ஜார்கிராம் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜார்கிராம் மாவட்டம்
{{{Local}}}
ஜார்கிராம்மாவட்டத்தின் இடஅமைவு மேற்கு வங்காளம்
மாநிலம்மேற்கு வங்காளம், இந்தியா
நிர்வாக பிரிவுகள்வர்தமான் கோட்டம்
தலைமையகம்ஜார்கிராம்
பரப்பு3,037.64 km2 (1,172.84 sq mi)
மக்கட்தொகை1,136,548 (2011)
நகர்ப்புற மக்கட்தொகை61,712
படிப்பறிவு70.92%
மக்களவைத்தொகுதிகள்ஜார்கிராம் மக்களவைத் தொகுதி
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கைஜார்கிராம், கோபிபல்லவபூர், நயாகிராம், பின்பூர் சட்டமன்றத் தொகுதிகள்
முதன்மை நெடுஞ்சாலைகள்ஆசியன் நெடுஞ்சாலை எண் 46, மாநில நெடுஞ்சாலை எண் 5 & 9
அதிகாரப்பூர்வ இணையத்தளம்
மேற்கு வங்காளத்தின் தெற்கில் அமைந்த ஜார்கிராம் மாவட்டம் - எண் 23

ஜார்கிராம் மாவட்டம் (Jhargram district) (வங்காளம்: ঝাড়গ্রাম জেলা) இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் வர்த்தமான் கோட்டத்தில் உள்ளது. மேற்கு வங்காள மாநிலத்தின் 23 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் தெற்கில் சுவர்ணரேகா ஆறு பாய்கிது.[1] இதன் நிர்வாகத் தலைமையிட நகரம் ஜார்கிராம் ஆகும்.

நிறுவப்பட்ட நாள்[தொகு]

மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தின் தென்மேற்குப் பகுதிகளைப் பிரித்து, 4 ஏப்ரல் 2017 அன்று, மேற்கு வங்காளத்தின் 23வது மாவட்டமாக ஜார்கிராம் மாவட்டம் நிறுவப்பட்டது.[2] இம்மாவட்டத்தின் தலைமையிட நகரம் ஜார்கிராம் ஆகும்.

புவியியல்[தொகு]

சோட்டா நாக்பூர் மேட்டு நிலத்தின் அடிவாரப் பகுதியில் கற்களும், மண்ணும் கொண்ட வளமற்றப் பகுதியில் ஜார்கிராம் மாவட்டம் உள்ளது.[3]

மக்கள் தொகையியல்[தொகு]

3,037.64 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட ஜார்கிராம் மாவட்டத்தின், 2011ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மக்கள் தொகை 11,36,548 ஆக உள்ளது. இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகையில் 96.52% மக்கள் கிராமப்புறங்களிலும், 3.48% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர்.

ஜார்கிராம் மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகையில் 20.11% பட்டியல் சமூகத்தினரும், 29.37% பட்டியல் பழங்குடி மக்களும் வாழ்கின்றனர்.[4]

மாவட்ட நிர்வாகம்[தொகு]

ஜார்கிராம் உட்கோட்டத்தை மட்டுமே கொண்ட ஜார்கிராம் மாவட்டத்தில் ஜார்கிராம் நகராட்சி, பின்பூர்;I, பின்பூர்;II, ஜாம்போனி, ஜார்கிராம், கோபிவல்லபபூர்;I, கோபிவல்லபபூர்;II, நயாகிராம் மற்றும் சங்க்ரயில் என 8 ஊராட்சி ஒன்றியங்களும் [5] 2513 கிராமங்களும், 79 கிராமப் பஞ்சாயத்துகளும் கொண்டது. இம்மாவட்டத்தின் ஒரே நகரமான ஜார்கிராம், ஒரு நகராட்சியாகும்.[6][5]

ஜார்கிராம் அரண்மனை

போக்குவரத்து[தொகு]

தொடருந்துகள்[தொகு]

கரக்பூர்- ஜம்சேத்பூர் - ஆசான்சோல் இருப்புப் பாதை வழித்தடத்தில் ஜார்கிராம் தொடருந்து நிலையம் அமைந்துள்ளது. ஹவுரா - நாக்பூர் - மும்பை செல்லும் தொடருந்துகள் ஜார்கிராம் தொடருந்து நிலையம் வழியாகச் செல்கிறது. ஜார்கிராம் தொடருந்து நிலையம் ஹவுரா/கொல்கத்தா (155 km), கரக்பூர் (39 km), ஆசான்சோல், டாடா நகர் (96 km), ராஞ்சி, தன்பாத், ரூர்கேலா, புவனேஸ்வர், புரி, கட்டக், பிலாய், தில்லி மற்றும் மும்பை நகரங்ளுடன் இணைக்கிறது.

