பட்பாரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பட்பாரா என்பது இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்தின் வடக்கு 24 பர்கானா மாவட்டத்தின் ஒரு நகரம் மற்றும் நகராட்சி ஆகும்.[1] இது கொல்கத்தா பெருநகர மேம்பாட்டு ஆணையத்தின் (கே.எம்.டி.ஏ) கீழ் உள்ள ஒரு பகுதியாகும்.

கண்ணோட்டம்[தொகு]

ஹூக்லி ஆற்றின் கரையில் பட்பாரா அமைந்துள்ளது. இது சமஸ்கிருத கற்றல் துறையிகளுக்கு பெயர் பெற்றது. 'பட்ட்பாரா' என்ற பெயர் பண்டைய பெயரான "பட்டா-பல்லி" என்பதிலிருந்து உருவானது. 'பட்டா' என்பது பிராமண சமஸ்கிருத பண்டிதர்களின் பிரிவை குறிக்கிறது. 'பல்லி' என்பது இடம் அல்லது கிராமத்தை குறிக்கிறது. இது மேற்கு வங்காளத்தின் மிகப் பழமையான நகராட்சிகளில் ஒன்றாகும். இந்த நகரம் 1899 ஆம் ஆண்டில் நைஹாட்டி நகராட்சியில் இருந்து பிரிக்கப்பட்டு நகராட்சியாக அமைக்கப்பட்டது. பிரித்தானிய ஆட்சியின் போதும் அதற்குப் பின்னரும், இந்நகரம் ஹூக்லி ஆற்றங்கரையில் ஒரு முக்கியமான தொழிற்துறை மையமாக மாறியது. இங்கு சணல் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் அதிகமான காணப்படுகின்றன.

புவியியல்[தொகு]

பட்பாரா 22.87 ° வடக்கு 88.41 ° கிழக்கு என்ற புவியியல் இருப்பிடத்தில் அமைந்துள்ளது. [2]இது சராசரியாக 12 மீட்டர் (39 அடி) உயரத்தைக் கொண்டுள்ளது.

பட்பாரா வடக்கே நைஹாட்டி மற்றும் டோகாச்சியா ஆகிய நகரங்களாலும் , பன்பூர் , ரம்பதி, முகுந்தாபூர், அபிராம்பூர், கியூட்டியா, பிதிதார்பூர், ராகுடா , பசுதேவ்பூர், குர்தாஹா என்பவற்றினாலும் , தெற்கில் கவ்காச்சி , கர்ஷ்யம்நகர் என்பவற்றினாலும், மேற்கில் ஹூக்லி நகரத்தாலும் சூழப்பட்டுள்ளது.[3]

காலநிலை[தொகு]

பட்பாரா வெப்பமான, ஈரப்பதமான கோடையையும், வறண்ட குளிர்காலத்தைக் கொண்டுள்ளது. இந்த காலநிலை மேற்கு வங்கத்தில் பொதுவானது. மழைக்காலம் பொதுவாக சூலை நடுப்பகுதியிலிருந்து அக்டோபர் நடுப்பகுதி அல்லது பிற்பகுதி வரை நீடிக்கும். கோடையில் சராசரி வெப்பநிலை 38 பாகை செல்சியஸ் வரையில் காணப்படலாம். குளிர்கால வெப்பநிலை 10 பாகை செல்சியஸுக்குக் குறைகின்றது. கோடை காலத்தில் ஈரப்பதம் பெரும்பாலும் 90% வீதத்திற்கு மேல் காணப்படலாம்.

புள்ளிவிபரங்கள்[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கட் தொகை கணக்கெடுப்பின்படி பட்பாராவின் மொத்த மக்கட் தொகை 386,019 ஆகும். மொத்த மக்கட் தொகையில் ஆண்களின் எண்ணிக்கை 204,539 (53%) ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 181,480 (47%) ஆகவும் காணப்படுகின்றது. மொத்த சனத்தொகையில் ஆறு வயதிற்கு உட்பட்டோரின் எண்ணிக்கை 35,5141 ஆகும். பட்பாராவில் மொத்த கல்வியறிவாளர்களின் எண்ணிக்கை 297,161 ஆகும்.[4]

2001 ஆம் ஆண்டு இந்திய மக்கட் தொகை கணக்கெடுப்பின்படி[5] பட்பாராவின் மக்கட் தொகை 441,956 ஆகும். மொத்த சனத்தொகையில் ஆண்கள் 55% வீதமாகவும், பெண்கள் 45% வீதமாகவும் இருந்தனர். பட்பாராவின் சராசரி கல்வியறிவு விகிதம் 72% ஆகும். இது தேசிய சராசரியான 59.5% ஐ விட அதிகமாகும். ஆண்களின் கல்வியறிவு 78% வீதமாகவும், பெண்களின் கல்வியறிவு 66% வீதமாகவும் காணப்பட்டது. சனத்தொகையில் ஆறு வயதிற்கு உட்பட்டோர் 9% வீதமாக இருந்தனர்.

போக்குவரத்து[தொகு]

மாநில நெடுஞ்சாலை 1 (உள்நாட்டில் கோஷ்பாரா சாலை என்று அழைக்கப்படுகிறது) பட்பரா வழியாக செல்கிறது. [6]பொதுப் போக்குவரத்தில் நைஹாட்டி மற்றும் பட்பாரா இடையே இயங்கும் முச்சக்கர வண்டிகள், சைக்கிள் ரிக்சாக்கள் மற்றும் பேருந்துகள் என்பன இயங்குகின்றன.

பட்பாராவிற்கு சீல்டா-ரணகாட் பாதையில் மூன்று ரயில் நிலையங்கள் சேவை செய்கின்றன. ஷியாம்நகர் ரயில் நிலையம் சீல்தா ரயில் நிலையத்திலிருந்து 30.2 கி.மீ தொலைவிலும், ஜகதால் ரயில் நிலையத்தில் இருந்து 33.2 கி.மீ தொலைவிலும், கங்கினாரா ரயில் நிலையத்தில் இருந்தது 35.1 கி.மீ தொலைவிலும் உள்ளது. ரயில் இணைப்புகள் கொல்கத்தா புறநகர் ரயில்வே அமைப்பின் ஒரு பகுதியாகும். கொல்கத்தாவிலிருந்து பட்பாராவுக்கு சுமார் ஒரு மணி நேரத்தில் ரயிலில் செல்லலாம். மேலும் இந்நகரிற்கான ஹூக்லி ஆற்றின் படகு சேவையும் காணப்படுகின்றது.

பயணிகள்[தொகு]

நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மொத்தம் 32 லட்சம் பேர் தினமும் கொல்கத்தாவுக்கு பணிகளுக்காக வருகை தருகின்றார்கள். சீல்தா-கிருஷ்ணநகர் பிரிவில் 30 ரயில் நிலையங்களில் இருந்து பயணிகளை ஏற்றிச் செல்லும் 34 ரயில்கள் உள்ளன. சீடா-சாந்திபூர் பிரிவில் 32 ரயில்கள் 29 நிலையங்களில் இருந்து பயணிகளை ஏற்றிச் செல்கின்றன.[7]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்பாரா&oldid=2868680" இருந்து மீள்விக்கப்பட்டது