டம் டம்
டம்டம் | |
---|---|
நகரம் | |
![]() ஜெஸ்சூர் சாலை, டம்டம் | |
ஆள்கூறுகள்: 22°37′N 88°25′E / 22.62°N 88.42°E | |
நாடு | ![]() |
மாநிலம் | மேற்கு வங்காளம் |
மாவட்டம் | வடக்கு 24 பர்கனா மாவட்டம் |
மண்டலம் | பெருநகர கொல்கத்தா மாநகராட்சி |
கொல்கத்தா மெட்ரோ | டம் டம் மெட்ரோ இரயில் நிலையம் |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | டம் டம் நகராட்சி[1] |
பரப்பளவு[1] | |
• மொத்தம் | 9.73 km2 (3.76 sq mi) |
ஏற்றம் | 11 m (36 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 114,786 |
• அடர்த்தி | 12,000/km2 (31,000/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | வங்காள மொழி[2][3] |
• கூடுதல் அலுவல் மொழி | ஆங்கிலம் |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30) |
அஞ்சல் சுட்டு எண் | 700028, 700079, 700080, 700081 |
தொலைபேசி குறியீடு எண் | +91 33 |
வாகனப் பதிவு | WB |
மக்களவைத் தொகுதி | டம் டம் |
சட்டமன்றத் தொகுதி | டம் டம் |
இணையதளம் | dumdummunicipality |
டம் டம் (Dum Dum), இந்தியாவின் மேற்கு வ்ங்க மாநிலத்தின் வடக்கு 24 பர்கனா மாவட்டத்திலுள்ள நகராட்சி ஆகும். இது கொல்கத்தா மாநகர வளர்ச்சி குழுமத்தின் பரப்பளவில் உள்ளது. இது கொல்கத்தாவிற்கு வடகிழக்கே 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு நேதாஜி சுபாசு சந்திரபோசு பன்னாட்டு வானூர்தி நிலையம் உள்ளது. கொல்கத்தா மெட்ரோ டம் டம் நகரத்துடன் இணைக்கிறது. தேசிய நெடுஞ்சாலை எண் 12 டம் டம் வழியாகச் செல்கிறது. இங்கு டம் டம் மத்திய சிறைச்சாலை உள்ளது. டம் டம் பாசறை தொடருந்து நிலையம் இந்நகரத்தில் அமைந்துள்ளது.[4]
மக்கள் தொகை பரம்பல்[தொகு]
2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி, 9.23 எக்டேர் பரப்பளவு கொண்ட இந்நகரத்தின் மக்கள் தொகை 1,14,786 ஆகும். அதில் ஆண்கள் 58,566 (51%) மற்றும் பெண்கள் 56,220 (49%) ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 960 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 8,259 ஆகவுள்ளனர். எழுத்தறிவு 91.99% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 8269 மற்றும் 508 ஆகவுள்ளனர்.[5]
பொருளாதாரம்[தொகு]
டம் டம் நகரத்தில் இயந்திரா இந்தியாவின் இராணுவ ஆயுதங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது.[6]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 "Dum Dum Municipality". dumdummunicipality.co.in. 30 December 2019 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "52nd Report of the Commissioner For Linguistic Minorities in India" (PDF). Nclm.nic.in. Ministry of Minority Affairs. p. 85. 25 May 2017 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 29 August 2019 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Fact and Figures". Wb.gov.in. 29 August 2019 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "33811 Seldah Bangaon Local". Time Table. indiarailinfo. 26 May 2018 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Dum Dum City Population Census 2011
- ↑ "Ordnance Factory Dum Dum". Indian Ordnance Factories. 21 ஜூலை 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. 20 July 2018 அன்று பார்க்கப்பட்டது.
வெளி இணைப்புகள்[தொகு]
விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Kolkata/Northern fringes
- Kolkata Airport (CCU)