உள்ளடக்கத்துக்குச் செல்

கொல்கத்தா பெருநகர மேம்பாட்டுக் குழுமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொல்கத்தா பெருநகர மேம்பாட்டுக் குழுமம்

கொல்கத்தா பெருநகர மேம்பாட்டுக் குழுமத்தின் தலைமைக் கட்டிடம்
துறை மேலோட்டம்
அமைப்பு1970
வகைபெருநகர திட்டமிடல் முகமை
ஆட்சி எல்லைமேற்கு வங்காள அரசு
தலைமையகம்உன்னாயன் பவன், பிதான்நகர், கொல்கத்தா-700091
அமைச்சர்
  • பிர்ஹாத் ஹக்கீம், பொறுப்பு அமைச்சர், நகர்புற வளர்ச்சி மற்றும் நகராட்சி விவகாரங்கள் துறை
அமைப்பு தலைமை
  • கலீல் அகமது, IAS, தலைமைச் செயல் அலுவலர்
வலைத்தளம்https://kmda.wb.gov.in/

கொல்கத்தா பெருநகர மேம்பாட்டுக் குழுமம் (Kolkata Metropolitan Development Authority) (சுருக்கமாக:KMDA) கொல்கத்தா பெருநகரப் பகுதியை திட்டமிடுவதற்கும், மேம்பாட்டிற்குமான மேற்கு வங்க அரசின் சட்டபூர்வமான அமைப்பாகும். 1970ம் ஆண்டில் நிறுவபட்ட இந்த அமைப்பு நகர்புற வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி விவகாரங்களுக்கான துறையின் கீழ் இயங்குகிறது.

பணிகள்

[தொகு]

இதன் பணி பன்முகத் தன்மைகளைக் கொண்டது. கொல்கத்தா பெருநகரப் பகுதியை திட்டமிடுவதற்கும், புதிய பகுதிகளை சேர்ப்பதற்கும், பெருநகரப் பகுதியின் உட்கட்டமைப்பை பலப்படுத்துவதற்கும், தொடர்ந்த வளர்ச்சிக்காக திட்டமிடுவதற்கும், மேலும் குடிநீர், வடிகால், கழிவு மேலாண்மை போன்ற அடிப்படை சேவைகளை வழங்குகிறது. இது கொல்கத்தா பெருநகர திட்டமிடல் குழுவின் (KMPC) தொழில்நுட்ப செயலகமாகும். இந்த முக்கிய செயல்பாட்டு பகுதிகள் தவிர, பிற பொதுத்துறை துறைகள் மற்றும் முகமைகள் சார்பாக ஆலோசனை சேவைகளை வழங்குவதிலும், திட்டங்களை செயல்படுத்துவதிலும் கொல்கத்தா பெருநகர மேம்பாட்டுக் குழுமம் ஈடுபட்டுள்ளது.[1]

வரலாறு

[தொகு]

இவ்வமைப்பு இந்தியக் குடியரசுத் தலைவர் பிறப்பித்த அவசரச் சட்டத்தின் கீழ் 1970ல் நிறுவப்பட்டது. மேற்கு வங்காள நகர்புறம் மற்றும் உள்ளாட்சி (திட்டமிடம் & மேம்பாடு) சட்டம், 1979 கீழ் கொல்கத்தா பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் இயக்குனரகம் 1974ம் ஆண்டில் நிறுவப்பட்டது. [2]

கொல்கத்தா பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் நிர்வாகம்

[தொகு]

கொல்கத்தா பெருநகர வளர்ச்சிக் குழுமம் 11 உறுப்பினர் மன்றத்தைக் கொண்டது. இக்குழுவில் அரசால் நியமிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் மற்றும் அரசு அதிகாரிகளும் உள்ளனர். மேற்கு வஙக நகர்புற வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி விவகாரங்களுக்கான அமைச்சர் இக்குழுவின் அலுவல்சாரா தலைவராக செயல்படுவர்.[1]

கொல்கத்தா பெருநகர குழுமப் பகுதிகள்

[தொகு]
அதிகார வரம்பு
உள்ளாட்சி அமைப்புகள் பெயர் மொத்தம்
மாநகராட்சிகள் கொல்கத்தா மாநகராட்சி, பிதான்நகர் மாநகராட்சி, ஹவுரா மாநகராட்சி, சந்தன்நகர் மாநகராட்சி 4
நகராட்சிகள்
1. வடக்கு 24 பர்கனா மாவட்டம்
பராநகர், பராசத், பரக்பூர், பட்பாரா, டம் டம், கருளியா, ஹலிசாகர், கமர்ஹட்டி, கஞ்சரபரா, கார்தா, மத்தியகிராம், நய்ஹட்டி, புது பரக்பூர், வடக்கு பரக்பூர், வடக்கு டம் டம், பனிஹட்டி, தெற்கு டம் டம், டிட்டாகர்
2. தெற்கு 24 பர்கானா மாவட்டம்
பரூய்பூர், பட்ஜ் பட்ஜ், ஜெய்நகர் மஜில்பூர், மகேஷ்தலா, புஜாலி, ராஜ்பூர் சோனார்பூர், நரேந்திரபூர்
3. நதியா மாவட்டம்
கயஷ்பூர், கல்யாணி
4. ஹவுரா மாவட்டம்
உலுபெரியா பள்ளி
5. ஹூக்ளி மாவட்டம்
கூக்ளி-சூச்சுரா, வைத்தியபதி, பத்ரேஸ்வர், பன்ஸ்பெரியா, சம்ப்தனி, தன்குனி, கோன்நகர், ரிஷ்ரா, ஸ்ரீராம்பூர் செராம்பூர் உத்தர்பாரா கோட்டுருங்
37

