பராசத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பராசத் இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள வடக்கு 24 பர்கானா மாவட்டத்தின் தலைமையகம் மற்றும் நகராட்சி ஆகும்.. இது கொல்கத்தாவிற்கு வடகிழக்கே 23 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது கல்கத்தா பெருநகர மேம்பாட்டு ஆணையத்தின் ( கே.எம்.டி.ஏ ) கீழ் உள்ள ஒரு பகுதியாகும். நகரத்தை மையமாகக் கொண்ட ஒரு துணைப் பிரிவின் பெயரும் பராசத் ஆகும். இந்த நகரம் முக்கிய ரயில் மற்றும் சாலை சந்திப்பாகவும், பிராந்திய போக்குவரத்து மையமாகவும் உள்ளது.

புவியியல்[தொகு]

பராசாத் கிழக்கு இந்தியாவின் கங்கை கழிமுகத்தில் அமைந்துள்ளது. பெருநகரம் பங்களாதேஷ் எல்லை நகரத்திலிருந்து 70–80 கிலோமீட்டர் (43-50 மைல்) தொலைவில் உள்ளது. இதன் சராசரி உயரம் 11 மீட்டர் (36 அடி) ஆகும். கங்கை நதியானது மேற்கில் சுமார் 15 கிலோமீட்டர் (9.3 மைல்) தூரத்தில் அமைந்துள்ளது. இந்த நகரம் கங்கை சமவெளியில் அமைந்துள்ளது.

காலநிலை[தொகு]

பராசத்தில் மேற்கு வங்காளத்தின் ஒத்த வெப்பமண்டல காலநிலை நிலவுகின்றது. இப்பகுதி சூன் தொடக்கத்தில் இருந்து செப்டம்பர் நடுப்பகுதி வரை பருவமழையை அனுபவிக்கிறது. குளிர்கால (நவம்பர் முதல் பிப்ரவரி நடுப்பகுதி வரை) காலநிலை வறண்டதாகவும், கோடையில் ஈரப்பதமாகவும் இருக்கும்.[1]

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கட் தொகை கணக்கெடுப்பின்படி, பராசத்தின் மொத்த மக்கட் தொகை 278,235 ஆகும். இதில் 140,882 (51%) ஆண்களும், 137,613 (49%) பெண்களும் அடங்குவர். மொத்த மக்கட் தொகையில் 22,605 பேர் ஆறு வயதுக்குட்பட்டவர்கள். ஆறு வயதுக்கு மேற்பட்ட சனத்தொகையின் கல்வியறிவு விகிதம் 89.69 சதவீதமாக இருந்தது. (229,279 பேர்).[2]

2001 ஆம் ஆண்டில் நகரத்தின் மக்கட் தொகை 237,783 ஆக இருந்தது. அந்த ஆண்டின் கல்வியறிவு விகிதம் 77 சதவீதமாக இருந்தது. இது தேசிய சராசரியான 59.5 சதவீதத்தை விட அதிகமாகும். கல்வியறிவு பெற்ற மக்களில், 54 சதவீதம் ஆண்களும், 46 சதவீதம் பெண்களும் காணப்பட்டனர்.[3] 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் கல்கத்தா நகர ஒருங்கிணைப்பின் ஒரு பகுதியாக பராசத் இருந்தது.[4]

பொருளாதாரம்[தொகு]

பருத்தி நெசவு என்பது பராசத்தின் முக்கிய தொழிலாகும். மேலும் இந்த நகரம் அரிசி, பருப்பு வகைகள், கரும்பு, உருளைக்கிழங்கு மற்றும் தேங்காய்களுக்கான வர்த்தக மையமாகும்.[5]

நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பராசத்துக்கு தினமும் சுமார் 32,00,000 பேர் பயணம் செய்கிறார்கள். நகரத்தின் சீல்தா-பங்கான் பிரிவில் உள்ள 24 நிலையங்களில் இருந்து ஐம்பத்தி எட்டு ரயில்கள் பயணிகளை கொண்டு செல்கின்றன. மேலும் 32 ரயில்கள் சீடா-ஹஸ்னாபாத் பிரிவில் உள்ள 30 நிலையங்களில் இருந்து பயணிகளை ஏற்றிச் செல்கின்றன.[6]

போக்குவரத்து[தொகு]

சாலை[தொகு]

பராசத் கொல்கத்தா, வட வங்கம், வங்காளதேசம் மற்றும் பிற மேற்கு வங்க நகரங்களுக்கு சாலை வழியாக இணைக்கப்பட்டுள்ளது. பல வழிகள் பேருந்து முனையத்திலிருந்து உருவாகின்றன. தேசிய நெடுஞ்சாலைகள் 24 மற்றும் 35 மற்றும் மாநில நெடுஞ்சாலை 2 நகரம் வழியாக ஓடுகின்றன.

ரயில்[தொகு]

இந்த நகரம் ரயில் மூலம் சீல்டா , போங்கான் மற்றும் பசிர்ஹாட் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. பராசாத் சீல்தா - பங்கான் கிளை பாதையில் உள்ள சீல்தா ரயில் நிலையத்திலிருந்து 22 கி.மீ தூரத்தில் உள்ளது. பராசத் சந்தி என்பது போங்கான் பாதையில் (வடக்கு பிரிவு) நகரத்தின் முக்கிய இரயில் நிலையமாகும்.[7]

விமானம்[தொகு]

பராசத் சுமார் 11 கி.மீ தூரத்தில் உள்ள நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தால் சேவை செய்யப்படுகிறது.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பராசத்&oldid=3587455" இருந்து மீள்விக்கப்பட்டது