வடக்கு 24 பர்கனா மாவட்டம்
வடக்கு 24 பர்கனா மாவட்டம் উত্তর চব্বিশ পরগণা জেলা | |
---|---|
வடக்கு 24 பர்கனாமாவட்டத்தின் இடஅமைவு மேற்கு வங்காளம் | |
மாநிலம் | மேற்கு வங்காளம், இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | இராஜதானி கோட்டம் |
தலைமையகம் | பராசத் |
பரப்பு | 4,094 km2 (1,581 sq mi) |
மக்கட்தொகை | 10,082,852 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 2,463/km2 (6,380/sq mi) |
படிப்பறிவு | 84.95 percent[1] |
பாலின விகிதம் | 949 |
முதன்மை நெடுஞ்சாலைகள் | 2 |
சராசரி ஆண்டு மழைபொழிவு | 1579 mm |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
வடக்கு 24 பர்கனா மாவட்டம் (North 24 Parganas district) (Pron: pɔrɡɔnɔs) கிழக்கு இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தின் இருபது மாவட்டங்களில் ஒன்றாகும். இராஜதானி கோட்டத்தில் அமைந்த ஏழு மாவட்டங்களில் இம்மாவட்டமும் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் பராசத் ஆகும்.
இம்மாவட்டத்தில் முப்பத்து ஐந்து காவல் நிலையங்களும், இருபத்து இரண்டு ஊராட்சி ஒன்றியங்களும் இருநூறு ஊராட்சி மன்றங்களும், 1,599 வருவாய் கிராமங்களும் கொண்டது.[2][3] இது மேற்கு வங்காள மாநிலத்தில் அதிக மக்கள்தொகை மிக்க மாவட்டமாகும்.[4]
மாவட்ட எல்லைகள்
[தொகு]இம்மாவட்டத்தின் வடக்கில் நதியா மாவட்டம், கிழக்கில் வங்காள தேசம், தெற்கில் வங்காள விரிகுடா மற்றும் மேற்கில் ஹூக்லி மாவட்டம், கொல்கத்தா மாவட்டம் மற்றும் தெற்கு 24 பர்கனா மாவட்டம் எல்லைகளாக அமைந்துள்ளது.
புவியியல்
[தொகு]4,094 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டம், வெப்ப வலையத்தில் உள்ளது. இம்மாவட்டம் கங்கை ஆறு மற்றும் பிரம்மபுத்திரா ஆறு வடிநிலப் பகுதிகளில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் மேற்கு பகுதியில் கங்கை ஆறு பாய்கிறது. மேலும் இச்சாமதி ஆறு, ஜமுனா ஆறு, வைத்தியதாரி ஆறுகள் இம்மாவட்டத்தில் பாய்கிறது.
தட்ப வெப்பம்
[தொகு]வெப்ப வலையத்தில் இம்மாவட்டம் அமைந்துள்ளது. சூன் மாதம் முற்பகுதியிலிருந்து செப்டம்பர் மாதம் நடுப்பகுதி வரை மழைக்காலம் ஆகும். இம்மாவட்டத்தில் நவம்பர் மாதம் நடுவிலிருந்து பிப்ரவரி மாதம் இடைப்பட்ட காலம் வரை குளிர் நிலவுகிறது. ஆண்டு சராசரி மழையளவு 1,579 மில்லி மீட்டராகும். மே மாத கோடை கால அதிகபட்ச வெப்பம் 41 °C ஆகும். சனவரி மாத குறைந்த பட்ச வெப்பம் 10 °C நிலவுகிறது.
பொருளாதாரம்
[தொகு]இம்மாவட்ட மக்களில் பெரும்பான்மையானவர்கள் வேளாண்மை, மீன் பிடித்தல் மற்றும் பிற உழவு வேலைகளை செய்கின்றனர். இம்மாவட்டத்தின் தெற்கில் அமைந்த சுந்தரவனக்காடுகள் பகுதிகள் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியதாக உள்ளது.
மாவட்ட நிர்வாகம்
[தொகு]இம்மாவட்டம் பரக்பூர், பராசத், பசிராத், பாங்கோன் மற்றும் விதான்நகர் என ஐந்து உட்கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
பராக்பூர் உட்கோட்டம்
[தொகு]இக்கோட்டம் கஞ்சரபாரா, ஹாலிஸ்சார், நய்ஹாதி, பாட்பரா, கருலியா, பரக்பூர், வடக்கு பராக்பூர், புது பரக்பூர், டிட்டாகர், கர்தஹா, பனிஹட்டி, கமர்ஹட்டி, பராங்நகர், டம்டம், வடக்கு டம் டம் மற்றும் தெற்கு டம் டம் என பதினாறு நகராட்சி மன்றங்களும், பரக்பூர்–I, பரக்பூர்–II என இரண்டு வட்டார வளர்ச்சி அலுவலகங்களையும் கொண்டுள்ளது.