குறிப்பிடத்தக்க திட்டங்கள்

[தொகு]
மேம்பாடு இடம் தொடங்கிய நாள் முடிவடைந்த நாள் குறிப்புகள்
பதுலி மிதக்கும் சந்தை பதுலி 2018 [3]
வைஷ்ணவ்கத்தா பதுலி நகரியம் [4] கரியா [5]
பேடிபாரா சுரங்கப்பாதை தெற்கு டம் டம்
தட்சனேஸ்வர் வான் நடைபாதை தட்சினேஸ்வரம் 2015 2018[6] [7]
கொல்கத்தா மையப் பேருந்து அமைப்பு உல்டாங்கா - கிழக்கு பெருநகர புறவழிச்சாலை - காரியா 2011 செயல்பாட்டில் [8]
கொல்கத்தா கண் ஹூக்ளி ஆற்றின் முன்பகுதி 2011 துவக்கப்படவில்லை [9]
கொல்கத்தா மேற்கு பன்னாட்டு நகரம் ஹவுரா 2006 செயல்பாட்டில் உள்ளது
கொல்கத்தா மில்லேனியம் பூங்கா ஸ்டிரண்ட் சாலை 1999 [10]
நஸ்ருல் மன்சா இரவீந்திர சரோவர் 1980 [11]
பனிஹட்டி படகுத் துறை பனிஹட்டி 2014 [12]
மா பறக்கும் பாலம் [13] இ. எம். புறவழிச்சாலலை - பூங்கா வட்டம் 2010 2015 [14]
வெள்ள நீர் வடிகால் அமைப்பு டம் டம் [15]
மேற்கு வங்காள டெலி அகாதமி பருய்பூர் 2022 [16]

இதனையும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "KMDA - About Us". Kolkata Metropolitan Development Authority. Archived from the original on 2016-03-09. பார்க்கப்பட்ட நாள் 2023-07-20.
  2. "Kolkata Metropolitan Area". KMA Map, Annual Report 2011. Kolkata Metropolitan Development Authority (KMDA). Archived from the original on 2019-08-11. பார்க்கப்பட்ட நாள் 2023-07-20.
  3. "First day, first show: Floating mart a hit". Times of India. 25 Jan 2018. https://timesofindia.indiatimes.com/city/kolkata/first-day-first-show-floating-mart-a-hit/articleshow/62643284.cms. 
  4. Baishnabghata Patuli Township
  5. "7 govt agencies together own a 5th of Kolkata | Kolkata News - Times of India" (in en). The Times of India. 5 November 2017. https://m.timesofindia.com/city/kolkata/7-govt-agencies-together-own-a-5th-of-kolkata/articleshow/61513442.cms. 
  6. "CM Mamata Banerjee to open Dakshineswar skywalk on November 5". Times of India. 26 October 2018. https://timesofindia.indiatimes.com/city/kolkata/cm-mamata-banerjee-to-open-dakshineswar-skywalk-on-november-5/articleshow/66373575.cms. 
  7. "Skywalk boon for devotees". The Telegraph. 23 Mar 2018 இம் மூலத்தில் இருந்து 20 May 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180520123849/https://www.telegraphindia.com/calcutta/skywalk-boon-for-devotees-217823. 
  8. "Fresh blueprint for rapid bus commute". Times of India. 15 Jan 2010. http://epaper.timesofindia.com/Repository/getFiles.asp?Style=OliveXLib:LowLevelEntityToPrint_TOINEW&Type=text/html&Locale=english-skin-custom&Path=TOIKM/2010/01/15&ID=Ar00201. 
  9. "At 135 metres, Kolkata to stare London in the eye". Times of India. 30 Nov 2017. https://timesofindia.indiatimes.com/city/kolkata/at-135-metres-kolkata-to-stare-london-in-the-eye/articleshow/61855559.cms. 
  10. Adhikary, Srabani (30 September 2020). "দর্শকদের কাছে ফের আকর্ষণীয় করে তুলতে ফের সাজবে মিলেনিয়াম পার্ক" (in bn). EI Samay. https://eisamay.indiatimes.com/lifestyle/news-on-travel/kolkata-millennium-park-will-renovated/articleshow/78397759.cms. 
  11. "AC makeover for Nazrul Mancha". Times of India. 6 Nov 2013. https://timesofindia.indiatimes.com/city/kolkata/AC-makeover-for-Nazrul-Mancha/articleshow/25281030.cms. 
  12. Mullick, Soumyadip (12 September 2019). "Construction of intake jetty might lead to ships getting stuck". The Statesman. https://www.thestatesman.com/bengal/construction-intake-jetty-might-lead-ships-getting-stuck-1502799397.html. 
  13. Maa Flyover
  14. "Kolkata to get state's longest flyover linking Howrah with EM Bypass". Hindustan Times. 7 October 2015. http://www.hindustantimes.com/kolkata/kolkata-to-get-state-s-longest-flyover-linking-howrah-with-em-bypass/story-woa8zuEzUUFRIykcWMXwFP.html. 
  15. "Storm Water Drainage System" (PDF). WB Department of Municipal Affairs. Archived from the original (PDF) on 2018-02-28. பார்க்கப்பட்ட நாள் 2023-07-20.
  16. "Tele Academy Complex: টেলিভিশন অনেকের প্রিয় বন্ধু, পশ্চিমবঙ্গ টেলি আকাদেমি কমপ্লেক্স উদ্বোধন করে বললেন মমতা" (in bn). www.anandabazar.com (Anandabazar Patrika). https://www.anandabazar.com/entertainment/mamata-banerjee-virtually-inaugurates-tele-academy-complex-in-baruipur-for-shooting-dgtl/cid/1333000.