இந்திய அருங்காட்சியகம், கொல்கத்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இந்திய அருங்காட்சியகத்தின் முற்றம்

இந்திய அருங்காட்சியகம் (Indian Museum) எனப் பெயர் கொண்ட அருங்காட்சியகம் இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகரமான கொல்கத்தாவுக்கு அருகில் உள்ள செராம்பூர் என்னுமிடத்தில் உள்ளது. டென்மார்க்கைச் சேர்ந்த தாவரவியலாளரான மருத்துவர் நத்தானியேல் வாலிக் (Nathaniel Wallich) என்பவரால் 1814 ஆம் ஆண்டில் இது நிறுவப்பட்டது. ஒரு பல்துறை நிறுவனமான இது உலகின் மிகப்பழைய அருங்காட்சியகங்களில் ஒன்றாகும்.

இவ் வகையைச் சேர்ந்த அருங்காட்சியகங்களில் ஆசியாவிலேயே முதலாவதாகக் கருதப்படும் இது, 1814 ஆம் ஆண்டு முதல் 1878 ஆம் ஆண்டு வரை கொல்கத்தாவின் ஆசியச் சமூகத்தின் (Asiatic Society) வளாகத்திலேயே அமைந்திருந்தது. பின்னர் இது அதன் சொந்தக் கட்டிடத்துக்கு மாற்றப்பட்டது. இந்த அருங்காட்சியகத்தில், ஒரு எகிப்திய "மம்மி", பார்கத்திலிருந்து கொண்டுவரபட்ட புத்தசமயத் தாது கோபம், புத்தரின் சாம்பல், அசோகரின் தூண், தொன்மாவைப் போன்ற விலங்கொன்றின் புதைபடிவ எலும்புக்கூடு, ஒரு ஓவியச் சேகரிப்பு, விண்கற்கள் என்பவை உட்படப் பல அரிய பொருட்கள் உள்ளன.

அருங்காட்சியகத்தின் நிழற்படங்கள்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]