பரசாத் சதர் உட்கோட்டம்
[தொகு]பரசாத் சதர் உட்கோட்டம் பரசாத், ஹப்ரா, ராஜ்கர்ஹத் கோபால்புர், அசோக்நகர் கல்யாண்கர், மத்தியாம்கிராம் மற்றும் கோபர்தங்கா என ஆறு நகராட்சி மன்றங்களையும், பரசாத்–I, பரசாத்–II, அம்தங்கா, தேகங்கா, ஹப்ரா–I, ஹப்ரா–II மற்றும் ராஜ்கர்ஹத் என ஏழு ஊராட்சி ஒன்றியங்களை கொண்டுள்ளது.
பாங்கோன் உட்கோட்டம்
[தொகு]இந்த உட்கோட்டம் பாங்கோன் நகராட்சி மன்றம் மற்றும் பாக்தா, பாங்கோன் மற்றும் கைதா என மூன்று வட்டார வளர்ச்சி அலுவலகங்களை கொண்டுள்ளது.
பசிராத் உட்கோட்டம்
[தொகு]இந்த உட்கோட்டம் பசிராத், பதுரியா மற்றும் தாகி என மூன்று நகராட்சி மன்றங்களும், பதுரியா, பசிராத்;I, பசிராத்;II, ஹரோ, ஹஸ்னாபாத், ஹிங்கல்கஞ்ச், மினாகான், சந்தேஷ்காலி-I, சந்தேஷ்காலி-II, மற்றும் சொரூப்நகர் என பத்து ஊராட்சி ஒன்றியங்களையும் கொண்டுள்ளது.
விதான்நகர் உட்கோட்டம்
[தொகு]நகர்புறத்தை மட்டும் கொண்டுள்ள இந்த உட்கோட்டத்தில் விதான்நகர் நகராட்சி மன்றம் உள்ளது.
அரசியல்
[தொகு]சட்டமன்ற தொகுதிகள்
[தொகு]வடக்கு 24 பர்கனா மாவட்டம் இருபத்து எட்டு சட்டமன்ற தொகுதிகளை கொண்டது.[5] அவைகள்; பாக்தா சட்டமன்ற தொகுதி (பட்டியல் சமூகம்), பாங்கோன் வடக்கு சட்டமன்ற தொகுதி, கைகாதா சட்டமன்ற தொகுதி, ஹரோ சட்டமன்ற தொகுதி (பட்டியல் சமூகம்), அசோக்நகர் சட்டமன்ற தொகுதி, அம்தங்கா சட்டமன்ற தொகுதி, பரசாத் சட்டமன்ற தொகுதி, இராஜ்காட் கோபால்பூர் சட்டமன்ற தொகுதி, ராஜ்காட் சட்டமன்ற தொகுதி (பட்டியல் சமூகம்), தேகங்கா சட்டமன்ற தொகுதி, சொரூபநகர் சட்டமன்ற தொகுதி, பதுரியா சட்டமன்ற தொகுதி, பசிராத் வடக்கு சட்டமன்ற தொகுதி, ஹஸ்னாபாத் சட்டமன்ற தொகுதி, சந்தோஷ்காளி சட்டமன்ற தொகுதி (பட்டியல் சமூகம்), ஹிங்கல்கஞ்ச் (பட்டியல் சமூகம்), பிஜ்பூர் சட்டமன்ற தொகுதி, நைய்ஹட்டி சட்டமன்ற தொகுதி, பட்பரா சட்டமன்ற தொகுதி, ஜெகதல் சட்டமன்ற தொகுதி, நோவபரா சட்டமன்ற தொகுதி, டிடாகர் சட்டமன்ற தொகுதி, கர்தாஹா சட்டமன்ற தொகுதி, பனிஹட்டி சட்டமன்ற தொகுதி, கமர்ஹட்டி சட்டமன்ற தொகுதி, பரநக சட்டமன்ற தொகுதி ர், டம் டம் சட்டமன்ற தொகுதி மற்றும் பெல்கச்சியா கிழக்கு சட்டமன்ற தொகுதி ஆகும்.
