உள்ளடக்கத்துக்குச் செல்

சுவப்னா பர்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுவப்னா பர்மன்
சுவப்னா பர்மன், ஒடிசா, 2017
தனிநபர் தகவல்
பிறப்பு29 அக்டோபர் 1996
ஜல்பைகுரி, மேற்கு வங்காளம், இந்தியா
விளையாட்டு
நாடு இந்தியா
விளையாட்டுதடகள விளையாட்டு
நிகழ்வு(கள்)ஹெப்டதலான்
சாதனைகளும் விருதுகளும்
தனிப்பட்ட சாதனை(கள்)6026 புள்ளிகள்
2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகள், ஜகார்த்தா
29 ஆகஸ்டு 2018 இற்றைப்படுத்தியது.

சுவப்னா பர்மன் (Swapna Barman) (பிறப்பு:29 அக்டோபர் 1996), இந்தியாவின் எண்வகை தடகள விளையாட்டு வீரங்கனை ஆவார். இவர் ஜகார்த்தாவில் நடைபெற்ற 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், மகளிர் பிரிவில் ஹெப்டதலான் விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய மகளிர் தடகள வீராங்கனை ஆவார்.[1][2]

இந்தியாவில் புவனேசுவரத்தில் நடைபெற்ற 2017 ஆசிய தடகள போட்டியில் முதலிடத்தில் வென்றவர்.[3]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

பர்மன் 1996 இல் மேற்கு வங்காளத்தின் சல்பைகுரிக்கு அருகிலுள்ள கோசுபரா கிராமத்தில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தார்.[4] சுவப்னா பிறக்கும் போதே இரு கால்களிலும் ஆறு விரல்களுடன் பிறந்தார். இதனால் தனது கால்களுக்கு பொருத்தமான காலணிகள் கிடைக்காமல் அவதிப்பட்டார்.[5][6] இவரது தாயார் பசனா ஒரு தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்தார் மற்றும் இவரது தந்தை பஞ்சனன் பர்மன் ஒரு சைக்கிள் ரிக்குசா ஓட்டுநராக இருந்தார். இவரது தந்தை 2013 இல் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். இதனால் சப்னாவும் அவரது மூன்று சகோதர சகோதரிகளும் சரியான உணவரிக்காக சிரமப்பட்டனர். அவரது அசாதாரண பாதங்கள் தொடர்ந்து வலியை ஏற்படுத்தியது, ஏனெனில் அவரால் கூடுதல் அகலமான ஓடும் காலணிகளை வாங்க முடியவில்லை.[6][7] பர்மன் தனது வெற்றி பெற்ற பரிசுத் தொகையைப் பயன்படுத்தி தன் குடும்பத்தைக் கவனிக்கிறார்.[8][6] இவர் இந்திய விளையாட்டு ஆணையத்தின் கொல்கத்தா வளாகத்தில் பயிற்சி பெறுகிறார். 2016 ஆம் ஆண்டில், ராகுல் டிராவிட் தடகள வழிகாட்டித் திட்டத்தின் மூலம் இவருக்கு ஆதரவளிக்கப்பட்டது.[6]

விளையாட்டு வாழ்க்கை

[தொகு]

பர்மன் 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தாடையில் காயம் இருந்தபோதிலும் தொடந்து விளையாடினார். அதில் பெண்களுக்கான ஹெப்டதலான் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை ஆனார்.[9] 2017 ஆசிய தடகள சாம்பியன் போட்டிகளில் பெண்கள் ஹெப்டத்லான் இறுதி நிகழ்வின் போது பார்மன் மயங்கி சரிந்தார். இருப்பினும் பர்மன் தனது பல தனிப்பட்ட சாதனைகளை முறியடித்து, முந்தைய ஆறு நிகழ்வுகளில் இருந்து தங்கம் வெல்வதற்கு போதுமான புள்ளிகளைப் பெற்றிருந்தார்.[3] [7]

2020 ஆம் ஆண்டில், இவர் நிதியுதவியை இழந்தார், ஆனால் மேற்கு வங்காளத்தில் உள்ள தனது வீட்டில் தொடர்ந்து பயிற்சி செய்வதாக கூறினார்.[10] பர்மன் 2021 பெடரேஷன் கோப்பை சீனியர் தடகள சாம்பியன் போட்டிகளில் ஹெப்டத்லானில் தங்கம் வென்றார். மேலும் 2022 இல் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றார். இதில் ஹெப்டத்லான் மற்றும் உயரம் தாண்டுதல் ஆகிய விளையாட்டுக்களில் இரண்டு தங்க பதக்கங்களை வென்றார்.[11]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Swapna Barman, the first Indian woman to win an Asiad gold in heptathlon
  2. "Swapna Barman realises the dream of hometown Denguajhar" (in en). Sportstarlive. https://www.sportstarlive.com/asian-games-2018/swapna-barman-realises-the-dream-of-hometown-denguajhar/article24813352.ece. 
  3. 3.0 3.1 "IAAF: Swapna Barman | Profile". iaaf.org. பார்க்கப்பட்ட நாள் 2017-07-17.
  4. Aishik Chnada (31 August 2018). "Mother and coach behind Swapna Barman's gold in Asian games". The New Indian Express. https://www.newindianexpress.com/sport/asian-games/news/2018/aug/31/mother-and-coach-behind-swapna-barmans-gold-in-asian-games-1865678.html. 
  5. "Swapna Barman wins gold". India Today. https://www.indiatoday.in/sports/asian-games-2018/story/jalpaiguri-swapna-barman-12-toes-asian-games-2018-gold-1328971-2018-08-31. 
  6. 6.0 6.1 6.2 6.3 "Swapna Barman Receives GSI Sports Scholarship - Company CSR | Largest CSR News Network - Social Responsibilities Give Better World". Company CSR | Largest CSR News Network. 25 January 2016. http://www.companycsr.com/swapna-barman-receives-gsi-sports-scholarship/. 
  7. 7.0 7.1 "Could never afford nutritious food required by athlete, Asian gold-medallist Swapna Barman's father". The Indian Express. 11 July 2017. http://indianexpress.com/article/sports/sport-others/could-never-afford-nutritious-food-required-by-athlete-asian-gold-medallist-swapna-barmans-father-4745931/. 
  8. Sarkar, Sujata (24 August 2017). "Swapna Barman on comeback wins gold, pledges for a job to run her ailing family". Oneindia. http://www.oneindia.com/sports/swapna-barman-on-comeback-wins-gold-pledges-a-job-run-her-ailing-family-2490848.html. 
  9. "Swapna Barman realises the dream of hometown Denguajhar". Sportstarlive. https://www.sportstarlive.com/asian-games-2018/swapna-barman-realises-the-dream-of-hometown-denguajhar/article24813352.ece. 
  10. Cyriac, Biju Babu (14 August 2020). "Swapna Barman: Dope-tainted athlete in TOPS development list, but no place for Asian Games gold medallist Swapna Barman". The Times of India. https://timesofindia.indiatimes.com/sports/more-sports/others/dope-tainted-athlete-in-tops-development-list-but-no-place-for-asian-games-gold-medallist-swapna-barman/articleshow/77537271.cms. 
  11. "Swapna Barman wins double gold at National Games 2022". Khel Now. பார்க்கப்பட்ட நாள் 2022-12-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவப்னா_பர்மன்&oldid=3904460" இலிருந்து மீள்விக்கப்பட்டது