சந்தன்நகர்

ஆள்கூறுகள்: 22°52′N 88°23′E / 22.87°N 88.38°E / 22.87; 88.38
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சந்தன்நகர்
—  நகரம்  —
சந்தன்நகர்
இருப்பிடம்: சந்தன்நகர்

, மேற்கு வங்காளம்

அமைவிடம் 22°52′N 88°23′E / 22.87°N 88.38°E / 22.87; 88.38
நாடு  இந்தியா
மாநிலம் மேற்கு வங்காளம்
மாவட்டம் ஊக்ளி
ஆளுநர் சி. வி. ஆனந்த போசு[1]
முதலமைச்சர் மம்தா பானர்ஜி[2]
மக்களவைத் தொகுதி ஊக்ளி
மக்கள் தொகை

அடர்த்தி

1,62,166 (2001)

8,108/km2 (21,000/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 20 கிமீ2 (8 சதுர மைல்)
குறியீடுகள்

சந்தன்நகர் (Chandannagar, முன்னதாக சந்தர்நகோர் அல்லது சந்தர்நகர் (பிரெஞ்சு மொழி: Chandernagor), (வங்காள மொழி: চন্দননগর சோந்தோன்நோகோர்) இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் கொல்கத்தாவிற்கு வடக்கே 30 கிலோமீட்டர்கள் (19 mi)* தொலைவில் அமைந்துள்ள முன்னாள் பிரெஞ்சுக் குடியேற்றமும் சிறிய நகரமும் ஆகும். ஊக்ளி மாவட்டத்தில் ஓர் வட்டத்தின் தலைநகரமாகும். மேற்கு வங்காளத்தில் உள்ள ஆறு மாநகராட்சிகளில் ஒன்றாகும். கொல்கத்தா பெருநகர வளர்ச்சி ஆணையத்தின் ஆள்பகுதிக்குள் உள்ளது. ஊக்ளி ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்த நகரம் வங்கத்தின் பிற நகரங்களிலிருந்து தனிப்பட்டு தன் அடையாளத்தைக் கொண்டுள்ளது. 150,000 மக்கள்தொகையுள்ள இதன் மொத்த நிலப்பரப்பு 19 சதுர கிலோமீட்டர்கள் (7.3 sq mi)* தான். தலைநகர் கொல்கத்தாவுடன் தொடர்வண்டி, சாலைகள் மற்றும் நீர்ப்போக்குவரத்தால் இணைக்கப்பட்டுள்ளது. ஒருமணிப் பயணத்தில் எட்டக்கூடியதாக உள்ளது.

பெயர்க்காரணம்[தொகு]

இங்கு கங்கை (ஊக்ளி) ஆற்றின் கரை பிறைவடிவத்தில் உள்ளதால் ( வங்காள மொழியில், சந்த் என்பது நிலவினையும் நகர் என்பது நகரத்தையும் குறிக்கும்) இப்பெயர் வந்திருக்கலாம். சில பழைய ஆவணங்களில் இதன் பெயர் சந்தர்நகோர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது, சந்திர நகர் என்பதிலிருந்தும் வந்திருக்கலாம். மற்றும் சிலர் கூற்றுப்படி இங்கு தழைத்திருந்த சந்தனமர வணிகத்தை ஒட்டி (வங்காளம்:சந்தன்) இந்தப் பெயர் எழுந்திருக்கலாம். மற்றுமொரு காரணமாக இங்குள்ள கோவிலில் உள்ள அம்மன் பெயர் சண்டி என்பதும் கூறப்படுகிறது. தவிர பழங்காலத்தில் இது ஃபராசுதங்கா என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது;பிரெஞ்சுக் குடியேற்றம் (வங்காளம்: ஃபராசி - பிரெஞ்சு, தங்கா - சேரி).

இயேசுவின் திரு இருதய கத்தோலிக்க கோவில்[தொகு]

இயேசுவின் திரு இருதயக் கோவில்

பிரெஞ்சு நாட்டவரின் குடியேற்றப்பகுதியாக இருந்தபோது சந்தன்நகரில் ஒரு சிறப்புமிக்க கோவில் கட்டப்பட்டது. இருநுறு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அக்கோவில் இயேசுவின் திரு இருதயத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது. பிரெஞ்சு மொழியில் அக்கோவில் l'Eglise du Sacré Cœur என்று அழைக்கப்பட்டது. இதன் கலைப்பாணி பிரஞ்சு முறையில் அமைந்தது.

மேலும், அதே காலத்தில் கட்டப்பட்ட புனித லூயிசு கோவிலின் இடிமானப் பகுதிகளும் சுற்றுலாப் பயணியரை ஈர்க்கின்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://india.gov.in/govt/governor.php
  2. http://india.gov.in/govt/chiefminister.php

மேலும் அறிய[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
சந்தன்நகர்
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தன்நகர்&oldid=3242847" இருந்து மீள்விக்கப்பட்டது