மக்களவை தொகுதிகள்
[தொகு]பரசாத் மக்களவை தொகுதி, பராக்பூர் மக்களவை தொகுதி, டம்டம் மக்களவை தொகுதி மற்றும் பசிர்ஹட் மக்களவை தொகுதி என நான்கு மக்களவை தொகுதிகளை கொண்டுள்ளது.
போக்குவரத்து
[தொகு]தரைவழி
[தொகு]தேசிய நெடுஞ்சாலை 34 & தேசிய நெடுஞ்சாலை 35 மாநிலத்தின் மற்றும் நாட்டின் அனைத்து பகுதிகளையும் தரை வழியாக இணைக்கிறது.
தொடருந்து
[தொகு]இம்மாவட்ட்த் தலைமையிட நகரமான பராசத் நகரத்தை சியால்டா நகரத்துடன் இணைக்கும் மின்சார மெட்ரோ தொடருந்து இயங்குகிறது. பராசத் நகரத்திலிருந்து 22 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாநிலத் தலைநகர் கொல்கத்தாவை இணைக்கும் தொடருந்துகள் பராசத் தொடருந்து நிலையத்திலிருந்து இயங்குகிறது.[6]
விமான நிலையம்
[தொகு]இம்மாவட்டத் தலைமையிட நகரத்தின் இருபத்தி இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விமான நிலையம் நேதாஜி சுபாசு சந்திரபோசு பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும்.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 10,009,781 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 5,119,389 மற்றும் பெண்கள் 4,890,392 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 955 வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 2,445 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 84.06 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 87.61 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 80.34 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 957,973 ஆக உள்ளது.[7]
சமயம்
[தொகு]இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள்தொகை 7,352,769 ஆகவும், இசுலாமியர் மக்கள்தொகை 2,584,684 ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள்தொகை 26,933 ஆகவும், சமயம் குறிப்பிடாதவர்கள் 22,801 ஆகவும், பிற சமயத்து மக்கள்தொகை கணிசமாக உள்ளது.
கல்வி
[தொகு]இம்மாவட்டம் 3,594 ஆரம்பப் பள்ளிகள், 974 நடுநிலைப் பள்ளிகள், 204 உயர்நிலைப்பள்ளிகளும், 153 மேனிலைப் பள்ளிகளும், 237 கல்லூரிகளும், 16 தொழில்நுட்ப கல்லூரிகளும் மற்றும் இரண்டு பல்கலைக்கழகங்களும் கொண்டுள்ளது.
அரசு மருத்துவ மனைகள்
[தொகு]இம்மாவட்டம் பத்து மாவட்ட மருத்துவமனைகள், 14 உட்கோட்ட மருத்துவமனைகள், 18 அரசு பொது மருத்துவமனகள், ஒரு அரசு தொழிலாளர் நல மருத்துவ மனை மற்றும் 15 ஊராட்சி ஒன்றிய மருத்துவ மனைகள் கொண்டுள்ளது.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://censusindia.gov.in/2011-prov-results/prov_data_products_wb.html
- ↑ "Directory of District, Sub division, Panchayat Samiti/ Block and Gram Panchayats in West Bengal, March 2008". West Bengal. National Informatics Centre, India. 19 மார்ச்சு 2008. Archived from the original on 25 பெப்பிரவரி 2009. பார்க்கப்பட்ட நாள் 1 திசம்பர் 2008.
- ↑ "District at a glance". Official website of the North 24 Parganas district. Archived from the original on 2008-06-02. பார்க்கப்பட்ட நாள் 2008-12-01.
- ↑ "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
- ↑ "General election to the Legislative Assembly, 2001 – List of Parliamentary and Assembly Constituencies" (PDF). West Bengal. Election Commission of India. Archived from the original (PDF) on 2006-05-04. பார்க்கப்பட்ட நாள் 2008-11-20.
- ↑ http://indiarailinfo.com/search/sealdah-sdah-to-barasat-bt/325/0/7870
- ↑ http://www.census2011.co.in/census/district/11-north-twenty-four-parganas.html
Issues Related to Over Utilization of Ground Water, Special Reference to District-North 24 Parganas, West Bengal, India IJSR Archive Volume 4 Issue 3 March 2015: International Journal of Science and Research (IJSR) http://www.ijsr.net/archive/v4i3/SUB152284.pdf…[தொடர்பிழந்த இணைப்பு]