சாலைகள்[தொகு]

ஆசியான் நெடுஞ்சாலை எண் 46 ஜார்கிராம் நகரத்தின் வழியாகச் செல்கிறது. மேலும் தேசிய நெடுஞ்சாலை எண் 6 மற்றும் மாநில நெடுஞ்சாலை எண் 9 மற்றும் 5, ஜார்கிராம் நகரத்துடன் மிட்னாப்பூர், கரக்பூர், துர்க்காப்பூர், ஆசான்சோல், பாங்குரா, புருலியா, ஹால்டியா, கொல்கத்தா, ஹவுரா நகரங்களை இணைக்கிறது.

மழை பொழிவு[தொகு]

தென்மேறு பருவ மழைக் காலமான சூலை முதல் செப்படம்பர் மாதங்களில் நன்கு மழை பொழிகிறது. ஜார்கிராம் மாவட்டத்தின் ஆண்டு சராசாரி மழைப் பொழிவு 1400 மில்லி மீட்டராகும்.

தட்பவெப்ப நிலைத் தகவல், ஜார்கிராம், இந்தியா
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 16
(61)
21
(70)
32
(90)
38
(100)
39
(102)
36
(97)
30
(86)
30
(86)
30
(86)
31
(88)
19
(66)
17
(63)
30
(86)
தாழ் சராசரி °C (°F) 5
(41)
10
(50)
21
(70)
25
(77)
27
(81)
27
(81)
23
(73)
23
(73)
22
(72)
21
(70)
7
(45)
6
(43)
22
(72)
பொழிவு mm (inches) 9.8
(0.386)
8.3
(0.327)
19.4
(0.764)
57.7
(2.272)
74.9
(2.949)
172.8
(6.803)
334.9
(13.185)
332.7
(13.098)
185.8
(7.315)
104.5
(4.114)
8.7
(0.343)
5.9
(0.232)
1,007.4
(39.661)
ஆதாரம்: Weatherbase[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2015-09-28 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-03-01 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Jhargram to be state's 22nd district on April 4". Millennium Post. 4 April 2017 அன்று பார்க்கப்பட்டது.
  3. "District Human Development Report: Paschim Medinipur" (PDF). page 4 (About Paschim Medinipur), page 26 (Predominant Soil), pages 265- 268 (Identification of Flood prone areas, Names of drought prone blocks). Development and Planning Department, Government of West Bengal, 2011. 29 March 2017 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2 January 2017 அன்று பார்க்கப்பட்டது.
  4. "District Statistical Handbook 2014 Paschim Medinipur". Table 2.2, 2.2(b), 2.9. Department of Statistics and Programme Implementation, Government of West Bengal. 29 July 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. 29 September 2016 அன்று பார்க்கப்பட்டது.
  5. 5.0 5.1 "Directory of District, Sub division, Panchayat Samiti/ Block and Gram Panchayats in West Bengal, March 2008". West Bengal. National Informatics Centre, India. 2008-03-19. 25 February 2009 அன்று மூலம் பரணிடப்பட்டது. 23 October 2016 அன்று பார்க்கப்பட்டது.
  6. "District Statistical Handbook 2014 Paschim Medinipur". Table 2.1. Department of Statistics and Programme Implementation, Government of West Bengal. 29 July 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. 23 October 2016 அன்று பார்க்கப்பட்டது.
  7. "Weatherbase: Historical Weather for Jhargram, India". Weatherbase. 1 April 2010 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜார்கிராம்_மாவட்டம்&oldid=3779566" இருந்து மீள்விக்கப்பட்டது