பராநகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பராநகர் அல்லது பரநாகூர் என்பது இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்தின் வடக்கு 24 பர்கானா மாவட்டத்தின் ஒரு நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இந்த நகரம் கொல்கத்தாவுக்கு அருகில் உள்ளது. மேலும் கொல்கத்தா பெருநகர மேம்பாட்டு ஆணையம் (கே.எம்.டி.ஏ) உள்ளடக்கிய பகுதியின் ஒரு பகுதியாகும்.[1]

இந் நகரம் புள்ளிவிவரங்கள், இயற்கை அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகியவற்றின் ஆராய்ச்சி, கற்பித்தல் மற்றும் பயன்பாடு ஆகியவற்றில் அர்ப்பணிக்கப்பட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிறுவனமான இந்திய புள்ளிவிவர நிறுவனத்தின் தாயகமாகும்.[2] பரனகூர் ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரம உயர்நிலைப்பள்ளி பராநகர் மற்றும் வடக்கு 24 பர்கானாவில் உள்ள பழமையான மற்றும் புகழ்பெற்ற பள்ளிகளில் ஒன்றாகும்.[3]

வேளாண்மை மற்றும் தொழிற்துறை இயந்திரங்கள், இரசாயனங்கள், ஆமணக்கு எண்ணெய் என்பவற்றை தயாரிக்குப் ஒரு முக்கிய தொழிற்துறை மையமாக பராநகர் திகழ்கின்றது. இங்கு ஏராளமான பருத்தி பதப்படுத்தும் நிறுவனங்களும் உள்ளன.

வரலாறு[தொகு]

பராநகர் நகராட்சி 1869 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இது இந்தியாவின் பழமையான நகராட்சிகளில் ஒன்றாகும்.[4] பதினேழாம் நூற்றாண்டில் இடச்சுக்காரர்களின் வீடுகள் இங்கிருந்தன. 1676 ஆம் ஆண்டில் இப்பகுதிக்கு விஜயம் செய்த ஸ்ட்ரெய்ன்ஷாம் மாஸ்டர் ஒரு வருடத்திற்கு சுமார் 3,000 பன்றிகள் கொல்லப்பட்டு ஏற்றுமதிக்கு உப்பு சேர்க்கப்படும் பன்றி தொழிற்சாலையைப் பற்றி பேசினார். பின்னர் இந் நகரம் விரிவான சணல் வர்த்தகத்திற்கான மையமாக மாறியது. இங்கு சாக்குகள் உற்பத்தி செய்யப்பட்டன.[5]

குட்டிகாட்டில் (பரநகர்), இன்னும் இடச்சு வணிகர்களின் பழைய வீடுகள், விடுதிகள் காணப்படுகின்றன.

புவியியல்[தொகு]

பராநகர் 22.64 ° வடக்கு 88.37 ° கிழக்கு என்ற புவியியல் இருப்பிடத்தில் அமைந்துள்ளது.[6] இது சராசரியாக 12 மீட்டர் (39 அடி) உயரத்தைக் கொண்டுள்ளது. மேலும் இது ஹூக்லி ஆற்றின் கிழக்கே அமைந்துள்ளது. பராநகர் நகராட்சி பகுதி சிந்திக்கும் மோர் டன்லப்பிற்கும் இடையில் உள்ளது. பரநகரில் பிரமணிக் காட், குட்டிகாட், தக்ஷினேஷ்வர் காட், காஞ்சர் மந்திர் அல்லது கண்ணாடி கோயில் காட் போன்ற பல கங்கை மலைத்தொடர்கள் உள்ளன.

பாராக்பூர் துணைப்பிரிவின் மக்கள் தொகையில் 96% வீதமானோர் நகர்ப்புறங்களில் வாழ்கின்றனர். 2011 ஆம் ஆண்டில் இது ஒரு சதுர கிலோ மீற்றருக்கு 10,967 மக்கள் அடர்த்தியைக் கொண்டிருந்தது. துணைப்பிரிவில் 16 நகராட்சிகள் மற்றும் 24 மக்கட் தொகை கணக்கெடுப்பு நகரங்கள் உள்ளன.[7]

காலநிலை[தொகு]

ஏப்ரல் முதல் சூன் வரையிலான கோடைக் காலத்தில் அதிகபட்ச வெப்பநிலை 35 °C (95 °F) ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 °C (79 °F) ஆகவும் இருக்கும். சூன் முதல் செப்டம்பர் நடுப்பகுதி வரை பருவமழைக் காலமாகும். வானிலை மிகவும் இனிமையானது. கோடை மற்றும் குளிர்காலம் மிதமானவை ஆகும். கோடைகாலத்தில் ஈரப்பதத்தின் அளவு அதிகரிக்கிறது.[6]

புள்ளிவிபரங்கள்[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கட் தொகை கணக்கெடுப்பின்படி பரநகரில் மொத்த மக்கட் தொகை 245,213 ஆகும். அவர்களில் 126,187 (51%) ஆண்களும் மற்றும் 119,026 (49%) பெண்களும் ஆவார்கள். ஆறு வயதுக்குக் குறைவானர்களின் எண்ணிக்கை 16,825 ஆக இருந்தது. பரநகரில் மொத்த கல்வியறிவாளர்களின் எண்ணிக்கை 208,779 ஆகும். ஆண்களின் கல்வியறிவு விகிதம் 93.69% வீதமாகவும், பெண் கல்வியறிவு விகிதம் 89% வீதமாகவும் காணப்படுகின்றது.[8]

2001 ஆம் ஆண்டு இந்திய மக்கட் தொகை கணக்கெடுப்பின்படி[9] பரநகர் 250,615 என்ற மக்கட் தொகையைக் கொண்டிருந்தது. ஆண்கள் 53% வீதமாகவும், பெண்கள் 47% வீதமாகவும் இருந்தனர். சராசரி கல்வியறிவு விகிதம் 82% ஆக இருந்தது. இது தேசிய சராசரியான 59.5% ஐ விட அதிகமாகும். ஆண்களின் எழுத்தறிவு விகிதம் 55% ஆகவும், பெண்களின் எழுத்தறிவு விகிதம் 45% ஆகவும் இருந்தது. மொத்த மக்கட் தொகையில் 8% வீதமானோர் ஆறு வயதிற்கு உட்பட்டவர்கள் ஆவார்கள்.

பொருளாதாரம்[தொகு]

பரநகர் சணல் ஆலையிற்கு புகழ் பெற்றது. சணல் (கோர்கரஸ் எஸ்பிபி) இலிருந்து பைகள, துணிகள், தரைவிரிப்புகள் மற்றும் சாக்குகள் இங்கு தயாரிக்கப்படுகின்றன. இது பழமையான சணல் ஆலைகளில் ஒன்றாகும்.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பராநகர்&oldid=3219856" இருந்து மீள்விக்கப்பட்டது