்த உட்கோட்டத்தில் கன்னிங்-I, கன்னிங்-II, வசந்தி மற்றும் கஸ்பா என நான்கு வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் உள்ளது.

டையமண்ட் துறைமுகம் உட்கோட்டம்[தொகு]

இந்த உட்கோட்டத்தில் மொக்ரஹட்-I, மொக்ரஹட்-II, மந்திரபஜார், குல்பி, பால்டா, டையமண்ட் துறைமுகம்-I, டையமண்ட் துறைமுகம்-II, மதுராபூர்-I, மதுராபூர்-II என ஒன்பது வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் மற்றும் டையமண்ட் துறைமுகம் நகராட்சி மன்றம் உள்ளது.

காக்தீவு உட்கோட்டம்[தொகு]

இந்த உட்கோட்டத்தில் காக்தீவு, நம்கானா, சாகர் மற்றும் பதார்பிரதிமா எனும் நான்கு வட்டாரா வளர்ச்சி அலுவலகங்கள் உள்ளது.[3][4]

அரசியல்[தொகு]

மக்களவை தொகுதிகள்[தொகு]

தெற்கு 24 பர்கனா மாவட்டம் ஜெய்நகர் மக்களவை தொகுதி (SC), மதுராப்பூர் மக்களை தொகுதி (SC), டைமண்ட் துறைமுகம் தொகுதி, ஜாதவ்பூர் மக்களவை தொகுதி மற்றும் கொல்கத்தா (தெற்கு) மக்களவை தொகுதி என ஐந்து மக்களவை தொகுதிகளை கொண்டுள்ளது.[5]

சட்டமன்ற தொகுதிகள்[தொகு]

இந்த மாவட்டத்தில் 1. கோசபா சட்டமன்ற தொகுதி, 2. வசந்தி சட்டமன்ற தொகுதி 3. குல்தாலி சட்டமன்ற தொகுதி 4. பதார்பிரதிமா சட்டமன்ற தொகுதி 5. காக்தீப் சட்டமன்ற தொகுதி 6. சாகர் சட்டமன்ற தொகுதி 7. குல்பி சட்டமன்ற தொகுதி 8. இராய்டிகி சட்டமன்ற தொகுதி 9. மந்திர்பஜார் சட்டமன்ற தொகுதி 10. ஜெய்நகர் சட்டமன்ற தொகுதி, 11. பருய்பூர் கிழக்கு சட்டமன்ற தொகுதி, 12. கன்னிங் கிழக்கு சட்டமன்ற தொகுதி, 13. கன்னிங் மேற்கு சட்டமன்ற தொகுதி, 14. பருய்பூர் மேற்கு சட்டமன்ற தொகுதி, 15. மாக்ரஹட் கிழக்கு சட்டமன்ற தொகுதி, 16. மாக்ரஹட் மேற்கு சட்டமன்ற தொகுதி, 17. டைமண்ட் துறைமுகம் சட்டமன்ற தொகுதி, 18. பால்டா சட்டமன்ற தொகுதி, 19. சத்கச்சியா சட்டமன்ற தொகுதி, 20. விஷ்ணுபூர் சட்டமன்ற தொகுதி, 21. சோனார்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி, 22. பாங்கர் சட்டமன்ற தொகுதி, 23. கஸ்பா சட்டமன்ற தொகுதி, 24. ஜாதவ்பூர் சட்டமன்ற தொகுதி, சோனார்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி, 25. டோலிகஞ்ச் சட்டமன்ற தொகுதி, 26. பெஹல்லா கிழக்கு சட்டமன்ற தொகுதி, 27. பெஹல்லா மேற்கு சட்டமன்ற தொகுதி, 28. மகேஸ்தாலா சட்டமன்ற தொகுதி, 29. பட்ஜ் பட்ஜ் சட்டமன்ற தொகுதி மற்றும் 30. மேதியாபுருஸ் சட்டமன்ற தொகுதிகளை கொண்டுள்ளது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை ஆக 81,61,961 உள்ளது. அதில் ஆண்கள் 41,73,778 மற்றும் பெண்கள் 39,88,183 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 956 வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 819 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 77.51% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 83.35 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 71.40 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 1,025,679 ஆக உள்ளது.[6]

சமயம்[தொகு]

இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள்தொகை 5,155,545 ஆகவும், இசுலாமியர் மக்கள்தொகை 2,903,075 ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள்தொகை 66,498 ஆகவும், சமயம் குறிப்பிடாதவர்கள் 24,529 ஆகவும், பிற சமயத்து மக்கள்தொகை கணிசமாக உள்ளது.[7]

போக்குவரத்து[தொகு]

இம்மாவட்டத்தின் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை 117 நாட்டின் பிற பகுதிகளை தரைவழியாக இணைக்கிறது. இம்மாவட்டத்தின் புதுஅலிப்பூர் தொடருந்து நிலையத்திலிருந்து நாட்டின் பிற பகுதிகளை இணைக்கும் தொடருந்து வண்டிகள் புறப்படுகிறது.[8]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "District Census 2011". Registrar General and Census Commissioner, India. 2011. பார்க்கப்பட்ட நாள் 2013-05-28.
  2. "A Catalogue of Manuscript and Printed Reports, Field Books, Memoirs, Maps ..." Vol. iv, "Containing the treaties, etc., relating to the states within the Bombay presidency"
  3. 3.0 3.1 (RevisedMarch-2008).doc "Directory of District, Sub division, Panchayat Samiti/ Block and Gram Panchayats in West Bengal". National Informatics Centre, India. 19 March 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-12-03. {{cite web}}: Check |url= value (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "District Profile". Official website of South 24 Parganas district. Archived from the original on 2009-02-07. பார்க்கப்பட்ட நாள் 2008-12-03.
  5. "PARLIAMENTARY CONSTITUENCY MAP, South 24 Parganas". Archived from the original on 2012-03-22. பார்க்கப்பட்ட நாள் 2011-04-17.
  6. http://www.censusindia.gov.in/2011census/dchb/1917_PART_B_DCHB_SOUTH%20TWENTY%20FOUR%20PARGANAS.pdf
  7. http://www.census2011.co.in/census/district/17-south-twenty-four-parganas.html
  8. http://etrain.info/in?STATION=NACC

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தெற்கு_24_பர்கனா_மாவட்டம்&oldid=3890915" இலிருந்து மீள்விக்கப்பட்டது