உள்ளடக்கத்துக்குச் செல்

ஹவுரா மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹவுரா மாவட்டம்
হাওড়া জেলা
ஹவுராமாவட்டத்தின் இடஅமைவு மேற்கு வங்காளம்
மாநிலம்மேற்கு வங்காளம், இந்தியா
நிர்வாக பிரிவுகள்இராஜதானி கோட்டம்
தலைமையகம்ஹவுரா
பரப்பு1,467 km2 (566 sq mi)
மக்கட்தொகை4,841,638 (2011)
மக்கள்தொகை அடர்த்தி2,913/km2 (7,540/sq mi)
படிப்பறிவு83.85 %
பாலின விகிதம்935
மக்களவைத்தொகுதிகள்3
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை16
முதன்மை நெடுஞ்சாலைகள்தேசிய நெடுஞ்சாலை 6
சராசரி ஆண்டு மழைபொழிவு1461 mm
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

ஹவுரா மாவட்டம் (Howrah district) (Pron:ɦauːɽaː) (வங்காள மொழி: হাওড়া জেলা) கிழக்கு இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தின் 23 மாவட்டங்களில் ஒன்றாகும். இராஜதானி கோட்டத்தில் அமைந்த ஏழு மாவட்டங்களில் இம்மாவட்டமும் ஒன்றாகும். இம்மாவட்ட நிர்வாகத் தலைமையிட நகரம் ஹவுரா ஆகும்.[1]

மாவட்ட எல்லைகள்[தொகு]

1,467 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட ஹவுரா மாவட்டம் ஹூக்லி மாவட்டம், கிழக்கில் கொல்கத்தா மாவட்டம், தென்கிழக்கில் தெற்கு 24 பர்கனா மாவட்டம், தென் மேற்கில் கிழக்கு மிட்னாபூர் மாவட்டம் மற்றும் மேற்கில் மேற்கு மிட்னாபூர் மாவட்டம் எல்லைகளாக கொண்டுள்ளது.

புவியியல்[தொகு]

இம்மாவட்டத்தின் மேற்கிலும், தென்மேற்கிலும் ரூப்நாராயணன் ஆறும், கிழக்கிலும், தென்கிழக்கிலும் பாகீரதி ஹூக்லி ஆறும் பாய்கிறது.[2]

தட்ப வெப்பம்[தொகு]

இம்மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 1461 மில்லி மீட்டராகும். கோடைகாலத்தில் வெப்பநிலை 32 °C முதல் 39° செல்சியஸ் வரை ஆகும். குளிர்காலத்தில் வெப்பநிலை 8 முதல் 10° செல்சியஸ் வரை ஆகும்.

மாவட்ட நிர்வாகம்[தொகு]

1,467 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட ஹவுரா மாவட்டம், ஹவுரா சதர் மற்றும் உலுபெரியா என இரண்டு உட்கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

ஹவுரா சதர் உட்கோட்டம்[தொகு]

ஹவுரா சதர் உட்கோட்டம் பாலி மற்றும் ஹவுரா மாநகராட்சிகளையும், பாலி–ஜெகச்சா, டொம்ஜுர், பாஞ்சலா, சங்க்ரயில், மற்றும் ஜெகத்வல்லபூர் என ஐந்து ஊராட்சி ஒன்றியங்களை கொண்டுள்ளது.

உலுபெரியா உட்கோட்டம்[தொகு]

உலுபெரியா உட்கோட்டம் உலுபெரியா நகராட்சி மற்றும் உலுபெரியா–I, உலுபெரியா–II, ஆம்தா–I, ஆம்தா–II, உதய்நாராயண்பூர், பாக்நன்–I, பாக்நன்–II, சியாம்பூர்–I மற்றும் சியாம்பூர்–II என ஒன்பது ஊராட்சி ஒன்றியங்களை கொண்டுள்ளது.[3]

அரசியல்[தொகு]

சட்டமன்ற தொகுதிகள்[தொகு]

