கிழக்கு வர்த்தமான் மாவட்டம்
கிழக்கு வர்ததமான் மாவட்டம் மாவட்டம் পূর্ব বর্ধমান জেলা | |
---|---|
![]() கிழக்கு வர்ததமான் மாவட்டம்மாவட்டத்தின் இடஅமைவு மேற்கு வங்காளம் | |
மாநிலம் | மேற்கு வங்காளம், இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | பர்த்துவான் கோட்டம் |
தலைமையகம் | வர்த்தமான் |
பரப்பு | 5,432.69 km2 (2,097.57 sq mi) |
மக்கட்தொகை | 4835532 (2011) |
படிப்பறிவு | 74.73% |
பாலின விகிதம் | 922 |
மக்களவைத்தொகுதிகள் | வர்த்தமான் - துர்க்காபூர் நாடாளுமன்றத் தொகுதி, கிழக்கு பர்த்வான் நாடாளுமன்றத் தொகுதி, மேற்கு மேற்கு வர்தமான் நாடாளுமன்றத் தொகுதி, விஷ்ணுப்பூர் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் போல்பூர் நாடாளுமன்றத் தொகுதி |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | பர்துவான் தெற்கு, பர்த்வான் வடக்கு, பதர், கல்சி, ரைனா, ஜமால்பூர், மெமாரி, காந்தகோஷ், கட்வா, மங்கல்கோட், கேதுகிராம், ஆஸ்கிராம், கல்னா, தெற்கு பூர்வஸ்தாலி, வடக்கு பூர்வஸ்தாலி, மாண்டேஸ்வர் ]]. |
சராசரி ஆண்டு மழைபொழிவு | 1442 mm |

கிழக்கு வர்த்தமான் மாவட்டம் அல்லது பூர்வ பர்த்தமான் மாவட்டம் (Purba Bardhaman district) இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் பழைய வர்தமான் மாவட்டத்தின் கிழக்குப் பகுதிகளைக் கொண்டு 7 ஏப்ரல் 2017 அன்று புதிதாக நிறுவப்பட்ட மாவட்டம் ஆகும். வர்தமான் மாவட்டத்தின் மேற்குப் பகுதிகளைக் கொண்டு மேற்கு வர்த்தமான் மாவட்டம் நிறுவப்பட்டது.[1] [2] கிழக்கு வர்த்தமான் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் வர்த்தமான் நகராட்சியாகும்.
புவியியல்
[தொகு]வண்டல் மண் நிறைந்த கிழக்கு வர்த்தமான் மாவட்டத்தின் தெற்கிலும், தென்கிழக்கிலும் தாமோதர் நதி பாய்கிறது. மாவட்டத்தின் கிழக்கு எல்லைப்பகுதியில் ஹூக்ளி ஆறு பாய்கிறது. இதன் மேற்கில் மேற்கு வர்த்தமான் மாவட்டம் எல்லையாக உள்ளது.[3][4]
பொருளாதாரம்
[தொகு]வேளாண்மை
[தொகு]கிழக்கு வர்த்தமான் மாவட்டத்தின் பொருளாதாரம் வேளாண்மைத் தொழிலை முழுவதும் சார்ந்துள்ளது. உணவு தாணிய உற்பத்தியில், குறிப்பாக நெல் முப்போக உற்பத்தி கொண்டது. மேலும் பயரு வகைகள், பணப்பயிர்களான ஆமணக்கு, சணல், உருளைக் கிழங்கு உற்பத்தியாகிறது.[5]
போக்குவரத்து
[தொகு]தொடருந்துகள்
[தொகு]தில்லி - ஹவுரா, ஹவுரா - கயா - தில்லி, ஹவுரா - அலகாபாத் - மும்பை செல்லும் தொடருந்துகள் இம்மாவட்டத்தின் வழியாக செல்கிறது.[6][7]
தேசிய நெடுஞ்சாலைகள்
[தொகு]கொல்கத்தா - தில்லி செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 19 இம்மாவட்டத்தின் வழியாகச் செல்கிறது.[8]
மல்லர்பூர் - வர்த்தமான் நகரத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 114 மற்றும் மாநில நெடுஞ்சாலை எண்கள் 6, 7, 13, 14 மற்றும் 15 இம்மாவட்டத்தின் வழியாகச் செல்கிறது. [9]
நிர்வாகக் கோட்டங்கள்
[தொகு]கிழக்கு வர்த்தமான் மாவட்டத்தை நிர்வாக வசதிக்கான வர்ததமான் வடக்கு, வர்த்தமான் தெற்கு, கட்வா, கல்னா என நான்கு உட்கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ள்து:[1][1][10][10][11]
உட்கோட்டம் | தலைமையிடம் | பரப்பளவு km2 |
மக்கள் தொகை % (2011) |
கிராமப்புறம் மக்கள் தொகை % (2011) |
நகர்புறம் மக்கட்தொகை % (2011) |
---|---|---|---|---|---|
வர்த்தமான் வடக்கு உட்கோட்டம் | வர்த்தமான் | 1,958.43 | 1,586,623 | 73.58 | 26.42 |
