உள்ளடக்கத்துக்குச் செல்

ஜல்பைகுரி

ஆள்கூறுகள்: 26°31′N 88°44′E / 26.52°N 88.73°E / 26.52; 88.73
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


ஜல்பைகுரி
மாநகராட்சி
TOP TO BOTTOM :
டீஸ்டா ஆறு,
ராய்கட்,
மகாத்மா காந்தி சாலை,
குறுகிய சந்து,
வைகுந்தப்பூர் அரண்மனை,
தர்லா ஆறு
நகரக் காட்சி
ஜல்பைகுரி is located in மேற்கு வங்காளம்
ஜல்பைகுரி
ஜல்பைகுரி
இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் அமைவிடம்
ஜல்பைகுரி is located in இந்தியா
ஜல்பைகுரி
ஜல்பைகுரி
ஜல்பைகுரி (இந்தியா)
ஆள்கூறுகள்: 26°31′N 88°44′E / 26.52°N 88.73°E / 26.52; 88.73
நாடு இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
மாவட்டம்ஜல்பைகுரி
நிறுவப்பட்ட ஆண்டு1869
தோற்றுவித்தவர்பிரித்தானிய இந்தியா
அரசு
 • வகைமாநகராட்சி
 • நிர்வாகம்ஜல்பைகுரி மாநகராட்சி மன்றம்
 • மேயர்(அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு)
பரப்பளவு
 • மொத்தம்90.29 km2 (34.86 sq mi)
 • பரப்பளவு தரவரிசை6-ஆம் இடம் (மேற்கு வங்காளத்தில்)
ஏற்றம்
89 m (292 ft)
மக்கள்தொகை
 (2011)[1]
 • மொத்தம்3,03,874
 • தரவரிசை9-ஆம் இடம் (மேற்கு வங்காளத்தில்)[2]
 • அடர்த்தி3,400/km2 (8,700/sq mi)
இனம்ஜல்பைகுரியர்கள்
மொழிகள்
 • அலுவல்வங்காளம்[3][4]
 • Additional officialஆங்கிலம்[3]
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
735 101-735 110 (city limits), 735120-735135 (suburbs)
தொலைபேசி குறியீடு+91356
வாகனப் பதிவுWB-71, WB-72 2
மக்களவைத் தொகுதிஜல்பைகுரி மக்களவைத் தொகுதி, அலிப்பூர்துவார் மக்களவைத் தொகுதி
சட்டமன்றத் தொகுதிகள்ஜல்பைகுரி சட்டமன்றத் தொகுதி, ராஜ்கஞ்ச் சட்டமன்றத் தொகுதி, (தனி), மைனாகுரி சட்டமன்றத் தொகுதி, தப்கிராம்-பூல்பாரி சட்டமன்றத் தொகுதி,
இணையதளம்jalpaigurimunicipality.org
1The coordinates given here are in metric system and based upon the Microsoft Encarta Reference Library Map Center 2005 2 The Vehicle Code given here based upon the Jalpaiguri District Court documentations.

ஜல்பைகுரி (Jalpaiguri) கிழக்கு இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் வடக்கில் அமைந்த ஜல்பைகுரி மாவட்ட நிர்வாகத் தலைமையிட நகரமும், மாநகராட்சியும் ஆகும். தீஸ்தா ஆற்றின் கரையில் அமைந்த ஜல்பைகுரி நகரம், கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் அமர்வு (Bench) செயல்படுகிறது. இந்நகரத்தில் ஜல்பைகுரி அரசு பொறியியல் கல்லூரி, வடக்கு வங்காளப் பல்கலைக்கழகத்தின் வளாகம், வடக்கு வங்காள மருத்துவக் கல்லூரி மற்றும் ஜல்பைகுரி விளையாட்டு கிராமம் செயல்படுகிறது. சிலிகுரியிலிருந்து 35 கிமீ தொலைவில் ஜல்பைகுரி உள்ளது.

பெயர்க் காரணம்

[தொகு]

பூட்டானிய மொழியில் ஜல்பைகுரி என்பதற்கு கம்பளி ஆடைகள் விற்கும் இடம் எனப்பொருளாகும்.[5]

புவியியல்

[தொகு]

ஜல்பைகுரி நகரம் 26°31′N 88°44′E / 26.52°N 88.73°E / 26.52; 88.73 பாகையில் அமைந்துள்ளது.[6] இது கடல்மட்டத்திலிருந்து 75 மீட்டர் (246 அடி) உயரத்தில் உள்ளது. ஜல்பைகுரியில் டீஸ்டா ஆறு பாய்கிறது.

