உள்ளடக்கத்துக்குச் செல்

ஆண்டிமனி முப்புரோமைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆண்டிமனி முப்புரோமைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
டிரைபுரோமோசிடிபான்
வேறு பெயர்கள்
ஆண்டிமனி(III)புரோமைடு
இனங்காட்டிகள்
7789-61-9 N
ChemSpider 23017 Y
EC number 232-179-8
InChI
  • InChI=1S/3BrH.Sb/h3*1H;/q;;;+3/p-3 Y
    Key: RPJGYLSSECYURW-UHFFFAOYSA-K Y
  • InChI=1/3BrH.Sb.3H/h3*1H;;;;/q;;;+3;;;/p-3/r3BrH.H3Sb/h3*1H;1H3/q;;;+3/p-3
    Key: BJUAQAQGPWXYGO-DAEPFFQNAU
  • InChI=1/3BrH.Sb/h3*1H;/q;;;+3/p-3
    Key: RPJGYLSSECYURW-DFZHHIFOAI
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 24615
வே.ந.வி.ப எண் CC4400000
  • [Br-].[Br-].[Br-].[SbH3+3]
  • Br[Sb](Br)Br
பண்புகள்
SbBr3
வாய்ப்பாட்டு எடை 361.472 கி/மோல்
தோற்றம் நிறமற்றதில் இருந்து மஞ்சள் படிகங்கள்
நீருறிஞ்சி
அடர்த்தி 4.35 கி/செ.மீ3
உருகுநிலை 96.6 °C (205.9 °F; 369.8 K)
கொதிநிலை 288 °C (550 °F; 561 K)
வினைபுரியும்
கரைதிறன் நீர்த்த HCl, HBr, CS2, அசிட்டோன், பென்சீன், குளோரோஃபார்ம், அமோனியா, ஆல்ககால் ஆகியவற்றில் கரையும்.
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.74
இருமுனைத் திருப்புமை (Dipole moment) 2.47 D
கட்டமைப்பு
படிக அமைப்பு சாய்சதுரம், oP16, இடக்குழு = முதன்மை எண். 62 (β வடிவம்)
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
-259 கி.ஜூ/மோல்
வெப்பக் கொண்மை, C 96 ஜூ/மோல் K
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு பட்டியலிடப்படவில்லை
Lethal dose or concentration (LD, LC):
7000 மி.கி/கி.கி
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

ஆண்டிமனி முப்புரோமைடு (Antimony tribromide ) என்பது SbBr3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மமாகும். இச்சேர்மத்தில் ஆண்டிமனி +3 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் உள்ளது.

தயாரிப்பு

[தொகு]

ஆண்டிமனியை தனிம புரோமினுடன் வினைபுரியச் செய்வதால் அல்லது ஆண்டிமனி மூவாக்சைடை, ஐதரோ புரோமிக் அமிலத்துடன் வினைப்புரியச் செய்வதால் ஆண்டிமனி முப்புரோமைடைத் தயாரிக்க முடியும். மாறாக ஆண்டிமனி சல்பைடு மற்றும் ஆண்டிமனி மூவாக்சைடு சேர்ந்த கலவையில் 250 பாகை செல்சியசு வெப்பநிலையில் புரோமினைச் செலுத்தினாலும் இதைத் தயாரிக்க முடியும்.

பயன்கள்

[தொகு]

பாலிஎத்திலீன் போன்ற பல்லுறுப்பிகளுடன் இச்சேர்மத்தைச் சேர்த்து தீத்தடுப்பானாகப் பயன்படுத்தலாம்[1]. பிற ஆண்டிமனி சேர்மங்கள் தயாரிக்க ஒரு மூலப்பொருளாகவும் இது பயன்படுகிறது. வேதியியல் பகுப்பாய்வுகளில் நிறம் நிறுத்தியாகவும், மற்றும் சாயத் தொழிலிலும் இது பயன்படுகிறது[2].

வேதிவினைகள்

[தொகு]

இரண்டு வகையான படிக அமைப்புகளில் ஆண்டிமனி முப்புரோமைடு காணப்படுகிறது. இரண்டு அமைப்புகளும் சாய்சதுர சமச்சீரைக் கொண்டுள்ளன. இளஞ்சூடான கார்பன் இருசல்பைடு கரைசலில் கலந்துள்ள ஆண்டிமனி முப்புரோமைடு விரைவாகக் குளிர்விக்கப்பட்டால் அது α-SbBr3 போன்ற ஊசிவடிவமாக படிகமாகிறது. பின்னர், மெல்லப் படிப்படியாக நிலைப்புத்தன்மை மிக்க β வடிவம்[3] பெறுகிறது. ஆண்டிமனி முப்புரோமைடு தண்ணீரில் நீராற்பகுப்பு அடைந்து ஐதரோ புரோமிக் அமிலம் மற்றும் ஆண்டிமனி மூவாக்சைடாக மாறுகிறது.

2 SbBr3 + 3 H2O → Sb2O3 + 6 HBr

மேற்கோள்கள்

[தொகு]
  1. Yang, Y. P.; D. G. Brewer; J. E. S. Venart (1991). "A study of the synergistic action of antimony oxide in fire-retardant polyethylene". Fire and Materials 15: 37. doi:10.1002/fam.810150107. 
  2. "Antimony tribromide" http://cameochemicals.noaa.gov/chemical/2501
  3. Okuda, Tsutomu; Terao, Hiromitsu; Ege, Osamu; Negita, Hisao (1970). "Structural Studies of Antimony Tribromide and Its Molecular Complex with Benzene by Means of the 81Br Nuclear Quadrupole Resonance". Bulletin of the Chemical Society of Japan 43 (8): 2398. doi:10.1246/bcsj.43.2398. https://archive.org/details/sim_bulletin-of-the-chemical-society-of-japan_1970-08_43_8/page/2398. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்டிமனி_முப்புரோமைடு&oldid=3946943" இலிருந்து மீள்விக்கப்பட்டது