இந்திய கால்பந்து சங்கம்
சுருக்கம் | ஐஎஃப்ஏ (IFA) |
---|---|
உருவாக்கம் | 1893 |
வகை | விளையாட்டு |
நோக்கம் | கால்பந்து |
தலைமையகம் | கொல்கத்தா, மேற்கு வங்கம், இந்தியா |
ஆள்கூறுகள் | 22°34′11″N 88°22′11″E / 22.56972°N 88.36972°E |
சேவை பகுதி | மேற்கு வங்கம், இந்தியா |
உறுப்பினர்கள் | அனைத்து இந்திய கால்பந்துக் கூட்டமைப்பு (AIFF) |
ஆட்சி மொழி | வங்காளம், இந்தி, ஆங்கிலம் |
தலைவர் | எஸ்.பி. கங்குலி |
துணைத் தலைவர் | சுப்ரதா தத்தா Biswadeep Gupta Moinuddin Bin Moksud |
சார்புகள் | அனைத்து இந்திய கால்பந்துக் கூட்டமைப்பு (AIFF) |
வலைத்தளம் | the-ifa |
Country: | India |
---|---|
Founded: | 1893 |
President: | S.B. Ganguly |
Vice-President: | Subrata Dutta,Biswadeep Gupta, Md. Moinuddin Bin Moksud |
Hony. Secretary: | Utpal Kumar Ganguli |
இந்திய கால்பந்து சங்கம் (Indian Football Association-IFA, வங்காள மொழி : ভারতীয় ফুটবল এসোসিয়েশন) என்பது மேற்கு வங்க மாநிலத்தில், இந்தியா, சங்க கால்பந்துப் போட்டிகளை கட்டுப்படுத்தும், நிர்வகிக்கும் அமைப்பாகும். இதுவே இந்தியாவின் மிகப் பழமையான கால்பந்து சங்கமாகும். இது 1893-இல் ஆரம்பிக்கப்பட்டது. இதன் நிறுவனர்களில் அப்போதைய இங்கிலாந்து தேசிய கால்பந்து அணி வீரரான எல்ஃபின்ஸ்டோன் ஜாக்சனும் ஒருவராவார்.[1] மிக்சிகன் மாநில பல்கலைக்கழகத்தின் ஆப்பிரிக்க வரலாற்றுப் பேராசிரியரான பீட்டர் அலெகி என்பாரின் கூற்றுப்படி, வெள்ளையரல்லாதோர் வாழும் நாடுகளில் நிறுவப்பட்ட கால்பந்துக்கான முதல் கூட்டமைப்பாகும். [2]
பெயருக்கு முற்றிலும் மாறாக இவ்வமைப்பு இந்தியாவில் நடைபெறும் கால்பந்து போட்டிகளை நிர்வகிப்பதில்லை, அப்பணியை அனைத்து இந்திய கால்பந்துக் கூட்டமைப்பு செய்கிறது. ஆனாலும், அனைத்து இந்திய கால்பந்துக் கூட்டமைப்பு நிறுவப்படுவதற்கு முன்பு இவ்வமைப்பே இந்தியாவில் கால்பந்துப் போட்டிகளை நிர்வகித்தது. ஏனெனில், அப்போது இவ்வமைப்பு ஆங்கிலேயர்களால் நிர்வகிக்கப்பட்டது மற்றும் இங்கிலாந்தின் கால்பந்து சங்கத்தோடு இணைந்திருந்தது.
1937-இல் அனைத்து இந்திய கால்பந்துக் கூட்டமைப்பு நிறுவப்பட்டதில் முக்கியப் பங்காற்றியது.
இவ்வமைப்பு கல்கத்தா கால்பந்துக் கூட்டிணைவு மற்றும் இந்திய கால்பந்து சங்கக் கேடயம் போன்ற போட்டிகளை நடத்துகிறது.