மக்கள்தொகை பரம்பல்

[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஜல்பைகுரி நகரத்தின் மொத்த மக்கள்தொகை 1,07,341[7] (அதில் ஆண்கள் 53,708 மற்றும் பெண்கள் 53,633 ), ஜல்பைகுரி மாநகரத்தின் புறநகர் பகுதியுடன் சேர்த்து மொத்த மக்கள்தொகை 1,69,002[8] (அதில் ஆண்கள் 85,226 மற்றும் பெண்கள் 83,8787) 0–6 ஆறுவயதிற்குட்டவர்களின் எண்ணிக்கை 14,522 ஆகும். எழுத்தறிவு 90.64 % ஆகவுள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 983 பெண்கள் வீதம் உள்ளனர். இந்நகர மக்கள்தொகையில் இந்துக்கள் 96.16 %, இசுலாமியர்கள் 2.94 %, கிறித்தவர்கள் 0.42 %, பௌத்தர்கள் 0.35%, மற்ற சமயத்தவர்கள் 0.13% ஆகவுள்ளனர்.

ஜல்பைகுரி உள்ளாட்சி நிர்வாகம்

[தொகு]

45 மாமன்ற உறுப்பினர்களுடன் கூடிய ஜல்பைகுரி மாநகராட்சி, இந்நகரத்தின் உள்ளாட்சி நிர்வாகத்தை மேற்கொள்கிறது.

போக்குவரத்து

[தொகு]

தொடருந்து நிலைம்

[தொகு]

ஜல்பைகுரி மாநகரம் மற்றும் புறநகரங்களில் ஐந்து தொடருந்து நிலையங்களைக் கொண்டது. அவைகள்;

  1. ஜல்பைகுரி தொடருந்து நிலையம்
  2. ஜல்பைகுரி ரோடு தொடருந்து நிலையம்
  3. மோதிநகர் தொடருந்து நிலையம்
  4. இராணிநகர் ஜல்பைகுரி தொடருந்து நிலையம்
  5. புது ஜல்பைகுரி தொடருந்து சந்திப்பு நிலையம்

பேருந்து வசதிகள்

[தொகு]

வடக்கு வங்காள போக்குவரத்துக் கழக பேருந்துகள், ஜல்பைகுரி நகரத்திலிருந்து, மேற்கு வஙகாளத்தின் பிற நகரங்களையும் மற்றும் பிகார் மாநில தலைநகர் பாட்னா மற்றும் பூட்டான் நாட்டின் தெற்கு பகுதிகளுடன் இணைக்கிறது.

புகழ்பெற்றவர்கள்

[தொகு]

தட்பவெப்பம்

[தொகு]

ஜல்பைகுரி நகரம் கோடைக்காலம், மழைக்காலம் மற்றும் குளிர்காலம் என மூன்று தட்பவெப்பங்களைக் கொண்டது. கோடைக்காலத்தில் இங்கு பதிவான உயர்ந்தபட்ச வெப்பநிலை 41.3 பாகை செல்சியஸ் ஆகும். மழைக்காலத்தில் அதிக கனமழைபொழிவு கொண்டிருக்கும். குளிர்காலத்தில் 8 - 14 பாகை செல்சியஸ் வெப்பம் கொண்டிருக்கும்.[10] கடந்த சில ஆண்டுகளாக இந்நகரத்தில் அதிக வெப்பமும்; மழைப்பொழிவு குறைந்தும் வருகிறது. [11]

தட்பவெப்ப நிலைத் தகவல், ஜல்பைகுரி
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 23
(73)
25
(77)
28
(82)
31
(88)
33
(91)
35
(95)
34
(93)
31
(88)
28
(82)
26
(79)
24
(75)
23
(73)
28.4
(83.2)
தாழ் சராசரி °C (°F) 3
(37)
10
(50)
13
(55)
21
(70)
24
(75)
25
(77)
26
(79)
25
(77)
23
(73)
16
(61)
10
(50)
4
(39)
16.7
(62)
பொழிவு mm (inches) 8
(0.31)
18
(0.71)
33
(1.3)
94
(3.7)
300
(11.81)
658
(25.91)
818
(32.2)
643
(25.31)
538
(21.18)
142
(5.59)
13
(0.51)
5
(0.2)
3,266
(128.58)
ஆதாரம்: Jalpaiguri Weather
தட்பவெப்பநிலை வரைபடம்
Jalpaiguri
பெமாமேஜூஜூ்செடி
 