வர்த்தமான் தெற்கு உட்கோட்டம் | மேமாரி | 1,410.03 | 1,198,155 | 95.54 | 4.46 |
கட்வா உட்கோட்டம் | கட்வா | 1,070.48 | 963,022 | 88.44 | 11.56 |
கல்னா உட்கோட்டம் | கல்னா | 993.75 | 1,097,732 | 87.00 | 13.00 |
கிழக்கு வர்த்தமான் மாவட்டம் | 5,432.69 | 4,835,532 | 84.98 | 15.02 |
மக்கள் தொகையியல்
[தொகு]2011ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கிழக்கு வர்த்தமான் மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 4,835,532 ஆகும். அதில் ஆண்கள் 2,469,310 (51%) ஆகவும், பெண்கள் 2,366,222 (49%) ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்டவர்கள் 509,855 ஆக உள்ளனர்.[12] எழுத்தறிவு கொண்டவர்கள் 3,232,452 ஆக உள்ளனர்.[12]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "পূর্ব ও পশ্চিম, আজ বর্ধমান জেলা ভাগের আনুষ্ঠানিক ঘোষনা মুখ্যমন্ত্রীর". (வங்காள மொழியில்). ABP Ananda, 7 April 2017. Retrieved 9 April 2017.
- ↑ https://www.satsawb.org/Docs/GOs/Paschim_and_Purba_Bardhaman_Gazette_Notifications.pdf
- ↑ Chattopadhyay, Akkori, Bardhaman Jelar Itihas O Lok Sanskriti (History and Folk lore of Bardhaman District.), (வங்காள மொழியில்), Vol I, p18,28, Radical Impression. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-85459-36-3
- ↑ "Census of India 2011, West Bengal: District Census Handbook, Barddhaman" (PDF). Physiography, pages 13-14. Directorate of Census Operations, West Bengal. Retrieved 3 March 2017.
- ↑ "District Human Development Report Bardhaman, March 2011" (PDF). pages 37, 50-58. Development and Planning Department, Government of West Bengal. Archived from the original (PDF) on 14 ஆகஸ்ட் 2017. Retrieved 13 April 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "36811/ Howrah Barddhaman Jn Chord Local". Time Table. indiarailinfo. Retrieved 9 February 2017.
- ↑ "63501/ Mowrah-Barddhaman Fast Memu Local". Time Table. indiarailinfo. Retrieved 9 February 2017.
- ↑ "Rationalisation of Numbering Systems of National Highways" (PDF). New Delhi: Department of Road Transport and Highways. Archived from the original (PDF) on 4 டிசம்பர் 2018. Retrieved 10 February 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "List of State Highways in West Bengal". West Bengal Traffic Police. Retrieved 15 October 2016.
- ↑ 10.0 10.1 "District Statistical Handbook 2014 Burdwan". Table 2.2, 2.4(a). Department of Statistics and Programme Implementation, Government of West Bengal. Archived from the original on 29 ஜூலை 2017. Retrieved 17 February 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Directory of District, Sub division, Panchayat Samiti/ Block and Gram Panchayats in West Bengal, March 2008". West Bengal. National Informatics Centre, India. 19 March 2008. Archived from the original on 25 February 2009. Retrieved 6 December 2008.
- ↑ 12.0 12.1 "2011 Census - Primary Census Abstract Data Tables". West Bengal – District-wise. Registrar General and Census Commissioner, India. Retrieved 16 April 2017.