ஹவுரா மாவட்டம் பதினாறு சட்டமன்ற தொகுதிகளை கொண்டுள்ளது.[4] அவைகள்; பாலி சட்ட மன்ற தொகுதி, ஹவுரா வடக்கு சட்டமன்ற தொகுதி, ஹவுரா மத்திய சட்டமன்ற தொகுதி, ஹவுரா தெற்கு சட்டமன்ற தொகுதி, சிப்பூர் சட்டமன்ற தொகுதி, டொம்ஜூர் சட்டமன்ற தொகுதி, ஜெகத்வல்லபபூர் சட்டமன்ற தொகுதி, பாஞ்சலா சட்டமன்ற தொகுதி, சங்க்ரயில் சட்டமன்ற தொகுதி (தலித்-SC) , உலுபெரியா சட்டமன்ற தொகுதி (தலித்-SC) , சியாம்பூர் சட்டமன்ற தொகுதி, பாக்நன் சட்டமன்ற தொகுதி, கல்யாண்பூர் சட்டமன்ற தொகுதி, ஆம்தா சட்டமன்ற தொகுதி மற்றும் உதய்நாராயண்பூர் சட்டமன்ற தொகுதி ஆகும்.

மக்களவை தொகுதிகள்[தொகு]

ஹவுரா மக்களவை தொகுதி, உலுபெரியா மக்களவை தொகுதி மற்றும் செரம்பூர் மக்களவை தொகுதி என மூன்று மக்களவை தொகுதிகளை இம்மாவட்டம் கொண்டுள்ளது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 4,850,029 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 2,500,819 மற்றும் பெண்கள் 2,349,210 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 939 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 3,306 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 83.31 ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 86.95 ஆகவும், பெண்களின் படிப்பறிவு 79.43 ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 522,802 ஆக உள்ளது.[5]

சமயம்[தொகு]

இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள்தொகை 3,535,844 (72.90 %) ஆகவும், இசுலாமியர் மக்கள்தொகை 1,270,641 (26.20 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள்தொகை 8,666 (0.18 %) ஆகவும், சீக்கிய சமயத்தவரின் மக்கள்தொகை 4,380 ஆகவும், சமண சமயத்தவரின் மக்கள்தொகை 9,699 ஆகவும், பௌத்த சமயத்தவரின் மக்கள்தொகை 1,258 ஆகவும், பிற சமயத்தவரின் மக்கள்தொகை 1,265 ஆகவும், சமயம் குறிப்பிடாதவர்கள் எண்ணிக்கை 18,276 (0.38 %) ஆகவும் உள்ளது.

போக்குவரத்து வசதிகள்[தொகு]

தரைவழி[தொகு]

இம்மாவட்டத்தின் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை 6 நாட்டின் அனைத்து நகரங்களை தரைவழியாக இணைக்கிறது.

தொடருந்து சேவைகள்[தொகு]

இம்மாவட்ட நிர்வாகத் தலைமையிடமான ஹவுரா நகரத்தில் உள்ள ஹவுரா தொடருந்து நிலையத்திலிருந்து நாட்டின் அனைத்து பகுதிகளையும் இருப்புப்பாதையால் இணைக்கிறது.[6]

வானூர்தி[தொகு]

ஹவுரா தொடருந்து நிலையத்திலிருந்து இருபது கிலோ மீட்டர் தொலைவில் நேதாஜி சுபாசு சந்திரபோசு பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைந்துள்ளது. இவ்வானூர்தி நிலையம் இந்திய நாட்டின் அனைத்து பகுதிகளையும், பன்னாட்டு நகரங்களையும் இணைக்கிறது.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Howrah". Archived from the original on 2005-09-07. பார்க்கப்பட்ட நாள் 2016-02-22.
  2. "Howrah District page on Government website". Archived from the original on 2007-12-20. பார்க்கப்பட்ட நாள் 2016-02-22.
  3. "Area and Population information on Howrah District". Official website of Howrah District from Portal of Government of India. Archived from the original on 2013-02-26. பார்க்கப்பட்ட நாள் 2008-11-11.
  4. "General election to the Legislative Assembly, 2001 – List of Parliamentary and Assembly Constituencies" (PDF). West Bengal. Election Commission of India. Archived from the original (PDF) on 2006-05-04. பார்க்கப்பட்ட நாள் 2008-11-19.
  5. http://www.census2011.co.in/census/district/15-haora.html
  6. http://indiarailinfo.com/departures/howrah-junction-hwh/1
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-05-05. பார்க்கப்பட்ட நாள் 2016-02-22.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹவுரா_மாவட்டம்&oldid=3890856" இலிருந்து மீள்விக்கப்பட்டது