 
14
 
26
11
 
 
19
 
29
15
 
 
25
 
34
19
 
 
31
 
38
24
 
 
87
 
39
26
 
 
275
 
39
26
 
 
334
 
32
26
 
 
338
 
32
25
 
 
239
 
32
25
 
 
78
 
31
22
 
 
15
 
29
17
 
 
24
 
26
12
வெப்பநிலை (°C)
மொத்த மழை/பனி பொழிவு (மிமீ)
Imperial conversion
JFMAMJJASOND
 
 
0.6
 
79
52
 
 
0.7
 
84
59
 
 
1
 
93
66
 
 
1.2
 
100
75
 
 
3.4
 
102
79
 
 
11
 
102
79
 
 
13
 
90
79
 
 
13
 
90
77
 
 
9.4
 
90
77
 
 
3.1
 
88
72
 
 
0.6
 
84
63
 
 
0.9
 
79
54
வெப்பநிலை ( °F)
மொத்த மழை/பனி பொழிவு (அங்குலங்களில்)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Jalpaiguri Metropolitan Region". Jalpaiguri City Census 2011 data. Census 2011. பார்க்கப்பட்ட நாள் 1 January 2016.
  2. "Urban Agglomerations/Cities having population 1 lakh and above" (PDF). Provisional Population Totals, Census of India 2011. Census India. பார்க்கப்பட்ட நாள் 10 October 2011.
  3. 3.0 3.1 "Fact and Figures". Wb.gov.in. பார்க்கப்பட்ட நாள் 10 March 2019.
  4. "52nd REPORT OF THE COMMISSIONER FOR LINGUISTIC MINORITIES IN INDIA" (PDF). Nclm.nic.in. Ministry of Minority Affairs. p. 85. Archived from the original (PDF) on 25 மே 2017. பார்க்கப்பட்ட நாள் 10 மார்ச்சு 2019.
  5. Raha, Manis Kumar (1989). Matriliny to Patriliny: A Study of the Rabha Society. Gian Publishing House. p. 22.
  6. "Maps, Weather, and Airports for Jalpaiguri, India". fallingrain.com.
  7. Jalpaiguri City Census 2011 data
  8. population of Jalpaiguri Metropolitan Census 2011
  9. "Could never afford nutritious food required by athlete, Asian gold-medallist Swapna Barman’s father" (in en-US). The Indian Express. 11 July 2017. http://indianexpress.com/article/sports/sport-others/could-never-afford-nutritious-food-required-by-athlete-asian-gold-medallist-swapna-barmans-father-4745931/. 
  10. District Profile[தொடர்பிழந்த இணைப்பு], Jalpaiguri Government website Accessed on 1 October 2006
  11. Sharma Lakhotia, Anuradha (7 November 2006). "Darjeeling warming up faster than earth". The Telegraph. http://www.telegraphindia.com/1061107/asp/siliguri/story_6968627.asp. பார்த்த நாள்: 7 November 2006. 

வெளி இணைப்புகள்

[தொகு]
இந்தக் கட்டுரை இந்திய மொழியில் எழுதப்பட்ட உரையை கொண்டுள்ளது. சரியான ஒழுங்கமைவு ஆதரவில்லையெனில், உங்களுக்கு கேள்விக்குறிகளோ கட்டங்களோ, இடம் மாறியுள்ள உயிரெழுத்துகளோ, விடுபட்ட இடைச்சொல்லோ இந்திய மொழியில் எழுதப்பட்ட உரைக்கு பதிலாக தெரியலாம்.
ஜல்பைகுரி பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:

விக்சனரி விக்சனரி
நூல்கள் விக்கிநூல்
மேற்கோள் விக்கிமேற்கோள்
மூலங்கள் விக்கிமூலம்
விக்கிபொது
செய்திகள் விக்கிசெய்தி


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜல்பைகுரி&oldid=3777941" இலிருந்து மீள்விக்கப்பட்டது